வானதி சீனிவாசன் சொன்ன மேட்டரை விடுங்க.. அவங்க சொன்ன இடத்தை கவனிச்சீங்களா? அப்போ அண்ணாமலை
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுகவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அவர் விமர்சனம் செய்த விதம்தான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில் . பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாகக் களத்தில் இறங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர்.

தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுக-வினர், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது, மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
"அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்". திமுக-வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும்; 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதனால் தேர்தலை புறக்கணிக்கிறோம்.
விடியா திமுக ஆட்சியில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக நடைபெறுமா என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது. விடியா அரசின் அமைச்சர்களும், திமுக-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்., என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுகவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார். அதில், நாங்க தைரியமா இறங்க தான் போறோம். நாங்க தேர்தலில் தைரியமாக போட்டியிடுவோம். இதை பற்றி விளக்கமாக சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் அராஜகமாக் நடக்கும். பண பலம் வெல்லும். ஆனால் இதையும் மீறி நாங்கள் போட்டியிடுகிறோம். இதை எல்லாம் மீறி தேர்தலில் போட்டியிடுவதால் அதிமுக உறுதியாக உள்ளது. முழுமையாக செய்திகளை படித்து அதன்பின் பேசுகிறேன். 2026ல் யார் எவ்வளவு வாக்குகள் வாங்குவார்கள் என்று மக்கள் சொல்வார்கள், என்று வானதி சீனிவாசன் கூறினார்.
அண்ணாமலை; விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுகவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அவர் விமர்சனம் செய்த விதம்தான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி பாஜகவில் இனி பேட்டிகளை ஒழுங்கு செய்ய போகிறோம். இனி பேட்டிகளை பாஜக அலுவலகத்தில் மட்டுமே கொடுப்போம். பாஜக அலுவலகத்தில் மட்டுமே பேசுவோம். ஏர்போர்ட்டில் எல்லாம் பேச மாட்டேன் என்று அண்ணாமலை கூறினார். தனக்கு மட்டுமின்றி பாஜகவில் எல்லா பேட்டியையும் ஸ்ட்ரீம் லைன் செய்ய போவதாக கூறினார். ஆனால் இப்போது அதை மீறி வானதி சீனிவாசன் விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications