அமெரிக்க தூதரக விருந்து! விவிஐபிக்கள் போன "டின்னர்"! பிடிஆரும் இருந்தாராமே? விசாரிக்கும் உளவுத்துறை?
சென்னை: சென்னையில் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்ட விருந்து ஒன்றை குறித்து மத்திய உளவுத்துறை விசாரித்து தகவல் சேகரித்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய உளவுத்துறை சார்பாக சில அதிகாரிகள் பணியாற்றுவார்கள். மாநில பாதுகாப்பு, மாநில சட்ட ஒழுங்கு, மாநில அரசு சார்பாக எடுக்கப்படும் முடிவுகளை கண்காணிக்க இவர்கள் தீவிரமாக பணிகளை செய்வார்கள்.
அதிலும் கடலோர மாநிலங்கள், எல்லையோர மாநிலங்களில் பாதுகாப்பு தொடர்பாக தகவல்களை திரட்ட இவர்கள் தொடர்ந்து ஆய்வு பணிகளை செய்வார்கள்.

விசாரணை
அந்த வகையில்தான் தமிழ்நாடு அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்ட மீட்டிங் ஒன்றை உளவுத்துறை வட்டாரங்கள் விசாரித்து வருகிறதாம். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கடந்த வாரம் இரவு சில முக்கிய வி.வி.ஐ.பி.க்களுக்கு டின்னர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். நீண்ட நேரம் இந்த மீட்டிங் நடந்தது.

டின்னர்
இந்த மீட்டிங்கில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அமெரிக்க அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அதே சமயம் சில திரை பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதேபோல் சென்னையை பறைசாற்றும் சில விவிஐபிக்கள், பிஸ்னஸ்மேன்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இரவு டின்னர் வரை மீட்டிங் நடந்து.. பின்னர் விருந்து கொடுக்கப்பட்டு, போட்டோக்களும் எடுக்கப்பட்டு மீட்டிங் முடிந்துள்ளது.

உளவுத்துறை
இந்த நிலையில் எதற்காக இந்த டின்னர் ? பி.டி.ஆர்.கலந்து கொண்டது எதற்காக? என்றெல்லாம் விசாரித்திருக்கிறது மத்திய உளவுத்துறை. இந்த மீட்டிங்கில் கலந்து கொண்ட விவிஐபிக்கள் யார். அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஏன். அங்கே இவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை எல்லாம் பற்றி உளவுத்துறை விசாரித்து வருகிறதாம்.பின்னர் இது தொடர்பான ரிப்போர்ட் தேவைப்பட்டால் மத்திய உள்துறைக்கு அனுப்பப்படலாம்.

சாதாரண கூட்டம்
ஆனால் அரசு தரப்பில் விசாரித்ததில்.. இது மிகவும் சாதாரண கூட்டம் என்றே தகவல்கள் வருகின்றன. அமெரிக்காவின் சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் விருந்து கொடுத்துள்ளது. இருநாட்டு நட்புறவை பாராட்டும் வகையில் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள், சில பிரபலங்கள் மரியாதையை நிமித்தமாக அழைக்கப்பட்டனர், மற்றபடி வேறு எதுவும் இல்லை.. என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications