ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி
சென்னை: 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய புவிசார் அரசியல் நகர்வு. வளைகுடா நாடுகளைக் கதிகலங்கச் செய்த ஈரான் போர் மேகங்களை விலக்க, சமாதானப் புறாக்கள் இப்போது இஸ்லாமாபாத்தில் சிறகடிக்கின்றன. "ஏன் டெல்லி இல்லை?" - சர்வதேச அரங்கில் இப்போது எதிரொலிக்கும் மில்லியன் டாலர் கேள்வி இதுதான்!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை, உலக நாடுகளின் கவனத்தை அப்படியே தன் பக்கம் ஈர்த்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்து, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகப் பொருளாதாரச் சரிவு குறித்த அச்சம் நிலவிய சூழலில், பாகிஸ்தான் இந்த முக்கியமான ராஜதந்திர முன்னெடுப்பை எடுத்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானிய உயர் அதிகாரிகள் ஒரே மேசையில் அமர்ந்து பேசுவது, பாகிஸ்தானுக்கு சர்வதேச அரங்கில் ஒரு பெரிய 'இமேஜ்' மாற்றத்தைத் தந்துள்ளது. ஒருகாலத்தில் தீவிரவாதப் புகார்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட நாடு, இப்போது இரு பெரும் அணுசக்தி மற்றும் ராணுவ வலிமை கொண்ட நாடுகளுக்கு இடையே சமாதானத் தூதுவனாக மாறியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
அதே சமயம், பிராந்தியத்தின் மிகப்பெரிய சக்தியாகவும், இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வரும் இந்தியாவும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் ஒரு பார்வையாளராக மட்டுமே இருப்பது ஆசிய அரசியலில் ஒரு பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தன் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவும், சர்வதேச அங்கீகாரத்தைப் பெறவும் காய்களை நகர்த்துகிறது என்பதுதான் தற்போதைய நிதர்சனம்.
எல்லாரும் நண்பர்கள்... ஆனால்?
ஆனால் இதில் டீல் பேசும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டு இருக்கிறது. பிரதமர் மோடியின் 'விஸ்வகுரு' பிம்பத்திற்கு இதைவிட ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்க முடியாது. இந்தியாவுக்கு ஈரான் ஒரு நெருங்கிய தோழன்; அதே சமயம் அமெரிக்காவுடன் 'ஆத்மார்த்த' உறவு. இஸ்ரேலுடன் ராணுவ ரீதியான பிணைப்பு, வளைகுடா நாடுகளுடன் (GCC) பெட்ரோலிய பந்தம், ரஷ்யாவுடன் காலம் கடந்த நட்பு, இதற்கிடையில் சீனாவோடும் இப்போது கைகுலுக்கி வருகிறோம்.
இப்படி எல்லாரோடும் 'நட்பு' பாராட்டும் ஒரு நாடு, உலகையே அச்சுறுத்தும் ஒரு போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ய வேண்டாமா? மத்திய கிழக்கில் இந்தியாவின் முதலீடுகள் பல்லாயிரம் கோடி. அங்கிருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்போது, ஏன் இந்தியா மெனக்கெடவில்லை?
1950 முதல் 2026 வரை... அந்தத் தெம்பு எங்கே?
சுதந்திர இந்தியாவின் ஆரம்பக் காலங்களில், அணிசேரா இயக்கத்தின் (NAM) தலைவராக நேரு உலக நாடுகளுக்கு வழிகாட்டினார். அந்தப் பாரம்பரியமும், வலிமையும், இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தும் இந்தியாவுக்கு உண்டு. ஆனால், இன்று நிலைமை தலைகீழ்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வர்த்தகக் கெடுபிடிகளுக்குப் பணிந்து, அவர் கேட்ட அனைத்தையும் இந்தியா செய்துகொடுத்தது. "ட்ரம்ப் என்ன சொன்னாலும் சரி" என்கிற ரீதியிலான இந்தியாவின் சமீபத்திய வர்த்தக அணுகுமுறை, சர்வதேச அரங்கில் இந்தியாவின் 'சுயேச்சை' அடையாளத்தைச் சற்று மங்கச் செய்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.
வாய்ப்பைத் தவறவிட்டது யார்?
இஸ்லாமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸும், ஈரானியத் தூதுவர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தன்னை ஒரு 'சமாதான தூதுவனாக' நிலைநிறுத்திக் கொள்கிறது.
நாம் எங்கே சறுக்கினோம்?
அதிகப்படியான அமெரிக்கச் சார்பு: அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டதால், ஈரானுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தை பலம் குறைந்ததா?
மௌனமே பலவீனம்: போர் மேகங்கள் சூழ்ந்தபோது, கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் காத்த 'ராஜதந்திரம்' இப்போது நமக்கே வினையாகிவிட்டதா?
"தகுதியும், வலிமையும் இருந்தும், களத்தில் இறங்கி விளையாடாமல் கேலரியில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் ஒரு வீரனைப் போல இந்தியா இன்று தவிக்கிறது" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
-
லெபனானில் அமைதி திரும்பும் வரை பேச்சுவார்த்தை கிடையாது.. டிரம்பை சாய்த்த ஈரான்.. மிரண்ட பாகிஸ்தான் -
உலகமே தேடும் பாகிஸ்தானின் செரீனா ஹோட்டல்.. ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தேர்வானது எப்படி? -
உச்சக்கட்ட பரபரப்பில் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்க தலைகள் லிஸ்ட் ரெடி.. யாரெல்லாம் வராங்க? -
ஈரான் போர் ஆரம்பித்த பின் முதல் முறை நல்ல சம்பவம்.. ஹார்முஸை கடந்த 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் -
அமெரிக்கா - ஈரான் மீட்டிங்: மீடியேட்டராக இருக்கும் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்..? பெரிய லிஸ்ட் இருக்கு -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
போதையில் பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்? மிக பெரிய போர் வெடித்திருக்கும்.. அலட்சியத்தின் உச்சம் -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் பல்பு கொடுக்கும் ஈரான்.. ஒரே கண்டிஷன் - டிரம்ப்-க்கு அடுத்த செக் -
ஒப்பந்தம் ஏற்படாமல் போகட்டு, அப்புறம் இருக்கு.. பேச்சுவார்த்தைக்கு முன்பே ஈரானை மிரட்டும் அமெரிக்கா -
ஈரானுக்கு திரும்ப கிடைக்க போகும் மிகப்பெரிய சொத்துக்கள்.. அமெரிக்கா சம்மதித்தது ஏன்? -
அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டம்.. பாக்., பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர்!












Click it and Unblock the Notifications