திமுகவின் 2 பெரிய மூவ்! பட்டென டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் ரவி! நேராக "அவரையே" பார்க்கிறாராம்! பிளான்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். இந்த சந்திப்பில் சில முக்கிய தலைவர்களை ரவி சந்திக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக தரப்பிற்கும், ஆளுநர் ஆர். என் ரவிக்கும் இடையில் மோதல் அதிகரித்து வருகிறது. முக்கியமாக நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பியதில் இருந்து இந்த மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

ஆளுநர் ரவி
இந்த நிலையில்தான் ஆளுநருக்கு எதிராக திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளுநர் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஏற்பது இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு நாங்கள். நாங்கள் அனுப்பும் மசோதாக்களை நிறைவேற்றுவதுதான் ஆளுநரின் கடமை. ஆனால் ஆளுநர் அந்த கடமையை செய்யாமல், மசோதாக்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு இருக்கிறார் என்று திமுக தரப்பில் விமர்சனம் வைக்கப்படுகிறது.

திமுக ஆளுநர்
இன்று வரை 19 நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநர், குடியரசுத் தலைவர் ஏற்காத காரணத்தால் முடங்கி உள்ளது என்று திமுக தரப்பு தெரிவிக்கிறது. திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் ஆளுநருக்கு எதிராக கடுமையான கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டு இருந்தது. அதில், ஆளுநர் ஆர். என் ரவி நீட் மசோதாவை இனியும் தாமதிப்பது தவறானதாக இருக்கும். அவரின் பதவிக்கு இது அழகு அல்ல என்று விமர்சனம் செய்யப்பட்டது.

ஆளுநர் ரவி மசோதா
ஆளும் தரப்பிற்கும் ஆளுநர் தரப்பிற்கும் இதனால் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில்தான் நாடாளுமன்றத்தில் இரண்டு முக்கியமான மூவ்களை திமுக எம்பிக்கள் ஆளுநருக்கு எதிராக மேற்கொண்டனர். அதன்படி முதலாவதாக தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று திமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தார் எம்பி டி.ஆர்.பாலு.

நாடாளுமன்றம் ஆளுநர்
ஆனால் இதை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் திமுக எம்பிக்கள் கடுமையான அமளியில் ஈடுபட்டு அவையில் இருந்து வெளியேறினர். இரண்டாவதாக, ஆளுநருக்கு எதிராக சட்ட திருத்த தனி நபர் மசோதாவை திமுக எம்.பி. வில்சன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.

வில்சன் எம்பி ஆளுநர்
இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவை திருத்த வேண்டும் என்று தனி உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. திமுகவின் இந்த இரண்டு மூவ்களும் நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில்தான் நீட் மசோதாவிற்கு ஏன் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று ஆளுநர் ரவி தரப்பு விளக்கம் அளித்தது.

விளக்கம் நீட்
பிபிசி ஊடகத்திற்கு ஆளுநர் ரவி தரப்பு அளித்த விளக்கத்தில், அரசியலமைப்பு ஆளுநருக்கு வழங்கிய அதிகாரங்களின்படியே செயல்படுகிறோம். இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக இருந்தாலும் அவசியம் இருந்தால் மட்டுமே அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம். மசோதா மீது ஆளுநருக்கு திருப்தி ஏற்பட வேண்டும். இல்லையென்றால் அதை குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பி வைப்பார். இதற்கு காலக்கெடு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி பயணம்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை ரவி சந்திக்க இருக்கிறார். அதேபோல் குடியரசுத் தலைவரை ரவி சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசியல் நிலவரம், நீட் விவகாரம், நாடாளுமன்றத்தில் திமுக வைக்கும் எதிர்ப்புகள், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளுநர் ரவி ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9ம் தேதி வரை அவர் டெல்லியில் இருப்பார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications