"செக் போஸ்ட்".. மொத்தமாக கைவிட்ட டெல்லி? சிரிக்கும் எடப்பாடி.. "பேச்சிகிட்ட" ஐக்கியம் ஆன ஓபிஎஸ்!
சென்னை: அதிமுகவில் நடக்கும் விஷயங்கள் அடுத்தடுத்து தனக்கு எதிராக திரும்பி வருவதால் ஓ பன்னீர்செல்வம் முக்கியமான அஸ்திரம் ஒன்றை எடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் உட்கட்சி மோதல் இன்னும் வரவில்லை. கன்னித்தீவு கதையாக இந்த மோதல் நீண்டு கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் இரண்டு நீதிபதி அமர்வு அறிவித்துவிட்டது.
இதையடுத்து அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்து இருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வர வாய்ப்புகள் உள்ளன.

அதிமுக
அதிமுகவில் உட்கட்சி விவகாரங்கள் இப்போது டெல்லிக்கு சென்றுள்ள நிலையில் டெல்லி தரப்பு இதில் தலையிடவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது இந்த விவகாரத்தில் அழுத்தம் கொடுக்கும்படி டெல்லி பாஜகவை ஓபிஎஸ் தரப்பு அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் இது உங்கள் உட்கட்சி விவகாரம். இதில் ஒரு சாராருக்கு ஆதரவாக தலையிட்டு நாங்கள் பிரச்சனை செய்ய விரும்பவில்லை. நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று நாசுக்காக டெல்லி தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

டெல்லி
டெல்லி பாஜக இப்படி இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் இருக்க வேறு காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் உட்கட்சி மோதல் தீர்ந்துவிட்டால், அக்கட்சி பலம் பெற்றுவிடும். பாஜக இதனால் இரண்டாம் இடத்தை தமிழ்நாட்டில் பிடிக்க முடியாது. பாஜக வளர வேண்டும் என்றால் அதிமுகவில் உட்கட்சி மோதல் நீடிக்க வேண்டும். அப்போதுதான் பாஜக எதிர்க்கட்சி போல செயல்படும் என்று டெல்லி தலைமை நினைக்கிறதாம்.

பேச்சி
இதன் காரணமாகவே பாஜகவிற்கு அதிமுக "மேட்டரில்" இப்போது எந்த ஆர்வமும் இல்லை என்கிறார்கள். 2024 லோக்சபா தேர்தல் வரை எப்படியாவது அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவ வேண்டும் என்று பாஜக நினைப்பதாக கூறப்படுகிறது. டெல்லி தரப்பில் இருந்து எந்த சப்போர்ட்டும் கிடைக்காத காரணத்தால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள்தான் கடைசியில் உதவி செய்வார்கள் என்று நினைத்தேன்.

மோதல்
அவர்களே உதவி செய்யவில்லையே என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு புலம்பி வருகிறதாம். கிட்டத்தட்ட டெல்லி தரப்பு ஓ பன்னீர்செல்வத்தை கைவிட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது. எதிர்காலத்தில் உதவினால் உண்டு.. இப்போது டெல்லி இதில் தலையிடுவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை என்றுதான் கூறப்படுகிறது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமியும் முன்பு எப்போதும் இல்லாத மகிழ்ச்சியுடன் இருக்கிறார். ஓ பன்னீர்செல்வதிற்கு அடுத்தடுத்து தோல்விகளாக வந்து கொண்டு இருக்கின்றன.

பொதுக்குழு
பொதுக்குழு வழக்கில் தோல்வி, எம்எல்ஏக்களை இழுப்பதில் தோல்வி, அதிமுக சீல் வழக்கில் தோல்வி என்று அடுத்தடுத்து அவர் தோல்விகளை சந்தித்து வருகிறார். இதன் காரணமாக எடப்பாடி தரப்பு செம குஷியில் இருக்கிறதாம். இன்னொரு பக்கம் போகிற இடம் எல்லாம் செக் போஸ்ட் போடப்படுவதால் வருத்தத்தில் இருக்கும் ஓ பன்னீர்செல்வம் கோவில், குளம் என்று ஆன்மிகம் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளாராம். வனப்பேச்சி என்ற பேச்சி அம்மனுக்கு பூஜை செய்து, சிறப்பு வேண்டுதலைகளை ஓபிஎஸ் செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வாதற்றங்கள் தெரிவிக்கின்றன.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications