டாப் கியரில் போய்கிட்டு இருக்கும் போதே.. சட்டென பிரேக் போட்டு.. எடப்பாடியா இப்படி? மிஸ் பண்ணிட்டாரே
சென்னை: கடந்த சில நாட்களாக அடித்து ஆடிக்கொண்டு இருந்த எடப்பாடி பழனிசாமி.. தற்போது சட்டென தனது வேகத்திற்கு பிரேக் போட்டுள்ளார். அதிமுகவினர் உற்சாகத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சட்டென அவர் பிரேக் அடித்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாட்டையே உலுக்கியது. கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக உயர்ந்து உள்ளது.

இந்த கள்ளக்குறிச்சி விவகாரம் அதிமுகவை எழுச்சி அடைய செய்துள்ளது. எடப்பாடி தலைமைக்கு கீழ் அதிமுக அடுத்தடுத்து தோல்வி அடைந்ததே சசிகலா இப்படி பொங்கி எழ காரணம். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
மீண்டு வரும் அதிமுக: அதில் இருந்து மீண்டு வரும் வகையில் அதிமுக இதில் இறங்கி அடித்தது. அதிமுக எங்கே உடையுமோ என்று கருதப்பட்ட நிலையில்தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் மிகப்பெரிய அளவில் அரசியல் ரீதியான மாற்றங்கள் தெரிய தொடங்கின.
முன்பு எடப்பாடி அடிக்கடி ஓய்வு எடுத்தது, பெரிதாக வெளியே தலைகாட்டாமல் இருந்தது போன்ற நடவடிக்கைகள் இப்போது இல்லை. எடப்பாடி பழனிசாமி மேலும் ஆக்டிவ் ஆகி உள்ளார். அவரின் செயல்பாடுகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
கடுமையான விமர்சனங்களை வைப்பது, நேரடியாக களத்திற்கு செல்வது அதிமுகவிடம் அதிகம் மிஸ் ஆனது. அது தற்போது எடப்பாடியிடம் தெரிய தொடங்கி உள்ளது. திமுக முன்பு எதிர்க்கட்சியில் இருந்த போது போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று எப்போதும் ஸ்டாலின் லைம்லைட்டில் இருப்பார். அது அதிமுகவிடம் மிஸ் ஆனது. தற்போது அது மீண்டும் வந்துள்ளது.
முக்கியமாக மக்களை நேரில் சந்திப்பது... மக்களிடம் இருந்து அரசியலை செய்வது என்று எடப்பாடி பழனிசாமியிடம் நல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கி உள்ளன.
பிரேக் போட்டுட்டார்: கடந்த சில நாட்களாக இப்படி அடித்து ஆடிக்கொண்டு இருந்த எடப்பாடி பழனிசாமி.. தற்போது சட்டென தனது வேகத்திற்கு பிரேக் போட்டுள்ளார். அதிமுகவினர் உற்சாகத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சட்டென அவர் பிரேக் அடித்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை செய்யப்பட்டது.
தற்போது சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பெரிய அளவில் களத்தில் இறங்கி போராடவில்லை. ஒரு மாநில தலைவர் பலியானதற்கு எடப்பாடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கலாம், போராட்டங்களை மேற்கொண்டு இருக்கலாம், அதிமுக லைம்லைட்டில் இருக்கும் போதே அடித்து வீசி இருக்கலாம்.. ஆனால் இந்த விவகாரத்தில் சட்டென எடப்பாடி போட்ட பிரேக் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications