Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிக்கலாகிடும்.. திடீரென அட்டாக் மோடில் இறங்கிய எடப்பாடி.. தாமரையை தாக்கும் இரட்டை இலை.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவை திடீரென எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தாக்கி பேச தொடங்கி உள்ளார். அதிமுகவினர் சொன்ன ஐடியாதான் பாஜகவை எடப்பாடி பழனிசாமி திடீரென விமர்சனம் செய்ய காரணம் என்கிறார்கள்.

தீவிர பிரச்சாரத்தில் இருந்தாலும் தேர்தல் கள நிலவரம் குறித்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரிக்கத் தவறுவதில்லையாம் எடப்பாடி பழனிச்சாமி. குறிப்பாக, அதிமுக ஆதரவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், உளவுத்துறையின் ஓய்வு பெற்ற முன்னாள் உயரதிகாரி, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்தபடி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

Why Edappadi palanisamy is furious against the BJP and Modi all of a sudden

இதில், பிரச்சாரத்திலும் பிரச்சாரத்தில் முன்வைக்கப்படும் விசயங்களிலும் அதிமுகதான் முன்னணியில் இருக்கிறது என்றும், பிரச்சாரத்தில் திமுக அரசை விமர்சிப்பது போல, பாஜகவையும் விமர்சியுங் கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, திமுகவுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள், எப்போதும் அதிமுகவுக்கு மொத்தமாக கிடைக்கும் ; இந்த முறை பாஜகவுக்கும் பிரிகிறது.

காரணம், பிரதமர் மோடியின் பிரச்சாரம், அடிக்கடி தமிழகம் வருவது, அண்ணாமலையின் அதிரடி பேச்சு ஆகியவைதான் என எடப்பாடியிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இதனை உணர்ந்த எடப்பாடி, மத்திய அரசையும் விமரிச்சிக்கத் தொடங்கியிருக்கிறார்.

சிதம்பரம் பேச்சு: உதாரணமாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "மதுரை பாஜக வேட்பாளராக இருக்கும் ராம சீனிவாசன் அதிமுகவை விமர்சனம் செய்கிறார். அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக என்னைப் பற்றிப் பேசியுள்ளார்.

இப்போது நடக்கும் மக்களவைத் தேர்தலோடு அதிமுக காணாமல் போகுமாம். ஏய். உன்னைப் போல எத்தனை பேரை பார்த்தது அதிமுக. நான் உட்பட இந்த மேடையில் இருப்பவர்கள் 50 ஆண்டு காலமாக இந்த கட்சிக்காக உழைத்தவர்கள். உன்னைப் போல சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல. இரவு பகல் பாராமல் உழைக்கும் உழைப்பாளிகள் நாங்கள். உங்களைப் போல வெற்று விளம்பரத்தில் அரசியல் நடத்தவில்லை.

தாமரை சின்னம்: அதிமுக இருக்காது என்று சொல்கிறார். பொறுத்திருந்து பார், இந்த தேர்தலோடு பெட்டி அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் அடையாளம் இன்றி போய்விடுவீர்கள். 1998ல் பாஜகவை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியதே அதிமுக தான். பாஜகவின் தாமரை சின்னத்தை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான். எங்களைப் பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற?" என ஆவேசமாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

மோடி பெயர் தவிர்ப்பு; இந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. இது பிரதமருக்கான் தேர்தல் என்றாலும் கூட்டணியில் இல்லாத பாஜகவை சேர்ந்த மோடியை விமர்சனம் செய்வதை எடப்பாடி தொடர்ந்து தவிர்த்து வந்தார் .

இப்படி தனது பிரச்சாரத்தின் ஆரம்ப நாட்களில் மத்திய பாஜக அரசையோ மோடியையோ விமர்சிக்காமல் தவிர்த்து வந்த எடப்பாடி, சமீப நாட்களில் பாஜகவையும் விமர்சிப்பதற்கு காரணம், பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு சொல்லப்பட்ட இந்த யோசனைதானாம் என்கிறார்கள் அதிமுகவினர்.

திமுக அரசை விமர்சிப்பது போல, பாஜகவையும் விமர்சியுங் கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, திமுகவுக்கு எதிரான அதிர்ப்தி வாக்குகள், எப்போதும் அதிமுகவுக்கு மொத்தமாக கிடைக்கும் ; இந்த முறை பாஜகவுக்கும் பிரிகிறது. என்று அதிமுகவினர் சொன்ன ஐடியாதான் பாஜகவை எடப்பாடி பழனிசாமி திடீரென விமர்சனம் செய்ய காரணம் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+