குண்டை போட்ட ரிப்போர்ட்.. என்னாச்சு.. "விஜயபாஸ்கர்" அப்படியே "சைலன்ட்" ஆகிட்டாரே.. ஓ இதுதான் மேட்டரா
சென்னை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வெளியானதில் இருந்தே அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மிகவும் அமைதியாகவே இருக்கிறார். பெரிதாக வெளியே தலைகாட்டுவது இல்லை.
அதிமுக நிகழ்வுகளிலும் விஜயபாஸ்கர் பெரிதாக கலந்து கொள்வது இல்லை. முடிந்த வரை வெளியே வருவதை அவர் தவிர்த்து வருகிறார்.
கட்சி தொடர்பான நிகழ்வுகளிலும் விஜயபாஸ்கர் பெரிதாக கலந்து கொள்வது இல்லை என்று கூறப்படுகிறது. அவரின் இந்த செயல் அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை
ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. குற்றம் செய்யப்பட்ட நபர்களில் ஒருவராக இருக்க வாய்ப்பு உள்ளவர் என்று விஜயபாஸ்கர் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதுதான் விஜயபாஸ்கருக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல். நேரடியாக இவர் தவறு செய்த நபராக கருத வேண்டும் என்று ஆணையம் குண்டை தூக்கி போட்டு உள்ளது.

ஆணையம் விஜயபாஸ்கர்
அதோடு விஜயபாஸ்கர் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை பெற்று போது மருத்துவமனையில்தான் இருந்தார். ஆனால் இவர் ஆஞ்சியோ செய்ய வேண்டாம் என்று கூறி தடுத்தார். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தும், மறைந்த முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாட்டு சிகிச்சை அழைத்துச்செல்வதற்குத் தேவையான, முறையான முயற்சியை எடுக்காதது வியக்கத்தக்கது. C.W.146 - சுகாதாரத் துறை அமைச்சர் ஒரு தகுதிவாய்ந்த மருத்துவராக இருந்தாலும்,நோயாளியின் மருத்துவ நிலை மருத்துவ விதிமுறைகள், கருதப்பட்ட மற்றும் செய்யப்பட்ட நடைமுறைகள் போன்றவற்றை நன்கு புரிந்துகொள்வதில் திறமையானவராக இருந்தபோதிலும், வெளிநாட்டில் சிகிச்சை பெறுவது தொடர்பாக டாக்டர் ரிச்சர்ட் பீலேயின் உயிர்காக்கும் ஆலோசனைகள் குறித்தும் டாக்டர்.ஸ்டூவர்ட் ரஸ்ஸல், டாக்டர்.சமின் சர்மா, டாக்டர்.ராஜீவ் சோமன் மற்றும் C.W.120-டாக்டர்.ராம் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கண்ணுக்குத் தெரியாத குறைபாடுகளைக் கண்டறிவதற்கு மட்டுமல்லாமல் அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்கவும் ஆஞ்சியோகிராம் செய்வதன் தேவை, பாதுகாப்பு, முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் தொடர்பான ஆலோசனைகள் குறித்தும் அவர் ஏன் தனது மனதையும் அறிவையும் பயன்படுத்தவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

கருவி
மேலும் ஆச்சரியம் என்னவெனில், சாட்சிப் பெட்டியில், சிகிச்சை தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக கேட்கப்பட்ட கேள்விக்கு. அவர் தகவல் கிடைக்கப்பெறவில்லை அல்லது நினைவில்லை என்று கூறியபோதிலும், அப்பல்லோ மருத்துவர்கள் சிறந்த சிகிச்சையை வழங்கினார்கள் என்று ஆணித்தரமாகக் கூறினார். சுருக்கமாக, உறவினர்களற்ற மறைந்த முதல்வரை அவரது இறுதி நாள்வரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை முறியடித்து அப்பல்லோ மருத்துவமனையிலேயே வைப்பதற்காக, சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்ட முக்கிய கருவியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திகழ்ந்தார் என்று அறிக்கையில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர் இப்படி நேரடியாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ள நிலையில்தான், தலைமை செயலாளர் தலைமையில் பிறப்பிக்கப்பட்ட விசாரணை உத்தரவில் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெற்று உள்ளது. இது அவரை கடுமையாக அப்செட் ஆக்கி உள்ளதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள், குட்கா வழக்கு, இப்போது இந்த விவகாரம் என்று அடுத்தடுத்து தனக்கு எதிராக பிரஷர் அதிகரிப்பதால் விஜயபாஸ்கர் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாக கூறப்படுகிறது.

கூட்டங்கள்
இப்போது கூட்டங்களுக்கு போனால் செய்தியாளர்கள் இதை பற்றி கேள்வி எழுப்புவார்கள். நம் பக்கத்து நியாயத்தை சொன்னாலும், அது சட்ட ரீதியாக சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதால் விஜயபாஸ்கர் அமைதியாக இருக்கிறாராம். எதுவும் கருத்து சொல்ல வேண்டாம். சசிகலா போல அறிக்கை எல்லாம் வெளியிட வேண்டாம். தேவையில்லா சட்ட பிரச்சனைதான் வரும் என்று அவருக்கு சில சட்ட வல்லுனர்கள் ஆலோசனை சொன்ன காரணத்தால் விஜயபாஸ்கர் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications