“பிட்” “பிட்” டாக ஆடியோ.. அண்ணாமலை பூச்சாண்டி.. பிடிஆருக்கு ஆதரவாக குதித்த திமுக.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் முக்கிய கட்டுரை ஒன்று எழுதப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசியல் தற்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

Why does suddenly DMK top brass support PTR Palanivel Thigarajan on the explosive alleged audio?

இந்த ஆடியோவில் உண்மைத்தண்மை அறியப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இன்னொரு ஆடியோவும் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இரண்டு ஆடியோக்களின் உண்மைத்தன்மை தெரியவில்லை. அமைச்சர் பிடிஆர் இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது, பொய்யானது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் முக்கிய கட்டுரை ஒன்று எழுதப்பட்டு உள்ளது.

அதில், அமைச்சர் பி.டி.ஆர்.பழனி தியாகராஜன் பேசியதாக வேல் தியாகராஜன் வெளிவந்த ஆடியோ' ஜோடிக்கப்பட்ட ஒன்று என அவரே தெளிவாக் கிய பின்னும். அந்த ஆடியோவை வைத்து தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் செய்யப் புறப்பட்டிருக்கிறது ஒருகூட்டம். புதுடெல்லிக்குச் சென்று பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தனது 'எஜமானர்'களை சேவித்த எடப்பாடி பழனிசாமி. பழனிவேல் தியாகராஜன் பேசிய தாக வெளிவந்த 'ஆடியோ'க்கள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். இதைப்பற்றிய உண்மை நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்' - என உள்துறை மந்திரி (அமித்ஷா) யிடம் தெரிவித்துள்ளதாகக் கூறி யுள்ளார்!.

பிடிஆர் தெளிவாக விளக்கம் அளித்த பின்பும் இப்படி கூறி உள்ளார். எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை யில் அமைச்சராக இருந்த உடு மலை இராதாகிருஷ்ணன், அரசு கேபிள் நிறுவனத்தின் பொறுப்பில் இருந்தபோது, சம்பத் என்பவரிடம் பேசியதாக ஒரு ஆடியோ அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வைரலாக உலா வந்ததே! இருவருக்குமிடையே நடந்த அந்த உரையாடலில் கோடிக் கணக்கான ரூபாய்கள் 'கொடுக்கல் வாங்கல்கள் குறித்து பேசப்பட்டதே. "ஒரே டெண்டரை பொள்ளாச்சி ஜெய ராமன் கொண்டு போனான் "நீங்க தான் அந்த டி.வி. காரன்கிட்டே ஒரு கோடி வாங்கிட்டிங்க"... போன்று பல விஷயங்கள் விலா வாரியாக விவாதிக்கப்பட்டதே இன்று வெளி வந்த ஆடியோவின் உண்மைத் தன்மையை விசாரிக்கக்கோரும் அந்த எடப்பாடி பழனிசாமி ஆடியோவின் உண்மைத் தன்மை யை விசாரித்தாரா?

அப்படி தேட்டைப் போட்டதாக பேசிக்கொண்டவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்த்த எடப் பாடிக்கு இன்று வாய் திறந்து கேள்வி கேட்க என்ன தகுதியிருக்கிறது? ஏன் சமீபத்தில் நாஞ்சில் கோலப்ப னுடன் எடப்பாடி பழனிசாமி கோஷ் டியின் மூத்த தலைவர்களில் ஒருவ ராகிய பொன்னையன் பேசியதாக வெளியிடப்பட்ட 'டேப்"பில் "எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிகமான சட்ட மன்ற உறுப்பினர்கள் இருக்கக் கார ணம் பணம் பெரிய அளவில் விளை யாடுவதுதான்" என்றும் 'கொள்ளை யடிச்சு கோடிசுவரன் ஆனவங்க... அவங்கவங்க பணத்தைக் காப்பாத் திக்கிறதுக்காக டெல்லியை பிடிச்சுகிட்டு ஆடுறானுங்க'... என் பது மட்டுமின்றி எத்தனையோ திடுக் கிடவைக்கும் செய்திகள் வெளிவந்து அது வைரலாகி ஓடியதும், அது என் குரலே அல்ல; என்னைப் போல யாரோ பேசியது என்று கூறி. போதிய விளக்கமின்றி ஒற்றை வரியிலேயே நழுவினாரே; பொன்னையன்!

இதை எல்லாம் மக்கள் மறந்தி ருப்பார்கள் என்று நினைத்து கண் ணாடி வீட்டில் இருந்து கல்லெறியும் பைத்தியக்காரச் செயலில் ஈடுபட்டுள் ளார் எடப்பாடி!இவராவது கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிகிறார் என்றால் இன்னொரு அரைக்கால் வேக் காட்டு அரசியல் பேர்வழி அண்ணா மலை மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சிலை உமிழ்ந்து கொண்டிருக் கிறார்! கைக்கெடிகாரத்துக்கு போலி பில் காட்டி மாட்டிக் கொண்ட பேர்வழி, "பிட்" "பிட்" டாக ஆடியோ வெளியிடப்ப டும் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்! பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இத்தகைய ஆடி

யோக்கள், வீடியோக்கள் வகை வகையாக வெளி வந்ததை பட்டிய லிட்டால் பக்கங்கள் போதாது! அந்த 'பிட்' அரசியல் தலைவர் வெளியிடு வது போன்று போலி ஆடியோக்கள் அல்ல! பேசியவரும். யாரிடம் பேசி னாரோ அவரும் பேசிக் கொள்ளும் ஆடியோக்கள்! பேசியவர்தான் யார் என்று தன்னை வெளிப்படுத்திக் கொண்டே பேசுகிறார்! இப்படிப்பட்ட ஆடியோக்கள், பி.ஜே.பி. ஆளும் பல மாநிலங் களில் பிரசித்தம் என்றாலும் கருநாட கத்தில் அதற்குப் பஞ்சமே இல்லை! பி.ஜே.பி. நடத்திய 'ஆபரேஷன் கமலா எப்படி எல்லாம் நடத்தப்பட் டது, யார் யாரிடம் கோடிக் கணக்கில் பேரம் பேசப் பட்டது என்பன போன்ற ஆடியோக்கள் புற்றீசலாய் பல

நேரங்களில் புறப்பட்டுள்ளன! சமீபத்தில் கருநாடக மாநில முதல மைச்சராக உள்ள பசவராஜ் பொம்மை ஆட்சி நடத்துவதை கிண் மதுசாமி ஒரு சமூக சேவகரிடம், பேசிய போது, "இங்கு அரசாங்கம் நடைபெறவில்லை... "மேனேஜ்' செய்து கொண்டிருக்கி றோம். அவ்வளவுதான் இன்னும் 7 எட்டு மாதங்களை நகர்த்த வேண் டுமே!" எனக் கூறிய 'ஆடியோ வெளியாகி எங்கும் அது பேச்சுப் பொருளானது. கருநாடகா மட்டுமல்ல: அகில இந் திய அளவிலே அது ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது! கருநாடகத்திலே இருந்த மற்ற அமைச்சர்கள் சட்ட அமைச்சர் மீது பாய்ந்தனர்.

முதலமைச்சர் பொம்மை தனது சட்ட அமைச்சர் பேசியது எதோ வேறு பொருளில் பேசியது என்று கூறி உள்ளது.

இது சமீபத்திய சாம்பிள். வெட்டி, ஒட்டி, ஜோடிக்கப்பட்ட ஆடியோக் வைத்து அரசியல் நடத்த நினைக்கும், அரைக்கால்வேக்காட்டு அண்ணாமலை விரும்பினால் பாரதிய ஜனதா கூடாரத்திலிருந்து வெளிவந்த பல ஆடியோ. வீடியோக்கள் அணி வகுக்கத் தொடங்கும்! காலப் போக்கில் பல ஆடியோ, வீடியோக்களை எழுந்து நின்று பேச வைப்போம்!, என்று குறிப்பிட்டு உள்ளனர்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+