பிரதமர் மோடியின் காலில் விழுந்தது ஏன்? அவர் சொன்னது என்ன தெரியுமா? வானதி சீனிவாசன் அளித்த விளக்கம்
சென்னை: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரதமர் நரேந்திர மோடி காலில் விழுந்து வணங்கினார். அதற்கு பிரதமர் மோடி கண்டிப்பு காட்டியதோடு, வானதி சீனிவாசனுக்கு அறிவுரையும் வழங்கினார். பிரதமர் மோடி அப்போது என்ன கூறினார் என்பது பற்றி வானதி சீனிவாசன் அளித்த விளக்கத்தை பார்க்கலாம்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி தர வேண்டும் என பல்வேறு கட்சிகளும் பலரும் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் சுமார் 27 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த நிலையில், இந்த மசோதா நாடாளுமன்ற சிறப்புக் கூட்டிடத்தில் கொண்டு வரப்பட்டது. இரு அவைகளிலும் விவாதத்திற்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லியில் பாஜக மகளிர் அணி சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக மகளிர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து, பூக்களைத் தூவியும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
அதைப் பிரதமர் மோடி சிரித்த முகத்தோடு ஏற்றுக் கொண்டார். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது திடீரென பிரதமர் மோடி காலில் விழுந்து வானதி சீனிவாசன் ஆசீர்வாதம் பெற முயன்றார்.
இதைக் கவனித்த பிரதமர் மோடி சட்டென பின்னால் நகர்ந்தார். மேலும், இதுபோல காலில் விழக் கூடாது என்பது போல வானதி சீனிவாசனை நோக்கி அறிவுரை கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி காலில் விழுந்தது ஏன்? என்பதற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கூறியதாவது:-
மசோதா நிறைவேறியதால் மகளிர் அணி சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று நேற்று காலை தான் முடிவு செய்தோம். இன்று அதற்கான வரவேற்புகளை செய்து உற்சாகமான பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்தோம். மகளிர் அணி தலைவர் என்ற முறையில் நான் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக இருந்தேன். பிரதமரை வரவேற்று விட்டு.. நான் அவரிடம் சொன்னது..
கோடிக்கணக்கான பெண்களின் கனவை நீங்கள் நனவாக்கியிருக்கீர்கள். அவர்கள் எல்லாருடைய சார்பிலும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கப்புறம் எனக்கு என்ன தோன்றியது என்றால் அரசியலில் இருக்கக் கூடிய பெண்கள் ஒவ்வொரு இடத்திற்கும் வருவதற்கு சந்திக்கின்ற சவால்கள், பிரச்சினைகள், அனுபவிக்கின்ற அவமானங்கள் எல்லாம் அந்த கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு நிமிடம் வந்தது.
எனவே, அவருக்கு காலில் விழுந்து நன்றி சொல்வதன் மூலமாக மட்டுமே நன்றி சொல்ல முடியும் அப்டி நினைத்து நமஸ்காரம் பண்ணினேன். அப்போ உடனே மோடி, இனிமேல் இப்படி விழக்கூடாது. உங்கள் வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன். காலில் விழக்கூடாது. அப்டினு சொல்லிவிட்டு எனக்கு அறிவுரை சொன்னார்" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications