Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக, அதிமுக வலுவாக உள்ள தொகுதிகளில் கமல் மோதியிருக்கலாமே!?

Subscribe to Oneindia Tamil

சென்னை : கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் அமைத்துள்ள கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக கமல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கியது போக, மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் என கமல் அறிவித்துள்ளார். இதில் கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிட முடிவு செய்து, வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டார்.

 அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகள்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகள்

தேர்தலில் தானும் போட்டியிட உள்ளதாக கமல் அறிவித்ததும், அவர் தனது சொந்த ஊரான பரமக்குடியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தனித் தொகுதியாக இருப்பதால் கமல் போட்டியிட முடியாது. சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியையே தேர்வு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. தனது கட்சியின் முதல் பொதுக்கூட்டத்தை மதுரையில் துவங்கி, கட்சி கொடியையும், பெயரையும் அறிவித்ததால் கமலின் தேர்வு மதுரையாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.

 தலைவர்களை எதிர்த்தும் போட்டியில்லை

தலைவர்களை எதிர்த்தும் போட்டியில்லை

திமுக, அதிமுக.,விற்கு மாற்றாக வந்துள்ளதாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, அரசியலில் நுழைந்த கமல், தேர்தலில் திமுக - அதிமுக கட்சிகளின் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் எந்த தொகுதியிலும் களமிறங்கவில்லை. முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் என எந்த முக்கிய தலைவர்களை எதிர்த்தும் போட்டியிடவில்லை.

 திமுக– அதிமுக.,வுடன் போட்டியில்லை

திமுக– அதிமுக.,வுடன் போட்டியில்லை

கமல் போட்டியிட தேர்வு செய்துள்ள கோவை தெற்கு தொகுதியிலும் அவரை எதிர்த்து பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களே களமிறங்குகிறார்கள். பிரதான கட்சிகளான அதிமுக, திமுக வேட்பாளர்கள் போட்டியில்லாமல், கூட்டணி கட்சி வேட்பாளர்களே கமலை எதிர்த்து களத்தில் உள்ளனர்.

 பலத்தை நிரூபிக்க தயங்குகிறாரா கமல்

பலத்தை நிரூபிக்க தயங்குகிறாரா கமல்

திமுக, அதிமுக.,விற்கு மாற்று என சொல்லிக் கொள்ளும் கமல், ஏன் அவ்விரு கட்சிகள் பலமாக இருக்கும் தொகுதிகளில் போட்டியிடாமல் கோவை தெற்கில் போட்டியிடுகிறார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். தனது பலத்தை நிரூபிக்கவும், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை நிரூபிக்கவும் அதிமுக அல்லது திமுக.,வின் கோட்டையாக இருக்கும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெறட்டுமே என்ற விமர்சனமும் நிலவுகிறது.

 கோவை தெற்கை தேர்வு செய்தது ஏன்

கோவை தெற்கை தேர்வு செய்தது ஏன்

234 தொகுதிகளில் தான் போட்டியிடுவதற்கு கோவை தெற்கு தொகுதியை கமல் தேர்வு செய்ய ஒரு முக்கியமான, பலமான காரணம் உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவரான ஆர்.மகேந்திரன், 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் 1.4 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றிருந்தார். ஏறக்குறைய 16 சதவீதம் ஓட்டுக்கள். இதனால் மக்கள் நீதி மய்யத்திற்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்த கோவை தெற்கிலேயே தானும் போட்டியிட கமல் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

 விட்ட இடத்தை பிடிக்க கமல் முடிவு

விட்ட இடத்தை பிடிக்க கமல் முடிவு

லோக்சபா தேர்தலில் 1.4 லட்சத்திற்கும் அதிகமாக ஓட்டுக்களை பெற்றாலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியையே சந்தித்தது. இது சட்டசபை தேர்தல் என்பதால் அதிக ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்த அதே தொகுதியில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றே தீர வேண்டும் என கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் திமுக, அதிமுக வலுவாக உள்ள தென் மாவட்ட தொகுதி ஒன்றில் கமல் போட்டியிட்டிருந்தால்தான் உண்மையான வீரமாக அது இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+