அண்ணாமலை வரும்போது கோஷமிட்ட பாஜக தொண்டர்கள்.. மனதுடைந்துபோன வி.பி.துரைசாமி! வெடித்து கிளம்பிய கோபம்
சென்னை: நேற்று சென்னையில் பாஜக சார்பாக நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் வி. பி. துரைசாமி கோபப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து நேற்று பாஜக சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை விமர்சனம் செய்தும், திராவிட மாடலை விமர்சனம் செய்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பாஜக மாநில துணைத் தலைவர் வி. பி. துரைசாமி கோபம் அடைந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

வி. பி. துரைசாமி கோபம்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு.. என்று வி. பி. துரைசாமி பேச்சை தொடங்கினார். அப்போது பின்னால் இன்னொரு மைக்கை வைத்து பாஜக நிர்வாகி ஒருவர்.. பாஜக தலைவர் அண்ணாமலை வருகிறார்.. வந்துகொண்டே இருக்கிறார்.. பாரத் மாதா கீ ஜெ.. பாரத் மாதா கீ ஜெ.. பாரத அன்னையின் புகழ் வாழ்க.. வாழ்க என்று கூறினார். தனது பேச்சு பாதியில் நிறுத்தப்பட்ட கோபத்தில் வி. பி. துரைசாமி நின்று கொண்டு இருந்தார்.

அண்ணாமலை வி. பி. துரைசாமி
இதையடுத்து பாரத் மாதா கீ ஜெ கோஷம் நிறுத்தப்பட்டதும், மீண்டும் வி. பி. துரைசாமியை பேசும்படி அங்கிருந்த பாஜக நிர்வாகிகளும், நாராயண் திருப்பதியும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இருப்பா இடையில் வேற யாராவது வருவாங்க.. அவங்க எல்லாம் வரட்டும் அப்பறம் பேசலாம்.. எனக்கு அசிங்கமா இருக்கு.. அவர் வரட்டும்.. அவர் வந்ததும் பேசிக்கலாம் என்று கோபமாக கூறினார். அதற்கு அங்கு இருந்த பாஜக நிர்வாகிகள் சிலர் வி. பி. துரைசாமியை பேசும்படி தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்
ஆனால்.. அவர் வரட்டும்.. வந்ததும் பேசலாம்.. என்னை என்ன பேச சொல்லி மிரட்டுறீங்களா என்று கோபமாக கேட்டார். இதையடுத்து அங்கு அந்த நேரம் பார்த்து பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார். உடனே அண்ணாமலையிடம் வி. பி. துரைசாமி.. எல்லோரும் பேசிட்டாங்க.. நான் மட்டும்தான் இன்னும் பேசவில்லை. நீங்கள் அனுமதி கொடுத்தால் நான் பேசுவேன் என்று கூறினார்.

பாஜக வி. பி. துரைசாமி
இதையடுத்து துரைசாமியிடம் அண்ணாமலை.. பேசுங்கள்.. பேசுங்கள் என்று கூறினார். இதன்பின் வி. பி. துரைசாமி.. எனக்கு தலைவர் அனுமதி கொடுத்துவிட்டார். அவரின் அனுமதியோடு பேசுகிறேன் என்று கூறினார். துரைசாமி இப்படி கோபமாக பேசியதும், அவரின் பேச்சு பாதியில் தடுக்கப்பட்டதும் வீடியோவாக வெளியாகி இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications