என்னங்க ஆச்சு? இருந்த சத்தமும் இல்லாமல் சைலன்ட் ஆன சசிகலா.. என்ன செய்து கொண்டு இருக்கிறார்?
டெல்லியில் சசிகலாவிற்கு எதிராக லாபி செய்யும் நபரின் பலம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் சசிகலா மிகவும் அமைதியாக இருக்கிறார். கொஞ்சம் கொஞ்சம் வெளியே வந்து கொண்டு இருந்தவர் தற்போது அந்த சிறிய அளவிலான சத்தமும் இல்லாமல் சைலன்ட் ஆகி இருக்கிறார். அப்படி என்னதான் நடந்தது?
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. இந்த தேர்தலுக்கு பின்பாக ஒரு பக்கம் பாஜக அதிமுக இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. பாஜக நிர்மல் அதிமுகவில் இணைந்ததில் இருந்தே பாஜக நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் அடுத்த மாதம் ஓ பன்னீர்செல்வம் திருச்சியில் பெரிய மாநாட்டை நடத்த திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார். டிடிவி தினகரன் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். ஆனால் இடையில் ஒரே ஒருவர் மட்டும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார். அவர்தான் சசிகலா.

சசிகலா 2024
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு முன் பேட்டி அளித்த சசிகலா, ஆரம்பத்தில இருந்து என்னோட உத்தியை பார்த்துட்டு இருக்கீங்க; இதுக்கு மேல நான் வெளிய சொல்ல கூடாது. என்ன நடக்கும் என்று உங்களுக்கே வரும் நாட்களில் தெரியும். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை சந்திப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை.என்னுடைய கட்சிக்காரர்களை நான் சந்திப்பதில் என்னங்க இருக்கிறது. இதில் என்ன இருக்க முடியும். உங்க கிட்ட சொல்லிவிட்டு வேண்டுமானால் நான் முடிவு எடுக்கிறேன், என்று சசிகலா செய்தியாளர்களிடம் கூறினார். 2024க்குள் எல்லோரும் நம் பக்கம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் சசிகலா இப்படி பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் அதன்பின் நடந்த சம்பவங்கள் சில சசிகலாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாம்.

வழக்கு வெற்றி
அதன்படி எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்றார். பொதுக்குழு நடந்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தில் முடிவானது. இதனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. அதேபோல் இரட்டை இலை சின்னம் வழக்கிலும் எடப்பாடி தரப்பிற்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.இந்த தொடர் சம்பவங்களால்தான் சசிகலா அப்செட்டில் இருக்கிறாராம். டெல்லி சப்போர்ட் இல்லாமல் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இல்லையே என்று சசிகலா நினைக்கிறாராம்.

சிவில் வழக்கு
எடப்பாடியின் வழக்கு வெற்றி எவ்வளவு முக்கியம் என்பது சசிகலாவிற்கு தெரியும். ஏனென்றால் இனி ஓ பன்னீர்செல்வம் இதில் சிவில் வழக்கு போட்டு வெல்வது கடினம். ஏற்கனவே சசிகலா தொடர்ந்த சிவில் வழக்கே இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் எடப்பாடி வழக்கில் வென்றதை பார்த்து சகிகலா அப்செட்டில் இருக்கிறாராம். எடப்பாடியை இனி சட்ட ரீதியாக எதிர்ப்பது கடினம். அவர் சட்ட மோதலில் வென்றுவிட்டார், இனி தேர்தல் ஆணையத்தில் மட்டுமே முறையிட முடியும் என்பதால் சசிகலா கொஞ்சம் நம்பிக்கை இழந்து இருக்கிறாராம்.

பாஜகவையே எதிர்க்கிறார்
அதோடு பாஜகவையே எடப்பாடி எதிர்க்கிறார்;. அண்ணாமலையை விமர்சனம் செய்த நிர்மலை கட்சிக்குள் எடுத்துக்கொள்கிறார். அதன்பின்பும் நிர்மல் அண்ணாமலையை தாக்கி பேசுகிறார். இதை எடப்பாடி கண்டிக்கவில்லை.ஜெயக்குமார், செல்லூர் ராஜு ஆகியோர் அண்ணாமலையை விமர்சனமா செய்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது எடப்பாடி பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டார். அப்படி இருக்கையில் அவருக்கு மணி கட்டவே முடியாது. அவரை பாஜகவை வைத்து மிரட்ட முடியாது என்ற வருத்தத்தில் சசிகலா இருக்கிறாராம்.

பார்க்கவில்லை
இதனால்தான் கடந்த சில நாட்களாக சசிகலா வெளியே வரவே இல்லை என்கிறார்கள். அதோடு சசிகலா நிர்வாகிகள் யாரையும் சந்திக்கவும் இல்லையாம். ஓபிஎஸ் மனைவி மரணத்திற்கு சென்ற சசிகலா அவரின் தாயார் மரணத்திற்கு செல்லவில்லை. அவரின் இந்த அமைதிக்கு பின் வேறு ஒரு திட்டமும் இருக்கிறதாம். அவரின் கையில் ஒரே ஒரு பிளான் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு எதிராக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி பாஜகவை பெரிதாக கண்டுகொள்ளவில்லை . இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தொண்டர்கள் சப்போர்ட் இன்றி இருக்கிறார். அவருக்கு நிர்வாகிகள் ஆதரவு இல்லை. அதிமுகவில் இப்படி இரண்டு முக்கிய தலைவர்களுக்கும் ஒரு விதத்தில் பிரச்சனை இருக்கிறது. அதனால் எப்படியாவது இதை பயன்படுத்தி அதிமுக உள்ளே நுழைய வேண்டும் என்று சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உடல்நிலை
அதேபோல் டெல்லியில் சசிகலாவிற்கு எதிராக லாபி செய்யும் நபரின் பலம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. டெல்லி பாஜக அந்த நபரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சசிகலா மீது டெல்லி தரப்பு அனுதாபம் கொள்ள தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா அடுத்த சில மாதங்களில் அதிமுகவிற்குள் நுழைவதற்கான பணிகளை செய்வார்கள். எடப்பாடிக்கு எதிராக இவரை களமிறக்கும் முயற்சிகள் நடக்கலாம் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை எடப்பாடி எப்படி எதிர்கொள்வார் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications