சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏ கருப்பா! 6.30 மணிக்கு வண்டியை விட்ட ஓபிஎஸ்.. உள்ளே கேட்ட "வாய்ஸ்".. தீர்ப்புக்கு முன் ஒரே பதற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் இந்த வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.

Recommended Video

    OPS வசமான அதிமுக

    அதிமுக பொதுக்குழு வழக்கு இந்த முறை தனி நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இதில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு முக்கியமான பல வாதங்களை வைத்தது.

    இந்த வாதங்கள் வழக்கை புரட்டி போடும் என்று சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே ஓ பன்னீர்செல்வமும் தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறாராம்.

    இந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

    எல்லாமே தவறு! ஓபிஎஸ் கையில் 7 எல்லாமே தவறு! ஓபிஎஸ் கையில் 7 "பாயிண்ட்ஸ்".. தீர்ப்பையே புரட்டி போடும்? கோர்டில் சொன்னது என்ன?

    தீர்ப்பு

    தீர்ப்பு

    இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் நேற்றும் இன்று அதிகாலையிலும் நிர்வாகிகளை சந்தித்தார். சமீபத்தில் தேனியில் உள்ள பண்ணை வீட்டில் ஓ பன்னீர்செல்வம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார். சுமார் 400 நிர்வாகிகள் அந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். அதன்பின் மீண்டும் நேற்று நிர்வாகிகளை ஹோட்டலில் சந்தித்தார். இதற்காக 6.30 மணிக்கு நேற்று மாலை ஓபிஎஸ் தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றார். தீர்ப்பு வர போகிறது.. அடுத்த என்ன செய்ய வேண்டும். தீர்ப்பை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் பேசியதாக கூறப்படுகிறது.

     இரண்டு விஷயங்கள்

    இரண்டு விஷயங்கள்

    இரண்டு முக்கியமான விஷயங்களை அவர் பேசியதாக தெரிகிறது. முதல் விஷயம்.. தீர்ப்பு சாதகமாக வந்தால் என்ன செய்யலாம். அதிமுக அலுவலகம் செல்லலாமா? அதிமுகவில் எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் நபர்களை நீக்கலாமா என்பது பற்றி ஆலோசனை செய்து இருக்கிறாராம். அதேபோல் தீர்ப்பு எதிராக வந்தால் என்ன செய்யலாம். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் ஓ பன்னீர்செல்வம் பேசி இருக்கிறாராம்.

    இயல்பு

    இயல்பு

    இதில்.. பொதுக்குழு நடந்ததே செல்லாது, நீங்க கண்டிப்பா வெற்றிபெறுவீங்க என்று ஓ பன்னீர்செல்வத்திற்கு அவரின் ஆட்கள் நம்பிக்கையாக தெரிவித்துள்ளனர். நேற்று ஹோட்டலில் நடந்த இந்த மீட்டிங்கில் சுமார் 300 பேர் ஹோட்டலில் கலந்து கொண்டனர். அதன்பின் இன்று அதிகாலை மீண்டும் 6.30 மணிக்கு ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு சில நிர்வாகிகள் வந்தனர். அவருக்கு நெருக்கமான நெருக்கமான நிர்வாகிகள் மட்டும் வந்தனர்.

    வாய்ஸ்

    வாய்ஸ்

    அவர்கள் வீட்டிற்கு உள்ளே தீவிரமாக ஆலோசனை செய்த வாய்ஸ் மட்டும் கேட்டது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் நம்பிக்கையில் இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் முடிந்த நிலையில்.. நிர்வாகிகளிடம் எல்லோரும் உங்கள் குல தெய்வத்தை வேண்டிக்கோங்க.. கருப்பனை வேண்டிக்கோங்க.. எல்லாம் நல்லபடி நடக்கும். நமக்கே சாதகமாக தீர்ப்பு வரும் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியதாக தெரிகிறது.

    English summary
    Why does O Panneerselvam meet his supporters in a hotel ahead of AIADMK MHC caseஅதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் இந்த வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X