நீங்க ஆரம்பிங்க! குஜராத்தில் ஓபிஎஸ்ஸிடம் அமித் ஷா சொன்ன வார்த்தை.. உடனே சென்னையில் நடந்த ட்விஸ்ட்!
சென்னை: சமீபத்தில் குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு சென்று இருந்த ஓ பன்னீர்செல்வம் சென்னைக்கு திரும்பியதும் முக்கியமான சில நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார். பூ பாதையில் இருந்து சிங்கப்பாதைக்கு திரும்பிவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு ஓ பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்றது. குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் குஜராத் சட்டசபை தேர்தலில் வென்று 7வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதுவரை 6 தேர்தல்களில் வென்றதை விட அதிக இடங்களை வென்று இந்த முறை மிகப்பெரிய பெரும்பான்மையோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பாஜகவில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கடந்த 1 மாதமாக தீவிரமாக பிரச்சாரம் செய்த நிலையில் பாஜக இந்த இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

குஜராத்
இந்த நிலையில் குஜராத்தில் பாஜக முதல்வர் பூபேந்திர பாகல் பதவி ஏற்பு விழாவிற்கு ஓ பன்னீர்செல்வம் சென்று இருந்தார். இன்று குஜராத்தில் நடந்த விழாவில் குஜராத் சென்ற ஓ பன்னீர்செல்வத்திற்கு பாஜக மூத்த தலைவர்கள் பலர் சிறப்பு மரியாதையை கொடுத்துள்ளனர். பாஜக குஜராத் மாநில நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் மேடையில் இருந்துவிட்டு அதன்பின் கீழே இருந்த நிர்வாகிகளுக்கு வணக்கம் மட்டும் வைத்துவிட்டு சென்றனர். அதன்பின் அமித் ஷாவை தனியாக் சந்தித்து சில நிமிடங்கள் மட்டும் ஓ பன்னீர்செல்வம் பேசினார். மற்றபடி பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மட்டும் கீழே இருந்த விருந்தினர்களை சந்தித்து பேசினார்.

அமித் ஷா
இந்த நிலையில் அமித் ஷாவிடம் சில விஷயங்களை ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக சொன்னதாக தெரிகிறது. எனக்கு உறுதுணையாக இருங்கள். கஷ்டமாக இருக்கிறது. டெல்லி எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது. அதிமுக ஒன்றாக இருந்தால்தான் பாஜகவிற்கு பலன் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியதாக தெரிகிறது. இதற்கு பதில் அளித்த அமித் ஷா.. நீங்கள் எங்களின் சப்போர்ட் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு எங்களின் சப்போர்ட் எப்போதும் இருக்கும். கட்சி ரீதியாக உங்கள் பணிகளை கவனியுங்கள்.

ஆதரவு
உங்களுக்கான ஆதரவை நிலைநிறுத்திக்கொள்ளுங்கள். அதற்கான பணிகளை தொடங்குங்கள் என்று அமித் ஷா சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்தே சந்தோசமாக சென்னைக்கு வந்த ஓ பன்னீர்செல்வம் அங்கு முக்கியமான முடிவை எடுத்துள்ளார். அதன்படி, ஓ பன்னீர்செல்வம் டிசம்பர் 21ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தை அவர் நடத்த முக்கியமான காரணம் உள்ளது. அதிமுகவில் இவர் தனியாக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆகியோரை நியமனம் செய்து வந்தார்.

என்ன பிளான்
இவர்களை வைத்துதான் ஓ பன்னீர்செல்வம் கூட்டத்தை நடத்த உள்ளார். இந்த மாவட்ட செயலர்களை வைத்து ஓ பன்னீர்செல்வம் நடத்தும் கூட்டம் தொடர்பான புகைப்படங்கள், ரிப்போர்ட்கள் உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் சமர்ப்பிக்கும் எழுத்துபூர்வமான வாதத்தோடு சமர்ப்பிக்கப்படும். அதில்.. என் பக்கமும் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள். கட்சியில் இரண்டு குழுக்கள் இருக்கிறது. இதனால் ஒரு குழுவை மட்டும் அங்கீகரிக்கவே கூடாது. எனக்கு ஆதரவு இருக்கிறது பாருங்கள் என்று ஓ பன்னீர்செல்வம் சொல்ல திட்டமிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

எடப்பாடி நினைப்பு
எடப்பாடி தனக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது என்று சொல்லும் நிலையில் அந்த வாதத்தையே உடைத்து நொறுக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். இதனால்தான் ஓ பன்னீர்செல்வம் திடீரென இந்த கூட்டத்தை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது.குஜராத்தில் அமித் ஷா கொடுத்த நம்பிக்கை வார்த்தைகள்தான் ஓ பன்னீர்செல்வத்தின் இந்த முடிவிற்கு காரணம் என்கிறார்கள். இது உச்ச நீதிமன்றத்தில் எடுபடாமல் போனாலும் தேர்தல் ஆணையத்தில் இரண்டு அணிகள் இருப்பதை நிரூபிக்க உதவும்.

இரட்டை இலை முடக்கம்
இதன் மூலம் எடப்பாடி தன்னை சேர்க்கவில்லை என்றால் இரட்டை இலை சின்னத்தையே முடக்க ஓ பன்னீர்செல்வம் முயற்சிக்க வாய்ப்புகள் உள்ளன. அதாவது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தையும் நடத்துவார்கள். இதன் மூலம் எனக்கு கீழ் உள்ள பொதுக்குழுதான் உண்மையானது என்று ஓ பன்னீர்செல்வம் வாதம் வைக்க முடியும். அதாவது எனக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று நிரூபித்து இரட்டை இலை சின்னத்தை ஓ பன்னீர்செல்வம் முடக்க பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன. என்னை சேர்த்துக்கொள்ளுங்கள்.. இல்லையென்றால்.. சின்னமே இருக்காது என்று எடப்பாடிக்கு ஓ பன்னீர்செல்வம் செக் வைக்க முடியும். இதற்காகவே அவர் மாவட்ட செயலாளர் கூட்டத்தை நடத்துவதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் இதே அஸ்திரத்தை எடப்பாடிக்கு எதிராக பாஜகவும் பயன்படுத்தும் என்கிறார்கள். எடப்பாடி கேட்ட இடங்களை கொடுக்க வேண்டும். வேறு கட்சியுடன் கூட்டணி வைக்க கூடாது. காங்கிரசுடன் சேர முயற்சிக்க கூடாது. அப்படி மீறி முயன்றால், ஓ பன்னீர்செல்வம் மூலம் அதிமுகவின் சின்னத்தை முடக்குவோம். உங்களின் அதிமுகவை சின்னம் இல்லாமல் ஆக்குவோம், என்று அழுத்ததை எடப்பாடிக்கு பாஜக கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications