இலங்கை மேட்சில் இந்தியா வென்றதற்கு.. மோடிக்கு நன்றி சொன்ன தமிழிசை.. புரியலையே.. என்ன காரணம்?
சென்னை: இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதற்கு பிரதமர் மோடிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.
2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.

அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. இன்று இலங்கை அணிக்கு எதிராகவும் இந்தியா வென்றது. இதன் மூலம் 6 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.
இலங்கை வெற்றி: நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இந்தியா எளிதாக வென்றது. நேற்று முக்கியமாக கில் அதிரடியாக ஆடி தொடக்கத்தில் இருந்தே 92 பந்தில் 92 ரன்கள் எடுத்தார். 11 பவுண்டரிகளை அடித்து இலங்கை பவுலர்களை இவர் திணறடித்தார் . அதேபோல் 2 சிக்ஸர்களை அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் தேவையில்லாமல் அப்பர் கட் அடிக்க முயன்று தில்ஷன் பந்தில் அவுட் ஆனார்.
இன்னொரு பக்கம் கோலி அதிரடியாக ஆடி இதேபோல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 94 பந்துகள் பிடித்த அவர் 88 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தில்ஷன் பந்தில் இவரும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதன்பின் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரும் 82 ரன்கள் வரை அதிரடியாக ஆடினார். இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்து சரியாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர் இன்று போட்டியில் பார்மிற்கு திரும்பினார் . 56 பந்தில் 82 ரன்கள் எடுத்தார். முக்கியமாக இன்று ஷார்ட் பந்துகளில் அதிரடியாக ஆடினார். இன்னொரு பக்கம் ஜடேஜா 24 பந்தில் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை நின்றார். இதனால் 300 ரன்கள் எடுக்க வேண்டிய இந்திய அணி 357-8 ரன்கள் எடுத்தது.
இலங்கை தோல்வி: இதன்பின் இலங்கை அணி வந்த வேகத்தில் விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது. தொடக்க வீரர்கள் பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள். பும்ரா, சிராஜ் ஓவர்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
அதன்பின் சதீர சமரவிக்ரம, மீண்டும் டக் அவுட் ஆக, குசல் மெண்டிஸ் 1 ரன்னுக்கு அவுட் ஆனார். அதை தொடர்ந்து சரித் அசலங்காவும் டக் அவுட் ஆனார். டாப் ஆர்டரில் 5 பேரில் 3 பேரின் விக்கெட்டை சிராஜ்தான் எடுத்தார். அவரின் விக்கெட் பவுலிங் காரணமாகவே இந்திய அணியின் வெற்றி உறுதி ஆனது. ஆனால் அதன்பின் சிராஜ் மட்டுமின்றி ஷமியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வரிசையாக எடுத்தார்.
Congratulations to #TeamIndia for winning the World Cup Match against Srilanka by 302 Runs.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) November 2, 2023
Phenomenal victory and a gift for the nation under visionary @PMOIndia for all the Sports Initiatives #9YearsofSeva
Nation proud of our Cricket Team!#INDvsSL#WorldCup2023… pic.twitter.com/UF01D32WVQ
கடந்த 2 போட்டிகளில் 5 விக்கெட் ஹவுல் 1 , 4 விக்கெட் ஹவுல் 1 எடுத்தவர் இன்று மீண்டும் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால் இலங்கை அணி 55 ரன்களுக்கு சுருண்டு அவுட் ஆனது. இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதற்கு பிரதமர் மோடிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.
மோடிக்கு நன்றி: இது தொடர்பாக அவர் செய்துள்ள போஸ்டில், இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற #டீம் இந்தியாவுக்கு வாழ்த்துகள். இது அற்புதமான வெற்றி. அதேபோல் தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் இந்த நாட்டின் விளையாட்டு துறைக்கு 9 ஆண்டுகளாக சேவை ஆற்றி வரும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு இந்த வெற்றி .. நமது கிரிக்கெட் அணியால் தேசம் பெருமை கொள்கிறது என்று தமிழிசை கூறியுள்ளார்.
பிரதமர் மோடி விளையாட்டு துறைக்கு கொடுக்கும் சேவைக்கு வழங்கப்பட்ட பரிசுதான் நேற்றைய வெற்றி என்று தமிழிசை கூறி இருப்பது இணையத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications