சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன பழக்கங்க இது.. ரொம்ப தப்பு.. சட்டென முகம் மாறிய கனிமொழி.. வந்ததே கோபம்.. இதுதான் "சுயமரியாதை"!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக எம்பி கனிமொழி கோபமாக பேசும் வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

ஒருவழியாக திமுக உட்கட்சி தேர்தலும் முடிவிற்கு வந்துள்ளது. ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. அதேபோல் இன்று தலைவர், பொருளாளர். பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்காக நேற்று சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழி எம்.பியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தார்.

ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்! களைகட்டும் கனிமொழி இல்லம்! குவியும் விசிட்டர்கள்! ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்! களைகட்டும் கனிமொழி இல்லம்! குவியும் விசிட்டர்கள்!

கனிமொழி

கனிமொழி

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கனிமொழிக்கு இந்த பதவி கிடைத்துள்ளது. இந்த நிலையில் கனிமொழியை நேற்று பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நேற்று மாலை கனிமொழியை அவரின் அலுவலகத்தில் நிர்வாகிகள் வரிசையாக சந்தித்தனர். பல்வேறு துறையினர் அவரை நேரில் சந்தித்து, புதிய பதவிக்காக வாழ்த்து தெரிவித்தனர். பலர் கனிமொழியிடம் புத்தகங்களை கொடுத்தனர். சிலர் பொன்னாடை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பெண்கள்

பெண்கள்

முக்கியமாக பெண்கள் பலர் கனிமொழியை வந்து சந்தித்தனர். கனிமொழிக்கு பொதுவாக பெண் நிர்வாகிகள் ஆதரவு அதிகம் உள்ளது. இதனால் பெண்கள் பலர் மாலையில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். மகளிரணி செயலாளராக கனிமொழி இருக்கிறார் என்பதால் அந்த அணி நிர்வாகிகள் வரிசையாக கனிமொழியை வந்து பார்த்தனர். இதனால் நேற்று மாலைக்கு பின் கனிமொழி மிகவும் பிஸியாகவே இருந்தார்.

வாழ்த்து

வாழ்த்து

இந்த நிலையில்தான் நிர்வாகி ஒருவர் தனது பெண் குழந்தையுடன் வந்து கனிமொழியை பார்த்தார். அப்போது கனிமொழி காலில் அந்த பெண் குழந்தை விழுந்தார். இதை பார்த்ததும் கனிமொழி சட்டென கோபம் அடைந்தார். என்னமா இது.. என்ன பழக்கம் இது. எதுக்கு குழந்தை எல்லாம் காலில் விழுறாங்க. இது ரொம்ப தப்பு என்று கோபம் அடைந்தார்.

உரிமை கோபம்

உரிமை கோபம்

மிகவும் உரிமையாக அந்த பெண்ணிடம் கனிமொழி கோபம் கொண்டார். அதன்பின் சிறுமியுடன்.. ம்மா இப்படி எல்லாமே யார் காலிலும் விழ கூடாது. இந்த பழக்கம் எல்லாம் இருக்கவே கூடாது என்று கன்னத்தை பிடித்து சொன்னார். அதன்பின் அவரின் தாயாரும்.. யார் காலிலும் விழ கூடாது என்று கூறினார். சிறுமிக்கு இந்த வயதிலேயே கனிமொழி சுயமரியாதை பாடம் எடுத்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.

English summary
Why does Kanimozhi DMK get angry with a girl after becoming the deputy Gen Sec?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X