ஜி 7 கூட்டத்திற்கு மோடியை அழைக்காத கனடா? கூட்டத்தை புறக்கணிக்கும் இந்தியா? எதிரியாகும் உலக நாடுகள்?
சென்னை: கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமாக இருப்பதால், வரவிருக்கும் G7 உச்சிமாநாட்டிற்காக இந்தியா இதுவரை அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பிரதமர் நரேந்திர மோடி கனடாவுக்குச் செல்வது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. G7 என்பது உலகின் மிகவும் வலிமையான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, யுனைடெட் கிங்டம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவற்றின் குழுவாகும். இதில் ஐரோப்பிய ஒன்றியம் (EU), IMF, உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் கலந்து கொள்கின்றன.

தென்னாப்பிரிக்கா, உக்ரைன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கனடாவின் அழைப்புகளை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவிற்கு இதுவரை அழைப்பு செல்லவில்லை. இதனால் பிரதமர் மோடி முதல்முறை இந்த கூட்டத்தை புறக்கணிக்க உள்ளார்.
ஜூன் 15-17 வரை கனடாவில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டிற்கு இந்தியா இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அழைப்பையும் பெறவில்லை, மேலும் இந்தியா தரப்பும்.. அழைப்பு வந்தாலும் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு பிரதமர் மோடி கனடாவுக்குப் பயணம் செய்தால், பாதுகாப்புக் ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருப்பதாக கூறப்படுகிறது.
என்ன மோதல்?
கனடா இந்தியாவிற்கு எதிராக திரும்ப தொடங்கி உள்ளது. முக்கியமாக காலிஸ்தானிகளுக்கு கனடா இடம் கொடுக்கிறது. இந்தியாவில் இருந்து காலிஸ்தான் என்ற நாட்டை உருவாக்க காலிஸ்தானியர்கள் போராடி வருகின்றனர். இதற்கு நேரடியாக மறைமுகமாக கனடா ஆதரவு அளித்து வருகிறது.
இதனால் இந்தியா கனடா இடையே மோதல் உள்ளது. கனடாவில் ஆட்சி மாறினாலும் கூட.. அங்கே புதிய பிரதமர் மார்க்கும் கூட இந்தியாவிற்கு எதிராகவே உள்ளார். கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த வருடம் ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி இருந்தார்.
இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருக்கிறது.
கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்று கனடா கூறி இருந்தது.
செல்லவில்லை
கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமாக இருப்பதால், வரவிருக்கும் G7 உச்சிமாநாட்டிற்காக இந்தியா இதுவரை அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி கனடாவுக்குச் செல்வது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் போரில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு தரவில்லை. அதேபோல் சீனா, துருக்கி எதிராக மாறி உள்ளன. மற்ற பல நாடுகளும் இந்தியாவிற்கு நேரடியாக ஆதரவு தரவில்லை. இப்போது ஜி 7 நாடுகள் கூட்டத்திலும் கலந்து கொள்ள முடியாத மோசமான சூழல் ஏற்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications