எந்த பப்ளிசிட்டியும் இல்லை! அமைதியாக மீனவர்களை வைத்து பலரை மீட்ட ரியல் ஹீரோ! சிலிர்க்க வைத்த சம்பவம்
சென்னை: சென்னையை சேர்ந்த ஹீரோ ஒருவர் மீனவர்களை வைத்து மக்கள் பலரை மீட்டது கவனம் பெற்றுள்ளது. சத்தமின்றி மக்கள் பலரை இவர் மீட்டது, அதேபோல் பலருக்கு உதவிகளை செய்தது கவனம் பெற்றுள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. மிக்ஜாம் புயல் நேற்று முதல்நாள் சென்னையில் தாக்கியது. சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் புயல் நிலை கொண்டு இருந்தது. அங்கே இருந்தே புயல் மிக மிக மெதுவாக நகர்ந்தது.

இதன் காரணமாக சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக கனமழை பெய்தது. 2015 ஐ விட மோசமான கனமழை சென்னையில் பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை சென்னையில் கொட்டி தீர்த்தது. சென்னையில் பெய்ய மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
சென்னை மழை: சென்னையில் பல பகுதிகளில் 47 செமீ மழை பெய்தது. சில இடங்களில் 60 செமீ மழை கூட பெய்தது. சென்னையின் பல பகுதிகள் இதனால் நீரில் மூழ்கின. இப்போதும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இங்கே மீட்பு பணிகளை செய்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. மக்களை மீட்க கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கீழே மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை மீட்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன;.
மீட்பு பணிகள்: இந்த நிலையில்தான் சென்னையை சேர்ந்த ஹீரோ ஒருவர் மீனவர்களை வைத்து மக்கள் பலரை மீட்டது கவனம் பெற்றுள்ளது. சத்தமின்றி மக்கள் பலரை இவர் மீட்டது, அதேபோல் பலருக்கு உதவிகளை செய்தது கவனம் பெற்றுள்ளது.
The man in the green tshirt , his name is Veera bahu - he has done roles in movies like thunivu and has played the lead role in few .
— Prashanth Rangaswamy (@itisprashanth) December 5, 2023
He with the help of local fishermen is out there rescuing people from yesterday via boats . No publicity nothing - not even a pic of him helping… pic.twitter.com/t1OF4PpNfF
இது தொடர்பாக பிரபல சினிமா விமர்சகர் பிரஷாந்த் செய்துள்ள போஸ்டில், இந்த புகைப்படத்தில் பச்சை சட்டை அணிந்தவர் பெயர் வீரபாகு - துணிவு போன்ற படங்களில் கதாப்பாத்திரங்கள் செய்துள்ளார் மற்றும் சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹீரோவாக கூட சில படங்களில் நடித்துள்ளார்.
அவர் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் நேற்று முதல் படகுகள் மூலம் மக்களை மீட்டு வருகிறார். விளம்பரம் எதுவும் இல்லாமல் அமைதியாக இந்த உதவிகளை செய்து வருகிறார்- அவர் மக்களுக்கு உதவும் ஒரு படம் கூட இல்லை. அவ்வளவு அமைதியாக இந்திய உதவிகளை இவர் செய்கிறார். அவர் இந்த ட்வீட்டைப் பார்த்தால் உண்மையில் என்னைக் கொன்றுவிடுவார்.
ஆனால் அவரைப் போன்ற உன்னத ஆன்மாக்களை சென்னை நினைவுகூர வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்!, என்று கூறியுள்ளார்.
மீனவர்கள் உதவியுடன் மீட்பு: சென்னையில் மீனவர்கள் உதவியுடன் படகுகள் மூலம் இவர் பல்வேறு உதவிகளை செய்து கொண்டு இருக்கிறார். தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை மீட்பது, உணவு பொருட்கள் வழங்குவது போன்ற பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். இவரை போன்ற நபர்களை தமிழ்நாடு அரசு பாராட்ட வேண்டும்.. அமைதியாக இப்படி உதவிகளை செய்யும் நபர்களை எல்லாம் முடிந்த பின் இவர்களை அழைத்து அரசு பாராட்ட வேண்டும் என்று மக்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .












Click it and Unblock the Notifications