‛‛ஆங்கிலத்துக்கு பதில் இந்தி’’.. திடீரென மொழியை மாற்றிய ஜேபி நட்டா! ஏன் தெரியுமா? திரும்பும் திமுக
சென்னை: சென்னையில் என் மண் என் மக்கள் யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று பங்கேற்று பேசினார். முதலில் ஆங்கிலத்தில் பேசிய ஜேபி நட்டா திடீரென தனது உரையை இந்திக்கு மாற்றினார். இந்த வேளையில் இந்தி மொழியில் பேசுவது என்பது பற்றி அவர் கூறிய காரணம் பேசுப்பொருளாகி உள்ளது.
சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் யாத்திரை இன்று நடந்தது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்றார். அதன்பிறகு அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ஜேபி நட்டா பங்கேற்று பேசினார். அப்போது அவர் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மத்திய பாஜக அரசு இந்தி மொழியை திணிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்றைய பொதுக்கூட்டத்தில் ஆங்கிலத்தில் உரையை தொடங்கிய ஜேபி நட்டா திடீரென்று இந்தி மொழிக்கு மாறினார். திமுகவை சீண்டும் வகையில் ஜேபி நட்டா இப்படி பேசியதாக கூறப்படுகிறது.
அதாவது பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் ஜேபி நட்டா ஆங்கில மொழியில் பேசினார். அப்போது அவர் திடீரென்று ஆங்கில மொழிக்கு பதில் இந்தியில் பேச தொடங்கினார். இந்த வேளையில் ஜேபி நட்டா, ‛‛இந்தியில் பேச வந்த கோரிக்கையால் நான் இந்தி மொழியில் சில வார்த்தைகளை பேசுகிறேன்'' என்றார். இதை கேட்டவுடன் பாஜகவினர் உற்சாக கோஷமிட்டனர்.
இதையடுத்து இந்து மொழியில் பேசிய ஜேபி நட்டா, ‛‛2014ல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரத்தில் 5வது இடத்துக்கு இந்தியா வந்துள்ளது. நம்மை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த இடத்தை எட்டிப்பிடித்துள்ளோம். பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பு தந்தால் உலக பொருளாதாரத்தில் 3வது பெரிய நாடாக இந்தியா மாறும் என்பதை கூறி கொள்ள விரும்புகிறேன்.
மேலும் இந்தியா ஆட்டோ மொபைல் உற்பத்தியில் ஜப்பானை முந்தி 3வது இடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் செல்போன் பயன்பாட்டில் 95 சதவீதம் என்பது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இப்போது 95 சதவீத செல்போன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏற்றுமதியில் வளர்ந்துள்ளோம். அத்தனைக்கும் மேலாக 500 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாமல் ருந்த அயோத்தி பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமருக்க பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370 ரத்த செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாத பகுதியாக மாற்றி இருக்கிறோம். ஆகவே நாடு முழுவதும் மோடி அலை வீசி வருகிறது. அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெற செய்து வர வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications