நடு ராத்திரியில்.. இழுத்துட்டு போனது எல்லாம் வேஸ்ட்டா? "ஜெ"க்கு செக் வைக்கும் இபிஎஸ்.. பதவி போச்சா!
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்க உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகள் இடையே இது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமான பதவி ஒன்றை பெற போவது யார் என்ற விவாதம் கட்சிக்குள் மேலோங்கி உள்ளது.
அதிமுக சார்பாக ராஜ்ய சபா எம்பி தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு, அவர்கள் வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டனர். எதிர்பார்த்தபடியே முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வாய்ப்பு பெற்றுள்ளார்.
முதுகளத்தூர் சேர்மேன் தருமருக்கு யாரும் எதிர்பார்க்காத நிலையில் எம்பி ஆகும் யோகம் அடித்துள்ளது. ஆனால் இந்த லிஸ்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயக்குமாருக்கு பதவி கிடைக்கவில்லை.

ஜெயக்குமார்
அதிமுகவில் ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர், மூத்த தலைவர் என்ற முறையில் எம்பி பதவியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் இவர் சிறைக்கு எல்லாம் சென்றுவிட்டார். இரவோடு இரவாக தமிழ்நாடு போலீசார் இவரை கைதும் செய்தனர். திமுக நிர்வாகியை சாலையில் அரை நிர்வாணமாக அழைத்து சென்ற காரணத்தால் இவரை போலீசார் கைது செய்தனர். கட்சிக்காக சிறைக்கு சென்றதால் இவருக்கு எம்பி பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது.

செய்தியாளர்
கட்சி கொள்கைகளை வெளியிட தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கிறார். சசிகலாவை எதிர்க்கிறார் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இவருக்கு எம்பி பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஜெயக்குமாருக்கு எம்பி பதவி வழங்கப்படவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அதன்படி ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு லோக்சபா எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து.. அப்பா ஜெயக்குமாருக்கும் ராஜ்ய சபா எம்பி தேர்தலில் வாய்ப்பு தருவது சரியாக இருக்காது.

ஜெயக்குமார் வாய்ப்பு மறுப்பு
இதை காரணம் காட்டித்தான் ஜெயக்குமாருக்கு ராஜ்ய சபா எம்பி வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் ஜெயக்குமாரை கூல் செய்யும் விதமாக அவருக்கு கட்சி ரீதியாக முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. அதாவது கட்சி ரீதியாக அவைத்தலைவர் பதவி ஜெயக்குமாருக்கு வழங்கப்படலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அந்த பதவியும் தற்போது வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று ரத்தத்தின் ரத்தங்கள் தகவல் தெரிவிக்கிறார்கள்.

என்ன நடந்தது?
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதில் அவைத்தலைவர் பதவியும் இறுதி செய்யப்படும். தற்போது தமிழ் மகன் உசைன் இந்த பதவியில் தற்காலிக தலைவராக இருக்கிறார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார் இந்த பதவியை பெற முயல்வார் என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த பதவியையும், ஜெயக்குமாருக்கு வழங்க மாட்டார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மகன் உசைனை அந்த பதவியில் நிரந்தரமாக நியமிக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயக்குமாருக்கு எம்பி சீட் இல்லை என்று கட்சியில் பெரிய பதவி கொடுத்தால்.. எம்பி வாய்ப்பு கிடைக்காத மற்ற சீனியர்களும் கட்சியில் முக்கிய பதவி கேட்பார்கள் என்று அதிமுக இரட்டை தலைமை இந்த முடிவை எடுக்கும் என்கிறார்கள்.
-
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி!












Click it and Unblock the Notifications