இதுதான் பாஜக.. அதிமுக கூட்டணிக்காக அமித் ஷாவே இறங்கி வந்தது ஏன்? பின்னணியில் பயங்கர காரணம்!
சென்னை: அதிமுகவிற்கான கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும் விவாதம், மோதலுக்கு பின்பே .. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது.

இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.
கூட்டணி மோதல்: கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களை ஆதரிக்கும் விதமாகவும்.. அவர்களை கவரும் விதமாகவும் பல விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். அதிமுக - பாஜக மோதல் காரணமாக அவர்கள் கூட்டணி முறிந்துள்ளது. 2024 லோக்சபா, 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து தனியாக போட்டியிடும் என்று என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சிஏஏவை ஆதரித்தோம். வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதேபோல் இஸ்லாமியர்களை கவரும் விதமாக பல விஷயங்களை அவர் பேசி வருகிறார். பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்பது போல பேசி வருகிறார்.
எதிர்க்கவில்லை: அதே சமயம் பாஜகவை எங்கும் எடப்பாடி நேரடியாக எதிர்க்கவே இல்லை. எந்த இடத்திலும் பாஜகவிற்கு எதிராக அவர் கருத்து சொல்லவே இல்லை. உதாரணமாக பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்ற எடப்பாடி, 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இசுலாமிய சகோதரி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குழந்தை உள்பட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை முன்கூட்டியே குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து, பாதிக்கப்பட்ட சகோதரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த விடுதலையை ரத்து செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் எடப்பாடி.. குற்றவாளிகளை விடுதலை செய்த பாஜக அரசை பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை. பாஜகவை விமர்சனம் செய்யாமல் மேம்போக்காக தீர்ப்பை மட்டும் வரவேற்றார்.
மீண்டும் கூட்டணி: இந்த நிலையில்தான் பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் உருவாக்கலாம் என்கிறார்கள், தென்னிந்தியாவில் பாஜக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தொடர் தோல்விகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம்.
2024ல் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பி இடங்களை வெல்லும் விதமாகவும்.. 2026ல் கூடுதல் சட்டசபை இடங்களை வெல்லும் விதமாகவும் பாஜக எடப்பாடி உடன் சமாதானமாகி செல்ல இருக்கிறதாம். அதிமுகவிற்கான கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன காரணம்?: 1. தேசிய அளவில் பாஜக லோக்சபா தேர்தலில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்றே பாஜககருதுகிறது , இருந்தாலும் தென்னிந்தியாவில் வலுவாக கால் பதிக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. 2, தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் வேண்டும் என்பதில் பாஜக தீர்க்கமாக இருக்கிறது. அதற்கு அதிமுக தயவு தேவை. 3. 2024ல் கூட்டணி இருந்தால்தான் , 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணியை தொடர முடியும். 4. தென்னிந்தியாவில் பாஜக வலுவாக இல்லை என்ற விமர்சனத்தை சரி செய்ய அதிமுகவின் தேவை இருக்கும் என்பதால் பாஜக இறங்கி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications