Exclusive அந்த 4 பர்சன்ட்.. எடப்பாடியின் ‘அந்தர் பல்டி’ இதற்காகவா!? சொல்கிறார் அரசியல் எக்ஸ்பர்ட்!
பாஜக தங்களுக்கு இருப்பதாக நிரூபித்த இந்த 4 சதவீத ஓட்டுக்காகத்தான் எடப்பாடி இன்று இப்படி பேசுகிறார் என ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.
சென்னை : பாஜக உடனான கூட்டணி 2024 தேர்தலில் தொடர்வதை ஈபிஎஸ் விரும்பவில்லை என்றும், அதன் காரணமாகவே அவரது அணியினர் சமீபத்தில் பாஜகவை விமர்சித்துப் பேசி வந்தனர் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பாஜக உடனான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஈபிஎஸ்ஸின் இந்தப் பேச்சு, 4 சதவீத வாக்குகளை மனதில் வைத்துத்தான் என ஒன் ஒந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் எனவும் இரு கட்சிகளுக்கும் இடையே எந்த நெருடலும் இல்லை எனவும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக தேர்தல் பணிமனை பேனரில் பிரதமர் மோடி, அண்ணாமலை படங்களும் புதிதாக இடம்பெற்றுள்ளன.
எடப்பாடி பழனிசாமி தரப்பு, பாஜக உடனான கூட்டணியை விரும்பவில்லை எனக் கூறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி தொடரும் என திட்டவட்டமாக கூறியுள்ளார் ஈபிஎஸ். ஈபிஎஸ்ஸின் இந்த அறிவிப்பு எதை மனதில் வைத்து?
ஈபிஎஸ்ஸின் விருப்பம் என்ன? எதனால் பாஜக கூட்டணி தொடரும் என இப்போது கூறுகிறார் என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நமது ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முழு மனதோடு சொல்லவில்லை
இது தொடர்பாக ரவீந்திரன் துரைசாமி பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் போல முழு மனதோடு பாஜக உடனான கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை. இப்போது சூழலுக்கு தகுந்தபடி ஈபிஎஸ் பேசியிருக்கிறார். பாஜகவுக்கு 4 சதவீத வாக்குகள் நிச்சயமாக இருக்கின்றன. பாஜக தங்களுக்கு இருப்பதாக நிரூபித்த இந்த 4 சதவீத ஓட்டுக்காகத்தான் எடப்பாடி இன்று இப்படி பேசுகிறாரே தவிர, உண்மையிலேயே ஈபிஎஸ்ஸுக்கு பாஜக உடன் ஈடுபாடு கிடையாது. பாஜக கூட்டணியால், சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காமல் அதிமுக தோற்றது என்ற சி.வி.சண்முகம், கேபி முனுசாமி ஆகியோரின் புள்ளிதான் ஈபிஎஸ்ஸின் முழுமையான புள்ளி. மெகா கூட்டணி என ஈபிஎஸ் சொன்னது திமுக அணியில் உள்ள கட்சிகளை வைத்துத்தான். ஆனால், அதில் எந்தக் கட்சியும் இவரை நோக்கி நகர தயாராக இல்லை.

பெட் கட்ட ரெடி இல்லை
விசிக தலைவர் திருமாவளவன், எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லை எனச் சொல்லிவிட்டார். காங்கிரஸும், அதிமுகவுக்கு பலம் இல்லை, பாஜகவுக்கு அடிமையாகவே ஆகிவிட்டது என்று ஒதுக்குகிறது. திமுக கூட்டணியில் மெயினாக இருக்கும் 2 கட்சிகளும் ஈபிஎஸ்ஸை ஒதுக்கிவிட்டன. மற்ற கட்சிகளும் ஈபிஎஸ் சக்தி வாய்ந்தவராக கருதவில்லை. காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்களும், மாநில தலைவரும் இதே கருத்தைத்தான் பிரதிபலித்தார்கள். ஆக, எடப்பாடி பழனிசாமி தோல்வி வளையத்தில் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் வாக்கு பலம் என்ன என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனவே அவரை நம்பி 'பெட்' கட்ட யாரும் தயாராக இல்லை. அவருக்கு சீட் கன்வெர்ட் கெப்பாசிட்டி இல்லை என்றே எல்லோரும் நினைக்கிறார்கள்.

4 சதவீத ஓட்டு
அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸே, அதிமுக 4ஆக பிரிந்து போய்விட்டது என்று சொன்னதே, ஈபிஎஸ்ஸுக்கு அதிமுகவின் 30 சதவீதத்தில் 15 சதவீதம் தான் வாக்கு கிடைக்கும் என்ற அர்த்தத்தில் தான் அன்புமணி ராமதாஸ் பேசுகிறார். பிரதமர் மோடியும் ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸை 50-50 ஆகத்தான் மதிக்கிறார். இந்தச் சூழலில் வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் தான், பாஜகவுக்கு இருக்கும் 4 சதவீத ஓட்டுகளுக்காக சில மாய்மால வார்த்தைகளைச் சொல்கிறாரே தவிர பாஜக கூட்டணிக்குள் அவர் இல்லை. பாஜகவுக்கும் எடப்பாடி பழனிசாமி அணிக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையற்ற நிலை உருவாகிவிட்டது.

எவிடென்ஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு 15 சதவீதம் தான் செல்வாக்கு. அவரால் வெற்றி வாய்ப்பை தர முடியாது, வெற்றி பெற ஓபிஎஸ்ஸும் இருந்தால் தான் சரியாக இருக்கும் என்ற புள்ளியை நோக்கி பாஜக நகர்கிறது. சிடி ரவி ஈபிஎஸ்ஸையும், ஓபிஎஸ்ஸையும் பார்த்ததுதான் இதற்கு எவிடென்ஸ். எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் கூட்டணி பற்றியெல்லாம் கவலைப்படாமல் சின்னத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார். ஒரு காலத்தில் மோடியின் அழைப்பை ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் புறக்கணித்த நிலையும் இருந்தது. அதேபோல, எடப்பாடி பழனிசாமிக்கு சின்னம் கிடைத்துவிட்டால் என்ன செய்வார் என்ற சந்தேகம் பாஜக தலைமைக்கு இருக்கிறது.

பாஜக தலைமை சந்தேகம்
இரு கட்சிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை இல்லாத நிலையில் தான் குறுகிய கால நிவாரணமாக இந்த தேர்தலுக்கு மட்டும் ஈபிஎஸ்ஸூக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. இடைத்தேர்தல் முடிந்த பிறகு இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் - ஓபிஎஸ் 50-50 என்ற நிலைக்குச் சென்றுவிடும். அப்போது எடப்பாடி பழனிசாமி எப்படி மூவ் செய்கிறார்? காங்கிரஸ் கட்சியில் இருக்கும் தேர்தல் வியூக நிபுணர் சுனில் அவரை எவ்வாறு இயக்குகிறார் என்பதையெல்லாம் அதன்பிறகுதான் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தச் சூழலில் அவர் பாஜகவுடன் கூட்டணி எனப் பேசுவது 4 பர்சண்ட் வாக்குகளுக்காகத்தான்.

திமுக பக்கம்
பாஜக தலைமை, ஈபிஎஸ் - ஓபிஎஸ் சேர்ந்து இருந்தால் ஒருசில சீட்கள் கன்வெர்ட் ஆகும் என எதிர்பார்க்கிறது. திமுக ஆட்சியை காங்கிரஸ் தான் டிஸ்மிஸ் செய்தது என்று பேசுகிறார் பிரதமர் மோடி. திமுக மீது சாஃப்ட் கார்னரோடு பேசுகிறார் மோடி. எடப்பாடி பழனிசாமியை வைத்து சீட் கன்வெர்ட் செய்யலாம் என்ற நம்பிக்கை மோடிக்கே இல்லை. ஈபிஎஸ் மீது நம்பிக்கை இருந்தால், பிரதமர் மோடி ஏன் ஸ்டாலினை பெரிதாக மதிக்கிறார்? திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டதைப் பற்றி ஏன் இப்போது பேசப்போகிறார்? தனது எண்ண ஓட்டத்திற்குத் தகுந்த கூட்டணி அமையவில்லை என்றுதான் மோடியும் நினைக்கிறார். பாஜக கூட்டணி நமக்கு மைனஸ் என்று சி.வி.சண்முகம் எப்படி நினைக்கிறாரோ அதேபோலத்தான் மோடியும், ஈபிஎஸ் தேறமாட்டார் என நினைக்கிறார்.

வேறு என்ன வாய்ப்பு?
ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் இணைந்து, பாமகவும் சேர்ந்து வந்து, பாரிவேந்தர், ஏசி சண்முகம், டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து ஒரு பெரிய அணியை அமைத்தால் ஒரு சில சீட்களையாவது பெறலாம் என்ற புள்ளியை நோக்கித்தான் பாஜக தலைமை நகர்கிறது. ஆனால், அதற்கும் முழுமையாக இடம் கொடுக்காத வகையில் தான் ஈபிஎஸ்ஸின் நகர்வுகள் இருக்கின்றன. தன்னுடைய நிலைப்பாடு தெரிந்துவிடும் என்பதற்காக மத்திய பட்ஜெட்டை பற்றிக் கூட பேசாமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இன்று குறைந்தபட்ச ஓட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜகவுக்கு இருக்கிறது என்பதற்காக விருப்பமில்லாமல் பாஜகவுக்கு ஒரு அங்கீகாரத்தை ஈபிஎஸ் கொடுக்கிறார்.

லாக்கில் இருக்கும் ஈபிஎஸ்
முழுமையாக சின்னம் கைக்கு வராமல் லாக் ஆகித்தான் உள்ளார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அரைகுறை மனதோடு, கூட்டணி தொடர்கிறது என்று ஈபிஎஸ் சொன்னாலும், உண்மையிலேயே பாஜக கூட்டணியை அவர் விரும்பவில்லை என்பதே உண்மை. அதேபோல பிரதமர் மோடியும் வெறுமனே ஈபிஎஸ்ஸை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதால், திமுக கூட்டணியில் இருந்து வரும் ஒன்றிரண்டு கட்சிகளை இழுத்து கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். இதைத் தாண்டி மெகா கூட்டணி அமைக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை என ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications