சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு தயங்குவது ஏன்? யாருக்கு இலாபம்? யாருக்கு நஷ்டம்?
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு அறிக்கை யை வெளியிட்டு, ஒட்டுமொத்த நாட்டிற்கே ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை அளித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களில் இதற்கு ஆதரவாகக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளன.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாகக் குரல் எழுப்பி வருகிறது. இதே கருத்தை திமுகவும் பல ஆண்டுகளாக முன்வைத்து வருகிறது.
இதில் தமிழ்நாட்டில் உள்ள பல கட்சிகள் ஒருமித்த கருத்துகளில் உள்ளன. ஆனால், பாஜக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்தச் சாதிவாரி கணக்கெடுப்புக்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த ஏன் தயங்குகிறது? அதற்குள் இருக்கும் அரசியல் என்ன? அதனால் யாருக்கு இலாபம் என்பது பற்றி பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்புச் சேர்ந்த கோ.கருணாநிதி பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

"1931இல் தான் கடைசியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது இந்தியா சுதந்திரம் அடையவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிதான் இந்தியாவில் நடந்துவந்தது. சுதந்திர இந்தியாவில் அனைத்து சாதிகளையும் உள்ளடக்கி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை.
இப்போதுதான் அதற்கான கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அதற்குக் காரணம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மக்கள்தொகை பிரதிநிதித்துவம் இல்லை என்பதுதான். முதலில் தமிழ்நாட்டில்தான் இந்தக் கோரிக்கை அதிகமாக முன்வைக்கப்பட்டது.
இப்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. ஆகவே, முன்பைவிட வலிமையாக அந்தக் குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பு என்பதைச் சட்டமே அங்கீகரித்துள்ளது. 1948 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி, மத்திய அரசு மட்டும்தான் இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடியும். அதற்கு என்று தனித்துறை மத்திய அரசின் கீழ்தான் வருகிறது.
2011இல் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய மத்திய அரசு, மதரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திய மத்திய அரசு, பிற்படுத்தப்பட்ட மக்களை உள்ளடக்கிய அனைத்து சாதியினர் குறித்துக் கணக்கெடுப்பு எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோது அதைக் கண்டுகொள்ளவில்லை.
ஏன் அப்படி மறுக்கிறார்கள் என்றால், இந்தியாவின் ஆட்சி அதிகாரம் ஒரு குறிப்பிட்ட சாதியின் கையில்தான் உள்ளது. அது அனைவரும் அறிந்த செய்தி. குரூப் ஏ தொடர்பான வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் என்பது 15%கூட இல்லை என்று நாடாளுமன்றத்தில் வைக்கப் பட்ட தகவல்கள் மூலம் அறிகிறோம்.

2011இல் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய மத்திய அரசு, மதரீதியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்திய மத்திய அரசு, பிற்படுத்தப்பட்ட மக்களை உள்ளடக்கிய அனைத்து சாதியினர் குறித்துக் கணக்கெடுப்பு எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோது அதைக் கண்டுகொள்ளவில்லை.
ஏன் அப்படி மறுக்கிறார்கள் என்றால், இந்தியாவின் ஆட்சி அதிகாரம் ஒரு குறிப்பிட்ட சாதியின் கையில்தான் உள்ளது. அது அனைவரும் அறிந்த செய்தி. குரூப் ஏ தொடர்பான வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் என்பது 15%கூட இல்லை என்று நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட தகவல்கள் மூலம் அறிகிறோம்.
இந்திய நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 60% உள்ளனர். அப்படித்தான் பலரும் கணித்துள்ளனர். அந்தளவுக்கு மக்கள் தொகை கொண்ட ஒரு பிரிவுக்கு வெறும் 15%தான் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

சமீபத்தில் பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன்படி பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தி அளித்துள்ளது அம்மாநில அரசு.
இதைப்போன்ற கோரிக்கை இந்தியா முழுவதும் ஒலிக்கும் என்பதால்தான் இந்தச் சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு இணங்க மறுத்து வருகிறது. குறைந்த அளவில் உள்ள அரசு அதிகாரத்தில் உள்ள சாதியினர் இதற்கான முட்டுக்கட்டையைப் போட்டுக் கொண்டுள்ளனர்.
அரசு கொண்டுவரும் நலத்திட்டங்களாகட்டும் அல்லது வேலை வாய்ப்புகளா கட்டும் எதை எடுத்துக் கொண்டாலும் அதற்கு ஆதார அளவுகோலாக இருக்கவேண்டியது சாதிவாரியான கணக்குதான். எந்தெந்த சாதியில் எவ்வளவு மக்கள் உள்ளார் என்று தெரிந்தால்தான் அவர்களுக்கு அரசு சரியாக உதவ முடியும்.

எந்தப் புள்ளிவிவரங்களும் இல்லாமல் வெறுமனே திட்டம் மட்டும் போட்டால் அது எப்படி அனைவருக்கும் போய்ச் சேரும் சொல்லுங்கள்? ஆக, அனைத்து நலன்களுக்கும் அடிப்படை சாதிவாரி கணக்கெடுப்பு. அப்படிக் கணக்கு எடுப்பது என்பது மக்களைப் பிரிந்து பார்ப்பதற்காக அல்ல. சரியான அளவில் திட்டங்களைப் பங்கிட்டு வழங்குவதற்காக என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த முறையான தரவு இருந்தால்தான் மக்கள்தொகை அடிப்படையில் மத்திய அரசு நிதியை ஒதுக்க முடியும்.

இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக மத்திய அரசு வெறும் 4500 கோடி ரூபாயைத்தான் ஒதுக்கி வருகிறது. இந்த நிதியை எந்தத் தரவுகளின் அடிப்படையில் ஒதுக்குகிறார்கள்? 1931 ஆம் ஆண்டு எடுத்த மக்கள் தொகைக் கணக்கை வைத்தே நிதி ஒதுக்குகிறார்கள். இது எப்படிச் சரியாக இருக்கும்?" என்கிறார்












Click it and Unblock the Notifications