Sandhya: கட்டிய மனைவியை வெட்டி கூறுபோட எப்படி மனது வந்தது.. பாலகிருஷ்ணன் சொன்ன பகீர் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல துண்டுகளாக, கட்டிய மனைவியான, துணை நடிகை சந்தியாவை, வெட்டி கூறுபோட பாலகிருஷ்ணனுக்கு எப்படி மனசு வந்தது என்பதுதான் இப்போது தமிழக மக்களில் பெரும்பாலானோருக்கு எழுந்துள்ள கேள்வி.

ஒரு சைக்கோ நபரால் மட்டுமே செய்யக்கூடிய அளவுக்கான இந்த கேடுகெட்ட காரியத்தை, சினிமாப் பட இயக்குநரான பாலகிருஷ்ணன் எப்படி செய்திருப்பார்? எப்படி இதை செய்ய முடிந்தது? என்ற சந்தேகம், எல்லோருக்குமே எழுகிறது.

ஆனால், காவல்துறை நடத்திய விசாரணையில் பாலகிருஷ்ணனிடமிருந்து இதற்கான பதிலை கறந்துவிட்டார்களாம்.

வயது வித்தியாசம்

வயது வித்தியாசம்

இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறியதாவது: எனக்கும் எனது மனைவிக்கும் 15 வயது வித்தியாசம். எனக்கு 51 வயதாகிவிட்டது. அவருக்கோ 35 வயதுதான் ஆனது. இந்த வயதில் பெண்களுக்கு இயல்பாகவே எழக்கூடிய ஆசைகள் அவருக்கும் இருந்தது. இதனால்தான் என்னை பார்த்தால் அவருக்கு பிடிக்கவில்லை. "வயதான கிழவனை கட்டி வைத்து விட்டீர்கள்" என அவரது வீட்டில் சொல்லி புலம்புவது அதிகரித்தது.

பல விஷயங்களில் வேற்றுமை

பல விஷயங்களில் வேற்றுமை

வயது மட்டுமின்றி, படிப்பு விஷயத்திலும், இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டவில்லை. நான் எஸ்எஸ்எல்சி. சந்தியாவோ பட்டதாரி. எப்படியோ எங்களுக்கு 2 குழந்தைகள் பிறந்துவிட்டாலும், சமீபகாலமாகவே, என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட சந்தியாவிற்கு ஆர்வம் இல்லை. என்னை அறுவறுப்பாக அவர் பார்ப்பதாகவே நான் உணர்ந்தேன்.

அழகுதான் காரணம்

அழகுதான் காரணம்

உறவுக்கு அழைத்தாலும், அழகு கெட்டுவிடும் என்று ஒரு காரணத்தை கூறி, என்னுடன் உடலுறவு வைக்க உடன்படாமல் இருந்தார். இதனால் எனக்கு இன்னும் கோபம் அதிகரித்தது. "எல்லாவற்றுக்கும் காரணம், இந்த உடல் அழகுதானே" என்று, சந்தியாவை பார்க்கும்போதெல்லாம், என் மனமெல்லாம் ஒரு வித வெறியேறும். பல்லை நறநறவென கடிப்பேன். இந்த அழகே இல்லாமல் போனால் என்னை யாரும் அறுவெறுப்பாக பார்க்க மாட்டார்கள்தானே என நினைத்தேன்.

ஆத்திரத்தால் கொலை

ஆத்திரத்தால் கொலை

கடந்த பொங்கல் பண்டிகைக்கு பிறகு, எனக்கும் சந்தியாவுக்கும் நடுவே மோதல் அதிகரித்தது. சில நாட்களில் அவர் வீட்டுக்கே வரவில்லை. விருப்பம் போல வாழ்க்கை நடத்தினார். அதை தட்டிக்கேட்டால், அவமானப்படுத்துவதை போல ஒவ்வொரு கேள்வியையும் முன்வைப்பார். எனது ஆத்திரம் தலைக்கு ஏறியது. எனவேதான், மிக கடுமையான கோபத்தில், சந்தியாவை கொன்றதோடு, சரமாரியாக வெட்டி எறிந்தேன். இப்போது எனது மனதுக்கு திருப்தியாக உள்ளது. அதனால்தான் என்னால் சிரித்த முகத்தோடு இருக்க முடிகிறது. இவ்வாறு பாலகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில் கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+