காலை மிதித்தால் நாங்களும் மிதிப்போம்!ஜெயக்குமார் ஆவேசத்திற்கு என்ன காரணம்? அண்ணாமலை என்ன பேசினார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோபப்படும் அளவுக்கு அப்படி தமிழக பாஜக தலைவர் என்னதான் பேசினார்? என்பதை பார்ப்போம்.

தமிழக அரசியல் களத்தில் திமுக வெர்சஸ் அதிமுக என எப்போதும் இருக்கும். அது போல் தேசிய அரசியலை எடுத்துக் கொண்டால் பாஜக வெர்சஸ் காங்கிரஸ் என இருக்கும். ஆனால் தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இறந்துவிட்ட நிலையில் திமுக வெர்சஸ் பாஜக என பேசப்பட்டு வந்தது.

why Jayakumar reacted to Annamalais speech?

அதாவது அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துக் கொண்டதால் திமுக வெர்சஸ் பாஜக என கூறப்பட்டு வந்தது. நேற்று அமித்ஷாவின் தமிழக வருகையின் போதும் கூட திமுகவை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனால் நேற்று முழுக்க திமுக வெர்சஸ் பாஜக என பேசப்பட்டு வந்தது. ஆனால் இவை எல்லாம் அண்ணாமலை ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி வெளியே வரும் வரைதான். அதன் பின்னர் அதிமுக வெர்சஸ் பாஜக என ஆகிவிட்டது. ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

திமுக அரசின் ஊழல் பட்டியல் குறித்து கேள்வியை தொடர்ந்து அதிமுகவின் ஆட்சி குறித்த கேள்வி முன் வைக்கப்பட்டது. அந்த கேள்விக்கு அண்ணாமலை பதில் அளிக்கையில் எந்த கட்சியையும் நான் குறிப்பிட்டு பேசவில்லை. ஆனால் மக்கள் பணத்தை யார் கொள்ளையடித்தாலும் நாங்கள் கேள்வி கேட்போம். அத்துடன் ஊழல் குற்றச்சாட்டில் 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு கால ஆட்சி தான் மிக மோசமானது என்ற கருத்தை ஒப்புக் கொள்கிறீர்களா என கேள்வி முன் வைக்கப்பட்டது.

அதற்கு தமிழகத்தில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் என்று கூட சொல்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிடாவிட்டாலும் 1991- 96 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது ஜெயலலலிதாதான். அவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனைக்குள்ளாகினார். இதுதான் அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+