நெருக்கமாக இருந்தாங்களே என்னாச்சு? டிரம்ப் பதவி ஏற்பு விழாவிற்கு.. மோடி அழைக்கப்படவில்லை? ஏன்?
சென்னை: அமெரிக்க அதிபராக இன்று டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். ஆனால் இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவில்லை. இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில்.. ஏன் இந்த முறை மோடி பெயரை கூட எங்கும் டிரம்ப் சொல்லவில்லை.. அதோடு டிரம்ப் ஏன் மோடியை அழைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க நாட்டின் அதிபராக வெற்றிபெற்றுள்ள டிரம்ப் இன்று அதிபராக பதவி ஏற்க உள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் விழா வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டிடத்தில் ஜனவரி 20ம் தேதி நடைபெறும், இந்த நிகழ்வில் உலகத் தலைவர்கள் முதல் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் முதல் வணிக அதிபர்கள் வரை உலகெங்கிலும் உள்ளவர்கள் பலர் பங்கேற்கிறார்கள். உலகின் டாப் 1 சதவிகிதத்தினர் மட்டுமே இதில் கலந்து கொள்ள அழைப்படுகிறார்கள்.

இதே விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் பதவியேற்பார். முக்கிய உலக வல்லரசுகளுக்கும் இந்தியா உட்பட அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளுக்கும் அழைப்புகள் சென்றுள்ளன. ஆனால் இந்திய அரசுக்கு முறையாக அழைப்பு சென்றுள்ளது. மாறாக இந்திய பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட அழைப்பு போகவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியா சார்பாக முகேஷ் அம்பானி குடும்பம் பங்கேற்கிறது. அதேபோல் இன்னும் பல பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
உலக அளவில் வலதுசாரி தத்துவத்திற்கு அதிக ஆதரவு தரும் பல நாட்டு தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த டிரம்ப் ஆட்சியில் மோடி - டிரம்ப் நெருக்கமாக நட்பாக இருந்தனர். ஹவுடி மோடி என்று டிரம்ப் - மோடி நிகழ்ச்சி கூட ஒன்றாக நடத்தினர். அதிலும் சொல்லப்போனால் ஹவுடி மோடி நிகழ்ச்சிதான் 4 வருடங்களுக்கு முன் டிரம்ப் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்., அதாவது அவர் தோல்வி அடைந்த 2021 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருந்தது. அந்த அளவிற்கு இருவரும் நெருக்கம். இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில்.. ஏன் இந்த முறை மோடி பெயரை கூட எங்கும் டிரம்ப் சொல்லவில்லை.. அதோடு டிரம்ப் ஏன் மோடியை அழைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த முறை டிரம்ப் பெரிதாக மோடி பற்றியும் பேசவில்லை. ஆனால் இந்த முறை அழைப்பே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியர்கள் பலர் அவருக்கு ஆதரவாக இருந்தும் மோடி பெயரை எங்கும் டிரம்ப் பேசவில்லை. அது உண்மை என்றால் ஏன் அழைப்பு போகவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் போய்விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சர் ஜெய்சங்கர் பதவி ஏற்பு:
அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப்பின் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், ஜனவரி 20ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின் போது, அமெரிக்க நிர்வாகத்தின் புதிய பிரதிநிதிகளுடனும், புதிய அமைச்சர்களுடனும் ஜெய்சங்கர் சந்திப்பு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications