ஒருநாள் விடாமல்.. இந்தியாவிற்கு தினமும் போனை அடிக்கும்.. டிரம்பின் வலது கை.. என்ன காரணம்?
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வலதுகை என்று அறியப்படும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் இந்தியாவுடன் நெருங்கிய தொடரால் இருப்பதாக கூறியுள்ளார், மேலும் அவர் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இந்தியாவின் உயர் வர்த்தக அதிகாரியுடன் பேசி வருவதாகவும் கூறினார்.
தினமும் அவர் இந்தியாவின் உயர் வர்த்தக அதிகாரியுடன் போனில் பேசி வருகிறாராம். பல முக்கியமான தகவல்களை நேரடியாக இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனைகளை செய்து வருகிறாராம்.

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக வரி விதிப்பு தொடர்பான வெளியுறவுக்கொள்கை இறுதி செய்யப்பட உள்ளன. இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் இந்த ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா மீது அமெரிக்கா 26 சதவிகித வரி விதிப்பை போடுகின்றது. இதை குறைக்கும் விதமாக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. முக்கியமாக இந்தியாவில் நடக்கும் திட்டங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் டெண்டர் எடுக்கும் விதமாக சில சலுகைகள் இந்த ஒப்பந்தத்தில் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கு 500 பில்லியன் டாலர் அளவிற்கு இதனால் வருவாய் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
களமிறக்கப்படும் ஆட்கள்
இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப்பை தேவையான நேரங்களில் இந்தியாவிற்கு சாதகமாக மாற்றும் வகையில் அங்கே அதிகாரிகளை களமிறக்க டெல்லியில் உள்ள டாப் லெவல் வெளியுறவு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளார்களாம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூளையாக கருதப்படும் மூத்த ஆலோசகரான ஜேசன் மில்லரை வாஷிங்டனில் தனது லாபி பணிகளுக்காக இந்திய அரசாங்கம் களமிறக்கி உள்ளது. ஜேசன் மில்லர் அமெரிக்க தகவல் தொடர்பு லாபியிஸ்ட் ஆவார். அரசியல் ஆலோசகர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அரசியல் ரீதியாக பல லாபி வேலைகளை செய்ய கூடியவர். டொனால்ட் டிரம்ப் 2016 அதிபர் தேர்தலில் பிரச்சாரம் செய்ய திட்டங்களை வகுத்தவர் இவர்தான். அந்த தேர்தலில் டொனால்ட் டிரம்பின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஆக இவர் செயலாற்றிய விதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
2010 முதல் 2016 வரை, மில்லர் ஜேம்ஸ்டவுன் அசோசியேட்ஸில் பார்ட்னராகவும் நிர்வாக துணைத் தலைவராகவும் இருந்தார். அதன்பின் அதிபர் டிரம்பின் தனிப்பட்ட ஆலோசகராகவும் செயலாற்றி வருகிறார். இவரைத்தான் அதிபர் டிரம்ப்பிடம் லாபி செய்வதற்காக இந்தியா களமிறக்கி உள்ளது. காஷ்மீர் விவகாரம், சர்வதேச அரசியல், விசா, வரி விதிப்பில் இந்தியாவிற்கு சாதகமான முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக இவர் களமிறக்கப்பட்டு உள்ளார். இந்தியாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து டிரம்பின் முன்னாள் மெய்க்காப்பாளரான கீத் ஷில்லரை அமெரிக்காவில் தனது பிரதிநிதியாக பாகிஸ்தான் நியமித்துள்ளது.
பாகிஸ்தான் பாய்ச்சல்
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் சார்பாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க உள்ளனர். இந்தியாவிற்கு முன்னதாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் தலைகள் விரைந்து உள்ளனர்.
பாகிஸ்தான் மீது அமெரிக்கா 29% வரி விதிப்பை மேற்கொண்டு உள்ளது. பாகிஸ்தான் காரணமாக அமெரிக்காவிற்கு 3 பில்லியன் டாலர் வர்த்தக வரி இழப்பு உள்ளது. இதை சரிகட்டும் வகையில், அமெரிக்காவை சமாதானம் செய்யும் வகையில் பாகிஸ்தான் தலைகள் அமெரிக்காவிற்கு விரைந்துள்ளனர்.
இந்தியா அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதால் பாகிஸ்தான் அவசர அவசரமாக டிரம்ப்பை சந்திக்க முயன்று வருகின்றது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications