ஒரே ஒரு போன் கால்! அதுமட்டும் வந்தால் அதிமுக கேம் ஓவர்! சென்னையில் காத்திருக்கும் ஓபிஎஸ்! சஸ்பென்ஸ்
சென்னை: அதிமுக பாஜக மோதல் நிலவி வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் இந்த பிரச்சனைக்கு இடையில் புகுந்து உள்ளார்.
அதிமுக பாஜக மோதல் உச்சத்தில் உள்ளது. ஒரு பக்கம் அண்ணாமலை டெல்லியில் இருக்கிறார். அவர் அதிமுக - பாஜக மோதல் குறித்து விளக்கம் அளிக்க உள்ளார். ஏற்கனவே அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து விளக்கமும் அளித்துவிட்டார்.
அண்ணாமலை டெல்லி: அதன்படி அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது ஏன்? இந்த கூட்டணியை மீண்டும் கொண்டு வர வேண்டுமா ? கூட்டணி இல்லாமல் என்ன செய்ய வேண்டும்? பாஜக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவது எப்படி? பாஜக அதிமுக இல்லாமல் எப்படி செயல்பட வேண்டும்? பாஜகவின் தற்போதைய வாக்கு வங்கி என்ன என்று விளக்கம் அளிக்கும் விதமாக அண்ணாமலை சென்றுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தேசிய தலைவர் ஜேபி நாட்டாவை சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளார். இன்று இது தொடர்பாக அண்ணாமலை ஆலோசனை செய்வார்.
ஓ பன்னீர்செல்வம் பயணம்: இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்வதாக இருந்தது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்து இருவரும் இன்று டெல்லி செல்வதாக இருந்தது.
ஆனால் இருவரும் டெல்லி போகும் பயணம் இப்போது வரை உறுதியாகவில்லை. அமித் ஷாவின் அப்பாயின்மென்டுக்காக காத்திருக்கிறார்கள். அவரிடம் அப்பாயின்மென்ட் கேட்டு உள்ளனர்.
ஆனால் அவரோ ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பணிகளில் பிசியாக இருக்கிறார். அதனால் அவர் அண்ணாமலைக்கே நேரம் ஒதுக்காமல் காலம் தாழ்த்தி உள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் அமித் ஷா, நட்டாவை ஞாயிற்றுக்கிழமையே சந்திக்கலாம் என்ற திட்டத்தில் இருந்தார். ஆனால் அமித் ஷா 5 மாநில தேர்தல் பணிகளில் பிசியாக இருந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை பார்க்க முடியவில்லை.
( 5 அதிமுக தலைவர்கள் என் கையில்.. கட்சியை உடைக்க நான் ரெடி.. அமித் ஷாவிற்கு சசிகலா கடிதம்? பின்னணி? )
இதனால் மறுநாளும் அண்ணாமலை காத்திருக்க வேண்டி இருந்தது. கூடுதல் நாள் அங்கே அண்ணாமலை தங்க நேரிட்டதால் நண்பர் ஒருவர் வீட்டில் அவர் ஓய்வு எடுத்தார். அந்த நண்பர் தேஜஸ்வி சூர்யா எம்பி. டெல்லியில் உள்ள அவரின் வீட்டில் அண்ணாமலை தங்கி உள்ளார். இவர்கள் நெருங்கிய நண்பர்கள் என்பது கூறப்படுகிறது.
போன் கால்: அண்ணாமலைக்கே நேரம் ஒதுக்கப்படாத நிலையில் ஓ பன்னீர்செல்வத்திற்கும் நேரம் கொடுக்க காலம் எடுக்கும் என்கிறார்கள். இருவருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டால் தான் செல்வார்கள். இன்று இருவரும் மதுரையில் இருக்கிறார்கள். ஓபிஎஸ் மட்டும் இன்று மதியம் சென்னை வருகிறார். டெல்லியின் அழைப்பிற்காக காத்திருக்கிறார்கள்.
ஓ பன்னீர்செல்வம்.. அமித் ஷாவை சந்தித்து அதிமுக வழக்கில் உதவுவது, அதிமுக மேல்முறையீட்டு வழக்கில் உதவி செய்வது பற்றி கேட்கலாம் என்கிறார்கள். அதோடு அதிமுக - பாஜக கூட்டணியை மீண்டும் உருவாக்க நான் உதவுகிறேன். முக்கியமாக எடப்பாடி இல்லாமல்.. அதிமுகவை உங்கள் பக்கம் கொண்டு வர உதவுங்கள் என்று ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டு வருகிறாராம். இதனால்தான் ஓ பன்னீர்செல்வம் இந்த மீட்டிங்கிற்கு காத்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications