Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்முடியிடம் உயர் கல்வித்துறை பறிக்கப்பட்டது ஏன்? ஆளுநரை சமாதானப்படுத்தும் ஸ்டாலின்? பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக துணை முதல்வராக இன்று உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். அதேபோல் 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு 4 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இதுதவிர 6 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்படுகிறது. இதில் மூத்த அமைச்சர் பொன்முடியிடம் இருந்து உயர்கல்வித்துறை பறிக்கப்பட்டு வனத்துறை வழங்கப்படுகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதன் பின்னணியில் ஆளுநர் ஆர்என் ரவியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபடுகிறாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருக்கும் 3 பேர் நீக்கப்பட்டு 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இந்த அமைச்சரவை மாற்றம் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

ponmudi tamil nadu cabinet shuffle

இந்த விழாவில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகி உள்ளார். அதேபோல் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

மேலும் 3 பேர் இன்று அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட உள்ளனர். மேலும் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பொன்முடியிடம் இருந்து உயர்கல்வித்துறை பறிக்கப்பட்டு வனத்துறை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் மெய்யநாதன் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கயல்விழி செல்வராஜ்க்கு, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு பதில் மனிதவள மேம்பாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது.

வனத்துறை அமைச்சராக உள்ள மதிவேந்தன் ஆதிதிராவிடர் துறையும், பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறை, கைத்தறி மற்றும் கிராம தொழில்துறை, தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையுடன் சேர்த்து சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை வழங்கப்பட்டுள்ளது. உள்ளது. தங்கம் தென்னரசுவிடம் இருந்து மனிதவள மேம்பாட்டு துறை பறிக்கப்பட்டுள்ளது.

இதில் பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்து இருப்பது என்னவென்றால் அமைச்சர் பொன்முடியிடம் இருந்து உயர்கல்வித்துறை பறிக்கப்பட்டது தான். ஏனென்றால் பொன்முடி திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவருக்கு உயர் கல்வித்துறையில் நீண்ட அனுபவம் உள்ளது. அதுமட்டுமின்றி அடிப்படையில் அவர் ஒரு பேராசிரியர். பேராசிரியராக பணி செய்த பிறகு தான் அவர் திமுகவில் அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தாலே கல்வித்துறை அமைச்சர் என்பது பொன்முடி தான் எழுதப்படாத விதியாக இருந்து வந்தது.

இந்நிலையில் தான் தற்போது பொன்முடியிடம் இருந்து உயர் கல்வித்துறை பறிக்கப்பட்டு வனத்துறை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் அமைச்சர் பொன்முடியின் துறையை மாற்றி ஆளுநர் ஆர்என் ரவியை முதல்வர் ஸ்டாலின் சமதானம் செய்ய முயல்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதாவது தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் நேரடியாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அதோடு உயர்கல்வித்துறையுடன் ஆளுநர் ஆர்என் ரவிக்கு நெருக்கமான தொடர்பு உள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழத்தின் வேந்தராக ஆளுநர் தான் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஆர்என் ரவி உள்ளார்.

இதனால் பல்கலைக்கழத்தின் எந்த நடவடிக்கையையும் ஆளுநர் நினைத்தால் நிறுத்தி வைக்க முடியும். அதுமட்டுமின்றி ஆட்சிக் குழு மற்றும் கல்விக் குழு கூட்டங்களில் அவர்கள் பங்கேற்க முடியும். மேலும் பல பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்க முடியும். இதனை மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. துணைவேந்தர் நியமனங்களை ஆளுநர் மேற்கொள்ளும் அதிகாரத்தை பறிக்க திமுக அரசு முடிவு செய்தது.

இதற்காக தமிழ்நாடு அரசு, துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர்களிடமிருந்து மாற்றி மாநில அரசுக்கு அளிக்கும் இரண்டு மசோதாக்களை (தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம், 2022, சென்னை பல்கலைக்கழக திருத்தச் சட்டம், 2022)சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் தனது அதிகாரத்தை பறிப்பதால் ஆளுநர் ஆர்என் ரவி இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருந்தது.

இதனை பொன்முடி நேரடியாக விமர்சனம் செய்தார். அதேபோல் பொன்முடி தடாலடியாக பொதுவெளியில் பேசக்கூடியவர். ஆளுநர் உள்பட யாராக இருந்தாலும் கடினமான வார்த்தைகளால் பயன்படுத்தி விமர்சனம் செய்யும் தன்மை கொண்டவர். தற்போதும் ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் பொன்முடி இடையே சுமூகமாக உறவு என்பது இல்லை.

தற்போது தமிழ்நாட்டில் 5 பல்கலைக்கழங்களில் துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. அதேபோல் 3 பல்கலைக்கழங்களில் இன்னும் ஒரு ஆண்டுக்குள் துணை வேந்தர் பதவி முடிவுக்கு வர உள்ளது. 2 பல்கலைக்கழங்களில் ஓராண்டு நீட்டிப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. விரைவில் துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்பட வேண்டி உள்ளது. இதற்கு ஆளுநர் ஆர்என் ரவியின் அனுமதி தேவை. இப்படியான சூழலில் ஆளுநர் ஆர்என் ரவியுடன் இணக்கமாக செயல்பட முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்து பொன்முடியின் இலாகாவை மாற்றி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் தற்போது உயர்கல்வித்துறை என்பது புதிதாக அமைச்சரான கோவி செழியனிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவரும் மூத்த அரசியல் வாதியாகவும், பக்குவப்பட்ட அரசியல்வாதியாகவும் அறியப்படுகிறார். தமிழக அரசின் தலைமை கொறடாவாக பணியாற்றிய இவர் உயர் கல்வித்துறை அமைச்சராக செயல்படும்போது ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் தமிழக அரசு இடையே இணக்கமான சூழல் உருவாகும்.

இதன்மூலம் உயர் கல்வித்துறையின் கீழ் வரும் பல்கலைக்கழங்களில் துணை வேந்தர் நியமனம் உள்ளிட்டவற்றில் இணக்கமான முடிவுகளை எடுக்க முடியும் என்று ஸ்டாலின் நம்புகிறார். இதுதான் பொன்முடியை உயர் கல்வித்துறையில் இருந்து வனத்துறைக்கு மாற்றம் செய்திருப்பதன் பின்னணி என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+