வேலையை காட்டும் சீனா.. அவசர அவசரமாக சென்னை லைட் ஹவுஸ் மேலே ஏறிய "எக்ஸ்பர்ட்ஸ்".. என்னாச்சு?
சென்னை: மெரினாவில் இருக்கும் ரேடார் தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது அங்கு தொழில்நுட்ப வல்லுனர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
Recommended Video
யுவான் வாங்க் 5 எனப்படும் சீனாவின் உளவு கப்பல் இலங்கையை நெருங்கி வருகிறது. இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ள நிலையில் திடீரென சீனாவின் உளவு கப்பல் இலங்கைக்கு திரும்பி உள்ளது.
இந்த கப்பல் இலங்கைக்கு வர கூடாது என்று ஏற்கனவே இலங்கை அரசு சீனாவிடம் தெரிவித்தது. ஆனால் அதையும் மீறி சீனாவின் உளவு ராணுவம் இலங்கைக்கு அருகே வந்துள்ளது.
இலங்கையில் உள்ள ஹம்பன்டோடா துறைமுகத்திற்கு மிக அருகில் சீனாவின் கப்பல் வந்துள்ளது.

இலங்கை
இதனால் இந்திய பெருங்கடலில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இலங்கையை நோக்கி சீனாவின் யுவான் வாங்க் 5 கப்பல் வர கூடாது என்று இலங்கையின் வெளியுறவுத்துறை கோரிக்கை வைத்து இருந்தது. ஆனால் இலங்கை அரசு சொன்ன பின்புதான் சீனாவின் கப்பல் தனது வேகத்தை உயர்த்தியது. முக்கியமாக ஒரு கட்டத்தில் 600 நாட்டிக்கல் மைல் வேகத்தில் சீனாவின் கப்பல் நகர தொடங்கியது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கப்பல்
இந்த நிலையில் அந்த கப்பல் அந்தமானை நோக்கி திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. 5 நாட்ஸ் வேகத்திற்கு கப்பலின் வேகம் குறைந்துள்ள நிலையில், அது இன்று அந்தமான் பக்கம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த கப்பல் இலங்கையை நோக்கி தனது திசையை திருப்பி உள்ளதாக இலங்கை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா இதை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

அந்தமான்
இலங்கையை நோக்கி சீனாவின் கப்பல் வருவது ஏன்? சீனாவின் திட்டம் என்ன? என்று இந்தியா தீவிரமாக உற்றுநோக்கி வருகிறது. இதற்காக இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படை தீவிர ரோந்து பணிகளை செய்து வருகிறது. கடற்படையின் பல்வேறு கப்பல்கள் ரேடார்களுடன் தீவிர சோதனைகளை செய்து வருகிறது. சீனா தென்னிந்தியாவை குறி வைக்கிறதா? அல்லது இலங்கையை ஆக்கிரமிக்க நினைக்கிறதா என்று இந்தியா கண்காணித்து வருகிறது.

மெரினா
இந்த நிலையில்தான் மெரினாவில் இருக்கும் ரேடார் தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது. மெரினாவில் லைட் ஹவுசில் வைக்கப்பட்டு உள்ள ரேடார் தற்போது பழுதாகி உள்ளது. கடந்த 10 நாட்களாக இது பயன்பாட்டில் இல்லை. தற்போது அங்கு தொழில்நுட்ப வல்லுனர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ரேடாரை சரி செய்யும் பணிகளை செய்து வருகின்றனர். ரேடாரில் முக்கியமான சில கருவிகள் பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது,

ரேடார் சோதனை
இந்த ரேடார் மூலம் இந்திய பெருங்கடல் கண்காணிக்கபடும். அங்கு வரும் புதிய கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். அதேபோல் கடலில் ஏற்படும் மாற்றங்களையும் கண்டுபிடிக்க முடியும். மேலும் வானிலை மாற்றங்களை கணிக்கவும் இது உதவியாக இருக்கும். இந்த நிலையில்தான் தற்போது அண்ட் ரேடாரை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் சில நாட்களில் அந்த ரேடார் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications