1 மாசம் ஆக போகுது.. ஸ்டாலின் போட்ட போடு.. கடும் டென்ஷனில் எடப்பாடி.. நடுங்கி போன அதிமுக.. ஏன்?
சென்னை: திமுகவில் ஸ்டாலின் செய்த அதிரடி ஒன்றால்.. அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அப்செட்டில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார். கிட்டத்தட்ட 1 மாதம் ஆக போகிறது இந்த கூட்டணியை முறித்து. இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்துவிட்டது. பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக தனியாக வந்துவிட்டது. இனி நாங்கள் தனியாகவே கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்தார். அப்போதே அவரின் பிளான் தமிழ்நாடு அரசியலில் பலருக்கும் தெரிந்துவிட்டது.
அண்ணாமலை காரணம்: இந்த கூட்டணி முறிவிற்கு பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கள்தான் காரணமாக கூறப்பட்டது. அண்ணாமலை அதிமுகவை விமர்சனம் செய்கிறார். கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக தலைவர்களை தவறாக பேசுகிறார். அவர் பி[பேச்சுக்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதனால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று கூறிவிட்டு பாஜக கூட்டணியை அதிமுக முறித்தது.
இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது.
இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.

எதிர்பார்ப்பு என்ன?: இந்த கூட்டணி முறிவு காரணமாக எடப்பாடி பழனிசாமி.. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் பக்கம் வரும் என்று நினைத்தார். முக்கியமாக முஸ்லீம் லீக், விசிக, காங்கிரஸ் போன்றவை தங்கள் பக்கம் வரும். திமுகவின் கூட்டணி உடையும் என்று எடப்பாடி நினைத்தார். ஆனால் காங்கிரஸ் இதுவரை எடப்பாடிக்கு சின் கிரீன் சிக்னல் கூட கொடுக்கவில்லை. உதாரணமாக சமீபத்தில் சென்னையில் நடந்த திமுக மகளிர் உரிமை மாநாட்டிற்காக சோனியா காந்தி தமிழ்நாடு வந்தார். மாநாட்டில் பங்கேற்க 5 வருடங்களுக்கு பிறகு சென்னை வந்தார் சோனியா காந்தி.
இங்கே எடப்பாடி எப்படியவாது கூட்டணி உருவாக்கலாம் என்று முயன்று வரும் நிலையில் இந்திய கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக திமுகவின் கட்சி நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொள்ள சோனியா வந்தது எடப்பாடி க்கு அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது. இதில் திமுக - காங்கிரஸ் முன்பை விட அதிக நெருக்கம் ஆனது அதிமுகவிற்கு இன்னும் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
( கலைந்து போன ஆசை.. எடப்பாடி கண் முன் நிற்கும் "அக்னி பரீட்சை".. சூழ்நிலை மோசமாம்.. என்னாச்சு?)
இஸ்லாமியர்கள்: அவரின் இந்த வருகை அதிமுகவை பெரிதும் அப்செட்டாக்கி உள்ளது. காங்கிரஸ், பாஜக இல்லாமல் எந்த கூட்டணி அமைத்தாலும் அது லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணியாக இருக்காது.. இதனால் அதிமுகவின் மெகா கூட்டணி கனவு சுக்குநூறாக உடைக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்களை கவர பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சிஏஏவை ஆதரித்தோம்.
வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதேபோல் இஸ்லாமியர்களை கவரும் விதமாக பல விஷயங்களை அவர் பேசி வருகிறார். ஆனால் இஸ்லாமிய தலைவர்கள் சிலர் போய் எடப்பாடியை பார்த்தாலும் தமிழ்நாட்டில் அதிக வாக்கு வங்கி உள்ள கட்சிகள் எதுவும் எடப்பாடியை பார்க்க செல்லவில்லை. இதனால் எடப்பாடிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது.

ஸ்டாலின் அதிரடி: இன்னொரு பக்கம் விசிக தலைவர் திருமாவளவனுக்கு எடப்பாடி போன் செய்து உடல்நலம் பற்றி விசாரித்தார். ஆனால் அவரும் கூட எடப்பாடிக்கு பெரிதாக கிரீன் சிக்னல் காட்டவில்லை. கூட்டணி தலைவர்களுடன் ஸ்டாலின் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசியதே இதற்கு காரணம் என்கிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தது நாடகம் இதை நம்ப வேண்டாம் என்று கூட்டணி தலைவர்களுடன் ஸ்டாலின் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசி உள்ளாராம்.
இதனால்தான் அதிமுகவுடன் பேசி.. தேவையில்லாமல் வலிமையாக இருக்கும் திமுக கூட்டணியை உடைக்க வேண்டாம் என்ற திட்டத்தில் கூட்டணி தலைவர்கள் பின் வாங்கி உள்ளனராம். பாஜக கூட்டணியை உடைத்தால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் நம் பக்கம் வரும் என்று நினைத்த எடப்பாடிக்கு இது பேரிடியாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications