ஒரு வாரத்திற்கு மேல் ஆச்சு.. ஒரு வார்த்தை பேசாத அண்ணாமலை.. அப்படியே சைலண்ட்.. என்ன ஆச்சு?
சென்னை: பாஜகவில் உறுப்பினர்கள் புதுப்பிப்பு, புதியவர்கள் சேர்ப்பு ஆகிய பணிகள் செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கியது. புதுப்பிப்பதில் முதல் நபராக பிரதமர் மோடி தனது உறுப்பினரை புதுப்பித்து உள்ளார். அவரது உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டதும் தமிழக பாஜகவில் இதே பணிகள் தொடங்கவிருக்கிறது. இதனால் தமிழ்நாடு பாஜக பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறது.. ஆளுநர் ஸ்டேட்மென்ட்கள்.. எச். ராஜா சந்திப்புகள் என்று பாஜக ஆக்டிவாக உள்ளது.. ஆனால் இத்தனை காலம் பாஜகவின் முகமாக தமிழ்நாட்டில் இருந்த அண்ணாமலை இப்போது ஆப்சென்ட் ஆகி உள்ளார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வியை கற்பதற்காக லண்டன் சென்றுள்ள அண்ணாமலை, தமிழக பாஜக நிர்வாகிகளிடம், உறுப்பினர் சேர்க்கையில் சீரியஸாக இருக்க வேண்டும் ; 1 கோடி உறுப்பினர்கள் நம் இலக்கு ; ஏற்கனவே நம்மிடம் 50 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 50 லட்சம் பேரை புதிதாக சேர்க்க வேண்டும்.

1 கோடி இலக்கை அடைந்துவிட்டால் 2026 தேர்தலில் நாம் நினைப்பது சாத்தியமாகும் என்று நம்பிக்கையாக பேசியிருக்கிறார் அண்ணாமலை. இதற்கிடையே, அண்ணாமலை லண்டனுக்கு செல்வது செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் தற்போது முன்னதாகவே லண்டன் கிளம்பிச் சென்றிருப்பது ஏன்? என்கிற கேள்வி தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகிகளிடம் எதிரொலிக்கச் செய்துகொண்டிருக்கிறது.
லண்டன் பயணம்: பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு படிக்க சென்றுள்ளார். அவர் லண்டன் சென்றுள்ள நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்தோ.. இல்லை லண்டனில் அண்ணாமலை இருக்கும் புகைப்படங்களோ வெளியே வரவில்லை.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வர தொடங்கி உள்ளன. பல்வேறு அரசியல் நிபுணர்கள் இது தொடர்பாக இணையத்தில் தகவல்களை வெளியிட தொடங்கி உள்ளனர்.
அமைதி: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்று உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றார். எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் வழியாக லண்டன் சென்றார்.
அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில் அவரை வரவேற்று யாரும் புகைப்படங்களை வெளியிடவில்லை. பாஜக அதிகாரபூர்வ பக்கமோ, அண்ணாமலையே, இந்த பயணம் பற்றிய புகைப்படங்களை வெளியிடவில்லை. அவர் லண்டன் சென்று ஒரு வாரம் ஆகியும் கூட அமைதியின் உச்சத்தில் இருக்கிறார். இதுவரை ஒரு புகைப்படம் கூட அவர் சார்பாக வெளியிடப்படவில்லை.
சர்வதேச அரசியல் என்ற படிப்பை படிக்க அண்ணாமலை சென்றுள்ளார். அது சான்றிதழ் படிப்பு. சில மாதங்கள் அங்கு தங்கி படிக்க வேண்டும். இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலைக்கு இந்த முறை தேர்வாகி உள்ளார். இதற்காக அங்கே செல்லவும் அண்ணாமலை 4-5 மாதங்கள் அங்கேயே இருக்க உள்ளார்.
அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில்.. அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதே போல எஸ்ஆர் சேகர், கனகசபாபதி, சக்கரவர்த்தி, ராம.சீனிவாசன், முருகானந்தம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவில் பழைய மூத்த நிர்வாகியான எச். ராஜா கை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. உதாரணமாக நேற்று பேட்டி அளித்த எச். ராஜா, பழனியில் நடைபெற்றது முருகன் மாநாடு அல்ல; அது இந்து விரோத மாநாடு; முருகனை வைத்து தமிழ்நாட்டில் ஏமாற்று அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பேட்டி அளித்துள்ளார். இத்தனை நாட்களாக பெரிதாக பேட்டி கொடுக்காமல் அமைதியாக இருந்த எச். ராஜா திடீரென இப்படி பேட்டி அளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
அண்ணாமலை பேட்டி.. டிசம்பர் 2025-லேயே விலக முடிவு செஞ்சேங்க.. அப்போ அமித் ஷா சொன்னது என்ன தெரியுமா? -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணாமலை! எங்கிருந்தாலும் வாழ்க..! சொன்னது நயினார் நாகேந்திரன் இல்லை! யார்னு பாருங்க! -
லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? தீயாகப் பரவிய தகவல்.. உண்மை என்ன? -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம்












Click it and Unblock the Notifications