சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 நாள் பிளான் ஓவர்.. நேரம் பார்த்து காரைவிட்ட ஓபிஎஸ்.. எடப்பாடிக்கு எதிராக மெகா பிளான்? நடக்குமா?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு அடுத்த வாரம் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் திடீரென சென்னைக்கு வந்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் நேற்று உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு பெற்றது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கை விசாரணை செய்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் நேற்று எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு தரப்பும் மிக முக்கியமான வாதங்களை வைத்தனர்.

இந்த வழக்கில் நேற்று இரண்டு தரப்பிற்கும் தலா ஒரு மணி நேரம் மட்டுமே வாதம் செய்ய கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இரண்டரை மணி நேரம் வாதம் செய்தார். ஓ பன்னீர்செல்வம் 1 மணி நேரம் 45 நிமிடம் வாதம் செய்தார்.

இப்போ தான் என்னால முடிஞ்சது! வார்டு மக்களுக்கு 'அண்டா’ கொடுத்த அதிமுக கவுன்சிலர்! இவ்வளவு லேட்டாவா? இப்போ தான் என்னால முடிஞ்சது! வார்டு மக்களுக்கு 'அண்டா’ கொடுத்த அதிமுக கவுன்சிலர்! இவ்வளவு லேட்டாவா?

 எடப்பாடி

எடப்பாடி

இந்த பொதுக்குழு வழக்கு விசாரணை நடந்த சமயத்தில்.. எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் இரண்டு பேருமே சொந்த ஊர்களுக்கு சென்றனர். எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு சென்றார். கடந்த ஒரு வாரமாக எடப்பாடி பழனிசாமி சேலத்தில்தான் இருக்கிறார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை செய்து வருகிறார். ஆனால் முன்பு இருந்தது போல அவரின் வீடு இப்போது பரபரப்பாக காணப்படவில்லை. நிர்வாகிகள் வரத்து கொஞ்சம் குறைவாகவே உள்ளது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தேனி பெரிய குளம் வீட்டில் தங்கி இருக்கிறார். அவரை பார்க்க தேனியில் அடுத்தடுத்து நிர்வாகிகள் குவிந்தனர். அதிமுக எம்பி தர்மர் தலைமையில் நிர்வாகிகள் பலர் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார். இதன் காரணமாக ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.

எடப்பாடிக்கு ஆதரவாக பேசிய சில மாஜி அமைச்சர்கள் கூட தற்போது எதுவும் பேசாமல் அமைதியாகி உள்ளனர். பெரிதாக எடப்பாடிக்கு ஆதர்வாக் மாஜி அமைச்சர்கள் கருத்து கூறுவதை தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் நேரம் பார்த்து சென்னைக்கு வந்துள்ளார். 10 நாட்களுக்கு பின் சென்னைக்கு ஓ பன்னீர்செல்வம் வந்துள்ளார். அவர் சென்னையில் நிர்வாகிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்

அதிமுகவில் தேனி, சேலம், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பலர் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதேபோல் சென்னையில் உள்ள நிர்வாகிகளையும் தன் பக்கம் இழுக்க ஓ பன்னீர்செல்வம் முயல்வார் என்று கூறப்படுகிறது. இதை மனதில் வைத்தே அவர் சென்னைக்கு வந்ததாக தெரிகிறது. இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் என்று ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக நம்புகிறார்.

தீர்ப்பு

தீர்ப்பு

தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்தால் கண்டிப்பாக பல நிர்வாகிகள் தன் பக்கம் வருவார்கள். அப்படி நடந்தால் அதிமுக அலுவலக வழக்கிலும் தான் வெற்றிபெற முடியும் என்று ஓ பன்னீர்செல்வம் நம்பிக்கை வைத்துள்ளார். அதிமுக அலுவலக வழக்கில் வென்றால் அதே நாள் அதிமுக அலுவலகம் செல்ல ஓ பன்னீர்செல்வம் முயல்வார் என்று கூறப்படுகிறது. அதோடு பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்தால் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை அவர் நடத்தவும் அழைப்பு விடுக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். ஆனால் இது அனைத்திற்கும் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வர வேண்டும்.. தீர்ப்பு சாதகமாக வருமா என்பது அடுத்த வாரமே தெரியும்!

English summary
Why does O Panneerselvam come back to Chennai after 10 days amid AIADMK Case? அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு அடுத்த வாரம் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் திடீரென சென்னைக்கு வந்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X