மேக வெடிப்பாம்.. சென்னையில் மழை கொட்டி வெள்ளமா போகுது.. ஏன் வானிலை மையம் கணிக்கவில்லை?
சென்னை: மேக வெடிப்பு போல் சென்னையில் கடந்த 2 மணி நேரமாக மழை கொட்டி வரும் நிலையில் இதுகுறித்து வானிலை முன்னறிவிப்பு ஏதும் இதுவரை விடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னையில் டிசம்பர் மாதம் அதுவும் மார்கழி மாதத்தில் இன்றைய தினம் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதிலும் சில இடங்களில் தொடர்ந்து மணிக்கணக்காக மழை பெய்து வருகிறது.
இந்த திடீர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சென்னை தலைமைச் செயலகத்தினுள் தண்ணீர் புகுந்ததால் ஊழியர்கள் வெளியேறியுள்ளனர்.

ஆயிரம்விளக்கு
மழையால் அலுவலகம் செல்வோர் விரைந்து கிளம்பியுள்ளதால் ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, அண்ணா சாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், கிண்டி, புதுப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தேங்கிய தண்ணீரில் வாகனத்தை இயக்கும் போது பல்வேறு இடங்களில் வாகனங்கள் பழுதடைந்து நின்று விடுகிறது.

வானிலை ஆய்வாளர்கள்
இது போன்ற திடீர் மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. தனியார் வானிலை ஆர்வலர்களும் டிசம்பர் 31, ஜனவரி 1 அல்லது 2 ஆகிய தேதிகளில்தான் மழை பெய்யும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய தினம் திடீரென மதியம் முதல் கனமழை சென்னையில் பெய்து வருகிறது.

குளிர்ச்சியான சூழல்
சென்னையில் இவ்வாறு பெய்து வரும் மழையை கிட்டத்தட்ட மேகவெடிப்பு என சொல்லலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார். மார்கழி மாத குளிரில் இந்த மழையால் மேலும் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. எம்ஆர்சி நகர், மெரினா, மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

முன்னறிவிப்பு இல்லை
இத்தனை கனமழை பெய்யும் நிலையில் இதுகுறித்து வானிலை முன்னறிவிப்புகள் ஏதும் வராதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த முறை ரேடாரில் பிரச்சினை என சொல்லப்பட்டது. அது போல் இந்த முறை ஏதேனும் பிரச்சினையா என்ற கேள்வியும் எழுகிறது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications