சென்னையில் திடீரென மாறிய வானிலை.. சட்டென பெய்த மழை.. பின்னணியில் இதுதான் காரணமா? ஆஹா ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய முக்கிய காரணம் உள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தீவிரமாக அதிகரித்து வந்த வெயிலுக்கு இடையில் தற்போது திடீரென மழை பெய்ய தொடங்கி உள்ளது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

Why it is suddenly raining in Chennai? What is the reason behind it?

திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது.

இப்படி சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய முக்கிய காரணம் உள்ளது. இது தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள போஸ்டில், சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், வடக்கு தமிழ்நாட்டிலும் மழை பெய்யும் என்று கூறி உள்ளது.

ஆனாலும் இன்று நாள் முழுக்க அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றம் இருக்காது. அதிகபட்ச வெப்பநிலை 39/40 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும். பிற்பகலுக்கு இந்த கடல் காற்று காரணமாக வெயிலில் இருந்து விடுதலை கிடைக்கும். சென்னை கடலோரம் இருந்த மழை மேகங்கள் நிலப்பரப்பிற்கு மேல் வந்த நிலையில் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்வதாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது.

சென்னையில் கடந்த ஒன்றரை மாதமாகவே வெயில் உச்சத்தில் இருந்தது. வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.

Why it is suddenly raining in Chennai? What is the reason behind it?

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

வெயில்: தமிழ்நாட்டில் கோடை காலம் நிறைவு பெற்று மழைக்காலம் தொடங்க வேண்டியதற்கான காலம் நெருங்கிவிட்டாலும் இன்னும் வெயில் குறையவில்லை. முக்கியமாக வெயில் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டால் வெயில் உச்சத்தை தொட்டுள்ளது.

வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது.தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையாக அவதிக்கு உள்ளாக்கியது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+