புல்லு கூட வெட்டவில்லை.. முதல் கோணல் முற்றிலும் கோணல்.. மாநாட்டை தள்ளிவைக்கும் விஜய்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறுமென கூறப்பட்ட நிலையில், அதை தள்ளி வைக்க முடிவெடுத்திருக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த தள்ளிவைப்பு தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டு உள்ளன.
த.வெ.க. மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விக்கிரவாண்டியில் வரும் 23ஆம் தேதி தவெக முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கிறார். முக்கியமாக சில பழைய கைகளை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை நடிகர் விஜய் முடுக்கி விட்டு உள்ளாராம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலே, கீழ் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் கொடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. இவை போர் யானைகள் ஆகும். நடுவில் வாகைப்பூ வைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ தமிழ்நாட்டின் பூ ஆகும். அதை சுற்றி ஸ்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது.
போர் வீரம், தோழமை, தைரியம் ஆகியவற்றை குறிக்கும் விதமாக இப்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ இதை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதே சமயம் கொடிக்கான விளக்கத்தை மாநில மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் கூறி உள்ளார்.
ஆட்கள் வருகிறார்கள்: மாநாடு நடக்க உள்ளது: இதையடுத்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கிறார். முக்கியமாக சில பழைய கைகளை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை நடிகர் விஜய் முடுக்கி விட்டு உள்ளாராம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. த.வெ.க. மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விக்கிரவாண்டியில் வரும் 23ஆம் தேதி தவெக முதல் மாநாடு நடைபெற உள்ளது.
நடிகர் விஜயின் கட்சியில் 5 முக்கியமான நிர்வாகிகள் சேர உள்ளனர். ஏ என்ற இனிஷியல் கொண்ட நபரும்.. இதற்கு முன் நடிகர் ஒருவருக்கு ஆதரவாக இருந்த 2 நபர்களும், திமுக அதிமுகவில் இருந்த 2 பேரும் விஜயின் தமிழக வெற்றிகழக கட்சியில் இணைய உள்ளார்களாம். அந்த வகையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை அணுகியுள்ளனர். அதிமுகவில் தன்னை கட்சித் தலைமை கண்டு கொள்ளாமல் இருப்பதால், அவரும் விஜய் கட்சிக்கு தாவி விடலாமா ? என்று தனது நலன் விரும்பிகளிடம் விவாதித்திருக்கிறார்.
தள்ளிவைப்பு : இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறுமென கூறப்பட்ட நிலையில், அதை தள்ளி வைக்க முடிவெடுத்திருக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த தள்ளிவைப்பு தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டு உள்ளன.
அதன்படி மாநாட்டிற்கான பந்தல் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. மைதானத்தில் புல் கூட வெட்டப்படவில்லை. திடலை தயார் செய்யவில்லை, பார்க்கிங் ஏற்பாடு செய்யவில்லை, தமிழ்நாடு முழுக்க இருந்து ஆட்களை கொண்டு வர வேண்டும். அதையும் செய்யவில்லை என்பதால், இந்த மாநாடு தள்ளிப்போகிறது என்கிறார்கள்.
முன்னதாக கட்சி பெயரை அறிவித்த போதே தமிழக வெற்றிக் கழகத்தில் "க்" இல்லாமல் கட்சியை அறிவித்தனர். அதன்பின்னர்.. அதை மாற்றினர். அதேபோல் கட்சி கொடியில் இருப்பது வாகை பூ இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இப்படிப்பட்ட நிலையில்தான் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்லும் அளவிற்கு மாநாட்டிற்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாம்.
-
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
உங்களுக்கு எதிராதான் பேசி இருக்காரு! விஜயுடன் துரை வைகோ பேசியது என்ன? நைசாக விசாரித்த உதயநிதி -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்! -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்!











Click it and Unblock the Notifications