Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக ஆட்சியின் சாதனைகளே போதும்.. "இதெல்லாம்" செகன்டரிதான்.. எடப்பாடி எடுத்த முக்கிய முடிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் குறித்து இபிஎஸ், ஓபிஎஸ் கவலைப்படாதது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் இரட்டை இலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை , தேர்தலில் போட்டியிட வேண்டும் என கருதுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி வரும் 7ஆம் தேதியாகும். இந்த நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ், நாம் தமிழர், தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன.

தமிழக அரசியல் கட்சிகளில் தேசிய கட்சியான பாஜக ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் இரண்டொரு நாட்களில் சொல்லும் என தெரிகிறது. தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அதிமுக என்ன செய்ய போகிறது என்ற கேள்வி இருந்தது.

 ஈரோடு கிழக்கு தேர்தல்

ஈரோடு கிழக்கு தேர்தல்

ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடுவது என அதிமுகவின் எடப்பாடி அணி முடிவு செய்துவிட்டது. அது போல் அவர்களுக்கு போட்டியாக ஓபிஎஸ் அணியும் களம் காண்பது என முடிவு செய்துவிட்டது. இதில் ஓபிஎஸ் வைத்த ட்விஸ்ட் , ஒரு வேளை பாஜக போட்டியிட்டால் அந்த கட்சி வேட்பாளருக்கு ஓபிஎஸ் அணி ஆதரவளிக்கும் என கூறியுள்ளார்.

கூட்டணி கட்சி

கூட்டணி கட்சி

இந்த நிலையில் கூட்டணி கட்சி என்ற முறையில் பாஜகவின் முடிவை எதிர்நோக்கி எடப்பாடி அணி காத்திருந்து காத்திருந்து கடைசியில் இனி என்ன வேணா நடக்கட்டும் என்ற முடிவில் அதிமுக எடப்பாடி அணி வேட்பாளரை அறிவித்துவிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவாக இருந்த கே.எஸ்.தென்னரசுதான் இந்த களத்தில் போட்டியிடுகிறார்.

பாஜகவுக்கு அதிர்ச்சி

பாஜகவுக்கு அதிர்ச்சி

இது பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துவிட்டது. அது போல் எடப்பாடி பழனிசாமி தொடங்கிய தேசிய முற்போக்கு ஜனநாயக கூட்டணி பணிமனையில் கூட்டணி கட்சியான பாஜகவின் தலைவர் படங்கள் இடம்பெறவில்லை. எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்திற்காக நாளை வெள்ளிக்கிழமை வரை காத்திருப்பார் என கருதப்பட்டது. ஆனால் அவருடைய முடிவு இரட்டை இலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போட்டியிடுவது என்ற அளவுக்கு வந்துவிட்டாராம்.

அதிமுகவில் யாருக்கு செல்வாக்கு

அதிமுகவில் யாருக்கு செல்வாக்கு

இதற்கு காரணம் அதிமுகவில் யாருக்கு செல்வாக்கு என்பதையும் எந்த அணிக்கு மக்கள் அதிக வாக்குகளை அளிக்கிறார்கள் என்பதையும் பார்ப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்துள்ளாராம். கட்சியில் 99 சதவீத நிர்வாகிகளின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறும் எடப்பாடி பழனிசாமி இந்த இடைத்தேர்தலை ஒரு கவுரவப் பிரச்சினையாகவே கருதுகிறாராம்.

இரட்டை இலை சின்னம்

இரட்டை இலை சின்னம்

எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை குறித்து கவலைப்படாததற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தனது பெயரும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியின் பெயரும் இருப்பதாக ஓபிஎஸ் கூறி வருகிறார். மேலும் இரட்டை இலை சின்னம் வேண்டும் என்றால் தன்னிடம் வந்து விண்ணப்பங்களில் கையெழுத்து வாங்கிக் கொள்ளட்டும் என ஓபிஎஸ் கூறி வருகிறார்.

 சின்னம் இப்போது தேவையில்லை

சின்னம் இப்போது தேவையில்லை


இதை தவிர்ப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி சின்னமே கிடைக்காவிட்டாலும் சுயேச்சை சின்னத்தில் நின்ற தனது பலத்தை நிரூபிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். மேலும் இரட்டை இலைக்காக ஓபிஎஸ்ஸுடம் கையெழுத்து வாங்கிவிட்டால் இத்தனை நாட்களாக கட்சியின் பொதுச் செயலாளராக தான் பட்ட கஷ்டமெல்லாம் வீணாகிவிடும் என்றும் கருதுகிறாராம். இனியும் இரட்டை தலைமை என்ற நிலையை தெரிந்தோ தெரியாமலோ உருவாக விடக் கூடாது என்பதிலும் மும்முரமாக இருக்கிறாராம். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பதவியேற்ற தனது ஆட்சி காலத்தில் 7.5 இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். எனவே இந்த சாதனைகளே தேர்தலில் வாக்குகளாக மாறும் என்ற அசாத்திய நம்பிக்கையும் எடப்பாடிக்கு இருக்கிறதாம்.

 புகழேந்தி கூறியது என்ன

புகழேந்தி கூறியது என்ன

அது போல் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி நேற்று தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், பாஜக தனது முடிவை அறிவித்த ஒரு மணி நேரத்திற்கு எங்கள் தரப்பு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என கூறியிருந்தார். ஆனால் பாஜகவுக்கு முன்பே நேற்றைய தினம் ஓபிஎஸ் முந்தி கொண்டு வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் பாஜக வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொள்வோம். ஒரு வேளை பாஜக போட்டியிடாவிட்டாலும் எங்கள் வேட்பாளரும் களத்தில் இருப்பார். இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவோம் என கூறியுள்ளார்.

கவுரவப் பிரச்சினை

கவுரவப் பிரச்சினை

ஓபிஎஸ்ஸுக்கு இந்த தேர்தல் கவுரவ பிரச்சினை. தனக்கு மக்களிடம் எத்தனை செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க இந்த தேர்தலில் வேட்பாளரை அறிவிக்கும் கட்டாயத்தில் ஓபிஎஸ் இருக்கிறார் என்றே சொல்லலாம். தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகிறார்கள்.

ஓபிஎஸ் வேட்பாளர்

ஓபிஎஸ் வேட்பாளர்

எனினும் பாஜக போட்டியிடாவிட்டால் ஓபிஎஸ் வேட்பாளர், இபிஎஸ் வேட்பாளர்களின் வாக்குகளை வைத்து யார் உண்மையான அதிமுக என்பதை கண்டுபிடித்துவிடலாம். யாருக்கு நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். எனவேதான் ஓபிஎஸ்ஸும் தனது வேட்பாளரை அறிவித்துவிட்டார் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+