மன்னாரில் 48 மணி நேரம் குத்த வச்சு உட்கார்ந்திருக்கும் புரேவி.. என்ன காரணம்?.. வெதர்மேன் விளக்கம்
சென்னை: புரேவி காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பிறகும் எந்த இடத்திலும் நகராமல் மன்னார் வளைகுடாவிலேயே காணப்படுவது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
நிவர் புயலுக்கு பிறகு ஒரே வாரத்தில் வங்கக் கடலில் புரேவி புயல் உருவானது. இது இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை அருகே கடந்த சில தினங்களுக்கு முன் கரையை கடந்தது.
இந்த நிலையில் இது மெல்ல மன்னார் வளைகுடா பகுதிக்குள் நகர்ந்து அங்கு ஒரு நாள் தங்கும் என்றும் பின்னர் அது குமரி- பாம்பன் இடையே பாம்பன் அருகே கரையை கடக்கும் என்றும் சொல்லப்பட்டது.

மழை
ஆனால் இந்த புரேவி கடந்த வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. எனினும் காற்று குறைவாக வீசும் என்றும் மழை பொழிவு இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி தென் தமிழகத்தில் நல்ல மழையை கொடுத்தது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்த நிலையில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் நேற்றைய தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஒரு காற்றழுத்தம் தொடர்ந்து 48 மணி நேரம் நகராமல் குத்த வச்சு இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பகுதி
இதுகுறித்து பிரதீப் ஜான் தனது வலைப்பக்கத்தில் கூறுகையில் காற்றழுத்தம் இரு உயர் அழுத்த பகுதிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது. இதனால் இரு பகுதிகளிலும் நகர்வதற்கு கிரிப் இல்லாத நிலை உள்ளது. அதனால்தான் அது ஒரே இடத்தில் தங்கியுள்ளது. ஆனால் இன்றைய தினம் அது கிழக்கு பகுதி காற்றால் நகர்த்தப்படும்.

பருவமழை
48 மணி நேரமாக ஒரு புயல் ஒரே இடத்தில் இருப்பதை என் அனுபவத்தில் இப்போதுதான் சந்திக்கிறேன். பொதுவாக தென் மேற்கு பருவமழை சீசனின் போது குஜராத்தில்தான் இது போன்ற நிலை ஏற்படும். ஆனால் வடகிழக்குப் பருவமழையில் இதுதான் முதல் முறையாக பார்க்கிறோம். புரேவியின் இறுதி நிலை இதுதான். இன்று மதியம் வலுவிழந்து நகர்ந்து விடும்.

10 நாட்கள் மழை இருக்காது
இதனால் ஏற்படும் ஒரு வித இழுப்பு திறனாலோ அல்லது கிழக்கு காற்றாலோ வரும் டிசம்பர் 8-ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும். அதன் பிறகு மழை படிப்படியாக குறையும். பின்னர் 9 அல்லது 10 நாட்கள் மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications