Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணத்தை எவ்வாறு பெருக்குவது / கையாள்வது ? பொருளாதார நிபுணர் ராஜேஷ் சொன்ன முக்கியமான விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனிநபர் நிதி மேலாண்மையை ஏன் பள்ளியிலும் கல்லூரியிலும் சொல்லித்தர வேண்டியது அவசியமாகிறது? நமது பாடத்திட்டங்கள் எதிலும் இந்த சப்ஜெக்ட் பேசப்படவில்லை. பணத்தை எவ்வாறு பெருக்குவது / கையாள்வது என்று தெரியாமலே ஒருவன் படிப்பை முடிக்கிறான். காரணம் என்ன? சரிசெய்வது எப்படி? என்பது குறித்து பொருளாதார நிபுணர் ராஜேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பொருளாதார நிபுணர் ராஜேஷ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: "Personal Financial Management - ஏன் பள்ளியிலும் கல்லூரியிலும் இதனை சொல்லித்தர வேண்டியது அவசியமாகிறது? நமது பாடத்திட்டங்கள் எதிலும் இந்த சப்ஜெக்ட் பேசப்படவில்லை. பணத்தை எவ்வாறு பெருக்குவது / கையாள்வது என்று தெரியாமலே ஒருவன் படிப்பை முடிக்கிறான். காரணம் என்ன? சரிசெய்வது எப்படி? என்பதை பார்ப்போம்.

 Why is it necessary to teach personal financial management in schools and colleges? Economist Rajesh explain

சிறு வயதிலிருந்தே ஒரு மத்திய தர வர்க்கத்தின் ஒரு சிறுவன்/சிறுமி பார்த்துவரும் விளம்பரங்கள், ஒரு சிலர் பயன்படுத்தும் gadgets, ஸ்டைலாக நண்பர்களில் சிலர் ஓட்டி வரும் வாகனங்கள் - இவை தூண்டும் ஆசைகள். ஆசைகள் நிறைவேறாததால் (பணமின்மை) ஏற்படும் ஒருவகையான விரக்தி.

இது பள்ளிப்பருவத்தில் நடப்பவை. கல்லூரி காலத்தில்இந்த ஆசைகள் மேலும் வலுவடைந்து கொண்டே வருகின்றது. ஆனால் அவன்/அவள் இருப்பதோ மத்திய தர வர்க்கத்தில் (Middle Class). அவர்களின் பெற்றோருக்கு Paycheck-to-Paycheck வாழ்க்கை.

என்ன செய்ய முடியும்? ஆசைகள் கைகூடவேண்டும். ஆனால் பணமில்லை. இந்த ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற ஒருசில பெற்றோர்களால் மட்டுமே முடியும்.ஆனால் மற்றவர்களுக்கு? வேலைக்கு சென்று சம்பளம் வாங்கும் வரையில் அவ்வாசைகளை அடக்கி வைத்திருப்பதை தவிர வேறொரு வழியுமில்லை. படிப்பை முடிக்கிறார்கள். வேலை கிடைக்கிறது. ஆனால் வாங்கும் சம்பளம் ஆசைகளுக்கு போதுமானதாக இருக்கின்றதா? இல்லை.

ஒரு மத்திய தர வர்க்க மாணவன் / மாணவி, தனது படிப்பையே லோன் வாங்கித்தான் படிக்க முடிகிறது. வேலைக்கு சேர்ந்தவுடன் கல்விக்கடன் செலுத்த வேண்டும். குடும்ப சூழலுக்கு பணம் கொடுக்க வேண்டும். இதற்கே அவர்களது சம்பளத்தில் பெரும்பாதி சென்றுவிடுகிறது. நிறைவேறாத ஆசைகளுக்கு பணம்???

இந்த நேரத்திற்காக காத்திருப்பது போல் அவர்களது வாழ்க்கையின் உள்ளே வருகின்றன தனியார் வங்கிகள். எதை கொண்டு வருகின்றன? கிரெடிட் கார்டு மற்றும் தனிமனித / நுகர்வோர் கடன்களை. ஒரு அரசு வங்கியில் கடன் வாங்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் தனியாரிடத்தில்? பட்டனை தட்டினால் கடன்.

அடக்கி வைத்திருந்த ஆசைகள் அவர்களது கண்ணை மறைக்க, "கனவுகளை நனவாக்குங்கள்" என்கிற கூப்பாடோடு வரும் கிரெடிட் கார்டு மற்றும் லோன் விளம்பரங்கள் அவர்களை தூண்ட, எளிதான பிராசஸ், குறைந்த வட்டி மற்றும் குறைவான EMI க்கள் அவர்களை அழைத்துச் செல்ல... வெளிவரவே முடியாத ஒரு சக்கர வியூகத்தில் சிக்குகின்றனர்,அவர்கள் அறியாமலே.

அதன்பிறகு, அதீத செலவுகளால் 42% வட்டியில் கிரெடிட் கார்டு நிலுவை தொகை.. அதனை அடைக்க 11% வட்டியில் இன்னொரு கடனை வாங்க, பிறகு காலியாக உள்ள கிரெடிட் கார்டில் மறுபடி செலவு செய்ய... கடன் சக்கரத்தில் சிக்குகிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் தான் கார்பொரேட் முதலாளிகளுக்கும், வங்கிகளுக்கும் தேவை. இவைகளை தவிர்க்கவே முடியாதா? முடியும். எவ்வாறு?

சிறுவயதிலேயே / பள்ளிப்பருவத்தில் / கல்லூரியில் இதனை ஒரு பாடமாக (அ) சிறப்பு பாடமாக சொல்லித்தர வேண்டும்.

ஒரு வருடத்தில் (final year) இவை அனைத்தையும் சொல்லித்தர வெறும் 10-12 மணிநேரமே போதுமானது. இதை சிலபஸ் ஆக சேர்ப்பது சாத்தியமில்லை.. ஆனால் ஒரு வருடத்தில் 12 மணிநேரம் பயிற்சியாக கொடுத்தால் பலன் இல்லை..

கல்லூரி நிர்வாகங்கள் என்ன செய்யலாம்? பொருளாதார நிபுணர் ஒருவரை அழைத்து மாதம் 1 அல்லது 2 மணி நேரம் பேசச்சொல்லலாம் அந்த பருவத்திலேயே அவர்களுக்கு வெளியில் காத்திருக்கும் பொருளாதார ஆபத்துக்களை விவரித்து, அதில் சிக்காமல் எப்படி தவிர்ப்பது? எந்தெந்த முறையில் பணத்தை சேமிப்பது? முதலீடு செய்வது? என்பனவற்றை சொல்லித்தரவேண்டும். பணப்பொறியில் இருந்து சிக்க இதுவொரு சிறந்த தடுப்பூசி. அவ்வளவே.

கல்லூரி நிர்வாகம், இதையும் தங்கள் மாணாக்கர்களுக்கு ஒரு சேவையாகவோ அல்லது சிறிது கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்யலாம். இந்த அடிப்படை வலுவாக அமைந்துவிட்டால், மாணாக்கர்களின் வாழ்க்கையில் நிதி பற்றாக்குறை மற்றும் சிக்கல்கள் வராமல் பெருமளவு தவிர்க்கலாம். இது ஒரு சிறந்த முயற்சி. இதனை படிக்கும் மாணவர்கள் / ஆசிரியர்கள் தங்களது பள்ளி / கல்லூரி நிர்வாகத்திற்கு இதனை எடுத்து செல்லுங்கள். இந்த சிறிய முயற்சி வருங்காலத்தில் பெருமளவு பிரச்சனைகளை தவிர்க்க உதவும்." இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+