Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த சனி ஞாயிறு சரித்திரமாக போகுது.. சென்னையில் இன்று மொத்தமாக படையெடுக்கும் மக்கள்.. ஸ்பெசல் காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : நாளை(ஜூலை 8), நாளை மறுநாள் (ஜூலை 9) ரொம்ப விஷேசமான நாட்கள் என்பதுடன், விடுமுறை நாட்கள் என்பதால சென்னையில் மக்கள் கூட்டம் அலைமோதப்போகிறது. அதற்கு முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளது.

ஆடி மாதம் பிறக்க இன்னும் 10 நாட்கள் தான் உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் ஆகும். நாளை 8-ந்தேதி (2-ம் சனிக்கிழமை) நார்மல் நாள் தான், ஆனால் 9-ந்தேதி (ஞாயிறு) சுபமுகூர்த்த நாள் ஆகும். இதற்கு பிறகு ஆகஸ்ட் 20ம் தேதி தான் சுபமுகூர்த்தம் வரும். சுமார் 40 நாட்களுக்கு முகூர்த்தம் இல்லை.

Why has Tamil Nadu Government Transport Corporation announced that 800 special buses will be in operation today?

எனவே பலரும் வரும் ஞாயிற்றுக்கிழமை சுபநிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்கள். அத்துடன் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் மக்கள் கூட்டம் சொந்த ஊர் செல்ல அலைமோதும். இதை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் இது தொடர்பாக வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருந்ததாவது: ஜூலை 8-ம் தேதி (2-ம் சனிக்கிழமை) மற்றும் ஜூலை 9-ம் தேதி (ஞாயிறு) ஆகிய விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

ஆகவே சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி மற்றும் சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிட்டுள்ளோம்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டிய திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்காக இதுவரை 23 ஆயிரத்து 626 பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள்.

இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம் மட்டுமின்றி சொந்த வாகனங்களிலும் பலரும் படையெடுப்பார்கள் என்பதால் இன்று மாலை சென்னையில் வழக்கத்தைவிட அதிகமாக போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் சுற்றுலா தளங்களிலும் நாளை மற்றும் நாளை மறு நாள் அதிக கூட்டம் கூட வாய்ப்பு உள்ளது. வெளியூர் செல்ல திட்டமிடுவோர் அதற்கு ஏற்ப திட்டமிடுங்கள். பெருங்களத்தூர் பகுதியில் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் சென்னைக்குள் கண்டிப்பாக நெரிசல் அதிகமாகவே இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+