பிஎப் அட்வான்ஸ், பிஎப் கிளைம் ரிஜெக்ட் ஆவது ஏன்? பிஎப் பணம் எடுப்பது அவ்வளவு கஷ்டமா?
சென்னை: பலரும் பிஎப் அட்வான்ஸ், பிஎப் கிளைம் ரிஜெக்ட் ஆவது தொட ர்கதையாக உள்ளது.. பிஎப்பில் பணம் எடுப்பது அவ்வளவு கஷ்டமா என்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும். உண்மையில் பிஎப் பணம் எடுப்பது சாமானியர்களுக்கு கொஞ்சம் சவாலானது தான். சரியான விழிப்புணர்வு இருந்தால் பணம் எடுப்பது எளிது.
மாத சம்பளம் வாங்கும் பலருக்கும் வருங்கால வைப்பு நிதி ஆணையம் குறிப்பிட்ட பணத்தை பிடிக்கிறது. அதே அளவு பணத்தை நிறுவனங்களும் ஊழியர்களின் கணக்கில் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தப்படும் பிஎப் பணத்தை அவசர தேவைக்காக ஊழியர்கள் எடுக்கலாம். பல ஊழியர்கள் தங்கள் EPF கணக்கில் இருந்து பணம் எடுக்கும்போது பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

பொதுவாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அமைப்பின் இணையதளத்தில் உள்ள தகவல்களும், பிஎப் கேட்கும் ஊழியர்களின் ஒத்துக்போகாவிட்டால் இபிஎப் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
குறிப்பாக சொல்வது என்றால், பெயர், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்கள் அல்லது முழுமையடையாத KYC பதிவுள் போன்ற காரணங்கள் நிராகரிப்புக்கு வழிவகுக்கும். வருங்கால வைப்பு நிதியில் பணம் எடுக்க கோரிக்கை வைக்கும் போது, நிராகரிக்கப்படக்கூடாது என்றால், அதற்கு அவர்களை பற்றி தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை இபிஎப்ஓ தளத்தில் சரிபார்க்க வேண்டும். அதன்பிறகு பிஎப் அட்வான்ஸ் அல்லது பிஎப் கிளைமிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இபிஎப்ஓ தளத்தில் கேஓய்சி விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். பிஎப் கிளைமுக்கு விண்ணப்பிக்கும் முன்பு, நீங்கள் ஏற்கனவே பணியாற்றிய நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் வெளியேறிய தேதிகள் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அதேபோல் இடையில் வேலையில் இல்லை என்றாலும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

யுனிவர்சல் அக்கவுன்ட் எண் (யுஏஎன்): இந்த யுஏஎண் நம்பரை தற்போது வேலை செய்யும் நிறுவனத்திடம் கொடுத்து பிஎப் கணக்கை புதுப்பிக்க வேண்டும். அதாவது எத்தனை பிஎப் கணக்கும் இருக்கலாம். அவை அனைத்தும் ஒரே யுஏஎண்ணிற்கு மாற்ற வேண்டும்.
பணம் எடுப்பதற்கான தொடர்புடைய வங்கிக் கணக்கு விவரங்கள்: கணக்கு எண், IFSC போன்ற கணக்கு விவரங்களை இருமுறை சரிபார்த்து சரிபார்க்க வேண்டும். தவறான வங்கி விவரங்கள் நிராகரிக்கப்படுவதற்கான பொதுவான காரணமாக உள்ளது. பிஎப் கிளைம் அல்லது பிஎப் அட்வான்ஸ் எடுக்கும் போது, பிஎப் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கை எண்ணை தான் குறிப்பிட வேண்டும். மேலும் அந்த வங்கி கணக்கில் செக் லீப்பை பிஎப் கிளைம் செய்ய அட்டாச் செய்ய வேண்டும் .அதாவது உங்கள் பெயர் உள்ள குறிப்பிட்ட வங்கி கணக்கில் செக் லீப்பை பென்சிலால் அடித்து அட்டாச் செய்திட வேண்டும்.
பெயர் மற்றும் முகவரி சான்றுகள்: பெயர் மற்றும் முகவரி சான்றுகள் EPFO பதிவுகளில் உள்ள விவரங்களுடன் பொருந்த வேண்டும். இதில், பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் மற்றும் பாலினம் போன்றவை சரியாக இருக்க வேண்டும். உங்கள் ஆதார் மற்றும் பிஎப் கணக்கு எண் பெயரும் ஒரே போல் இருக்க வேண்டும். உங்கள் அப்பா பெயரும், உங்கள் பிறந்த தேதியும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். எல்லாம் சரியாக இருக்கிறது. உங்கள் நடப்பு நிறுவனத்தின் பிஎப் கணக்கில் எல்லா பணமும் மாற்றப்பட்டிருக்கிறது என்றால் பிஎப் அட்வான்ஸ் மற்றும் பிஎப் கிளைமிற்கு விண்ணப்பிக்கலாம்.
அதேநேரம் பிஎப் கிளைம் வேறு, பிஎப் அட்வான்ஸ் வேறு.. உங்களுக்கு தேவையானது பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் ரத்து செய்யப்பட்ட காசோலை, அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் தொடர்புடைய ஆவணங்களை இணைக்க வேண்டும். ஆதார், பான் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற கேஓய்வி விவரங்கள் சரியாக இருந்தால் ரிஜிக்ட் ஆகும் வாய்ப்பு மிக குறைவு.
அதேநேரம் பொதுவாக, EPFOவில் பிஎப் கிளைம் அல்லது பிஎப் அட்வான்ஸ்க்கு விண்ணப்பித்தால், விண்ணப்பித்த நாளிலிருந்து 20 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேறும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications