புள்ளிகளை இணைக்கும் மோடி! ராமர் கோவில் திறப்பிற்கு முன்! ஆந்திரா, குருவாயூர், ராமேஸ்வரம் பயணம் ஏன்?
சென்னை: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு முன்பாக பிரதமர் மோடி தென் இந்தியாவில் பல்வேறு கோவில்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று ஆந்திரா லேபாக்ஷியில் வீரபத்ரா கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி. அதேபோல் குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் மேற்கொண்டார். இதையடுத்து ஜனவரி 19ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிய உள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை மனதில் வைத்து இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். உதாரணமாக கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் பங்கேற்க வரும் 19ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் இந்த பயணம் முழுக்க முழுக்க அயோத்தி விழாவை மனதில் வைத்து பிளான் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி 20ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அங்கே சிறப்பு பிரசாதம் அவர் வாங்கி வைப்பார். அதன் பின்னர், ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி மறுநாள் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி புனிதநீரை எடுத்துச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இராமாயணத்தில் ராமர்.,. ராமேஸ்வரத்தில் உள்ள ராமர் பாலம் வழியாக இலங்கை சென்றதாக கதை உள்ளது.
இதனால் அங்கே உள்ள கடல் நீர் புனிதமாக கருதப்படுகிறது. அந்த கோவில் உள்ளே இருக்கும் தீர்த்தமும் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இதைத்தான் மோடி எடுத்து செல்ல இருக்கிறாராம். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை மனதில் வைத்து இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
துறவிகள்: பொதுவாக இந்து துறவிகள், மத பயணம் மேற்கொள்பவர்கள் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், காசி, செல்வது வழக்கம். அதை பின்பற்றியே பிரதமர் மோடி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்றுவிட்டு அதன்பின் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் முடிவில் இருக்கிறார்.
அயோத்தி கோவில்: அயோத்தி ராமர் கோவில் பூஜை விமர்சையாக நடைபெற்று வருகிறது. இன்று பால ராமர் விக்ரக ஊர்வலம் அங்கே நடைபெற உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் நேற்று தொடங்கியது. இன்று பால ராமர் விக்ரக ஊர்வலம் அங்கே நடைபெற உள்ளது.
என்று திறக்கப்படும்?: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
திறப்பு விழா: ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.
சங்கராச்சாரியார் எதிர்ப்பு: இந்த கோவில் திறப்பு விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்ய பூரியின் கோவர்தன் மடத்தின் பீடாதிபதி மறுத்துள்ளார். இந்த நிலையில் உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி இந்த ராமர் கோவில் விழாவில் நிர்வாகிகள் சாஸ்திரத்தை மீறுவதாக புகார் வைத்துள்ளார்.
ஏனென்றால், இந்த விழா "சாஸ்திரங்களுக்கு எதிராக" அல்லது "புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக" நடத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக கோவில் கட்டுமானம் முழுமையடையாததால் இது மிகப்பெரிய விதி மீறல் என்று அவர் புகார் வைத்துள்ளார்.
ஜனவரி 22 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் நான்கு சங்கராச்சாரியார்களில் யாரும் கலந்து கொள்ளப் போவதில்லை. எங்களுக்கு யார் மீதும் எந்தத் தீய எண்ணமும் இல்லை. ஆனால் இந்து மதத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றுவதும், மற்றவர்கள் அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்துவதும் சங்கராச்சாரியார்களின் பொறுப்பு. அவர்கள் (கோயில் கட்டுமானம் மற்றும் விழா அமைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்) இந்து மதத்தில் நிறுவப்பட்ட விதிமுறைகளை புறக்கணிக்கிறார்கள்.
விதி மீறல்: விதிகளை மீறிவிட்டனர். கோவிலை கட்டி முடிக்காமல் ராம பிரான் பிரதிஷ்டை விழாவை நடத்துவது இந்து மதத்தின் முதல் மீறல் ஆகும். இதற்கு "அவ்வளவு அவசரம் தேவையில்லை,".
டிசம்பர் 22, 1949 நள்ளிரவில் (பாபர் மசூதியில்) ராமர் சிலை வைக்கப்பட்டபோது அவசர நிலை ஏற்பட்டது, மேலும் 1992 இல் கட்டிடம் (பாபர் மசூதி) இடிக்கப்பட்டது. சில காரணங்களால் இந்த சம்பவங்கள் தன்னிச்சையாக நடந்தன. சூழ்நிலைகள் மற்றும் அதனால் சங்கராச்சாரிகள் யாரும் அந்த நேரத்தில் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. ஆனால் இன்று அப்படியொரு அவசரநிலை இல்லை. ராமர் கோயில் கட்டும் பணியை முடித்துவிட்டு பிரான் பிரதிஷ்டை செய்ய போதுமான நேரம் உள்ளது. ஆனால் அதை மீறி அவசர அவசரமாக இப்படி செய்வது பெரிய விதி மீறல் .
இப்போது நாங்கள் அமைதியாக இருக்க முடியாது, முழுமையடையாத கோவிலை திறந்து வைத்து அங்கு கடவுள் சிலையை நிறுவுவது மோசமான யோசனை. ஒருவேளை அவர்கள் (நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள்) எங்களை மோடிக்கு எதிரானவர்கள் என்று அழைப்பார்கள். நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல, அதே நேரத்தில் எங்கள் தர்ம சாஸ்திரத்திற்கு எதிராகவும் செல்ல முடியாது, "என்று சங்கராச்சாரியாரான அவிமுக்தேஸ்வரானந்த் கூறினார்.
-
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்!












Click it and Unblock the Notifications