எங்ககிட்ட காட்டுன எக்சிட் போல் முடிவு.. வெளியே வந்தா என்ன ஆகும் தெரியுமா? காங்கிரஸ் பிடித்த பாயிண்ட்
சென்னை: பாஜகவிற்கு ஆதரவாக தேசிய அளவில் வெளியாகி இருக்கும் லோக்சபா தேர்தல் முடிவுகள் உண்மையானது கிடையாது. அதில் அதீத கற்பனைகள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி நம்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது.

இந்த நிலையில் தற்போது 2024 லோக்சபா தேர்தலுக்கான எக்சிட் போல் கணிப்புகள் உள்ளன. இந்த முறை மொத்தமாக பாஜகவின் என்டிஏ கூட்டணி 339-340 இடங்களை வெல்லலாம், அதாவது லேசான சறுக்கல் இருக்கலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன. இதன் மூலம் பாஜக மீண்டும் ஆட்சி மீண்டும் அமையும் என்று கணிப்புகள் கூறுகின்றன.
அதே சமயம் எதிர்க்கட்சி கூட்டணி 151-164 இடங்களில் வெல்லும் வாய்ப்புகள் இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. மற்ற கட்சிகள் 15- 25 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக இருப்பதாக கணிப்புகள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் நம்பிக்கை: ஆனால் பாஜகவிற்கு ஆதரவாக தேசிய அளவில் வெளியாகி இருக்கும் லோக்சபா தேர்தல் முடிவுகள் உண்மையானது கிடையாது. 2024 லோக்சபா தேர்தலில் இந்திய கூட்டணி 295 இடங்களுக்கும் மேல் வெல்லும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. எக்சிட் போல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக தங்கள் கட்சியின் சொந்த கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
முதல் ஆளாக நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று காங்கிரஸ் கட்சியே இந்தியா கூட்டணி பற்றி அறிவித்துள்ளது. நேற்று இந்திய கூட்டணி மீட்டிங்கிற்கு பின் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.
தற்போது வெளியாகி உள்ள அதீத கற்பனைகள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி நம்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின் சில காரணங்களை அவர்கள் சொல்கின்றனர்.
காங்கிரஸ் காரணம்: காங்கிரஸ் உள் வட்டாரம் சொல்லும் காரணங்களாவது, பாஜக ஒரு narrativeஐ செட் செய்ய பார்க்கிறது. அவர்களுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. தொங்கு சபை உருவானால்.. மற்ற கட்சிகளை இழுக்க இப்போதே தங்கள் மீது ஒரு பாசிட்டிவ் இமேஜை உருவாக்குவார்கள்.
பாஜக வெல்லும் என்று ஒரு இமேஜை உருவாக்கி.. இப்போதே பல்வேறு மாநில கட்சிகளுக்கு தூது விட்டு பேசி வைத்துக்கொள்வார்கள். அதோடு எக்சிட் போல் மூலம் இந்திய கூட்டணியில் பிரச்சனை ஏற்படும். இந்திய கூட்டணி உடையும் என்றும் பாஜக திட்டமிடுகிறது. ஜூன் 4ல் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் போது நிலைமையை தங்களுக்கு சாதகமாக மாற்ற பாஜக இப்படி எக்சிட் போலை வெளியிட வைத்துள்ளது.
உண்மையான எக்சிட் போலை மீடியா வெளியிடவில்லை. அதை காங்கிரஸ் டாப் லீடர் பார்த்தனர் . அது எல்லாம் வெளியே வந்தால் என்ன ஆகும். இப்போது எக்சிட் போலில் பாஜக தோற்கும் என்று வருகிறது என்று வைத்துக்கொள்வோம்.
உடனே எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும். பிரதமரை முடிவு செய்யும். அதோடு என்டிஏ கூட்டணி கூட உடையும். இதை எல்லாம் அனுமதிக்க கூடாது. ஜூன் 4 வரை இந்திய கூட்டணியை எப்படியாவது உடைக்க பார்க்க வேண்டும் என்று பாஜக இப்படி எல்லாம் எக்சிட் போல வெளியாக வைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி நம்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications