சம உரிமை தந்தவர்.. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கருணாநிதி பெயர் ஏன்.. காரணம் சொன்ன முதல்வர்
சென்னை: பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது கலைஞர் அரசு. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது பெண் இனத்துக்கு திராவிட இயக்கம் வழங்கிய மாபெரும் அதிகாரக் கொடை என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்துவது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு பெரிய திட்டம் இதுவரை உருவாக்கப்பட்டது இல்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.7,000 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. நீதிக்கட்சி காலம் தொடங்கி தற்போது வரை சமூகநீதியானது தமிழ்நாட்டை வழிநடத்தும் கோட்பாடாக உள்ளது.
கலைஞர் ஆட்சியில் பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி அதை சட்டமாகவும் இயற்றியது கலைஞர் அரசின் சாதனை என்று கூறியுள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை கலைஞர் அரசு அமல்படுத்தியது. தொடக்க காலத்தில் இருந்தே தாய்வழிச் சமூக முறைதான் மனிதகுலத்தை வழிநடத்தி வந்திருக்கிறது.
மதம், பழமையான மரபுகளின் பெயரால் பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டிருந்தனர். பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது கலைஞர் அரசு. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை 1989-ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் சட்டமாக்கினார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது பெண் இனத்துக்கு திராவிட இயக்கம் வழங்கிய மாபெரும் அதிகாரக் கொடை என்று அவர் கூறியுள்ளார்.
பெண்களின் உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 1973-ல் ஆண்கள் மட்டுமே பங்கெடுத்து வந்த காவல்துறையில் பெண்களுக்கும் பணி பொறுப்புகள் வழங்கப்பட்டன. சமூகநீதி திட்டங்களிலேயே மாபெரும் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. கார்டு விண்ணப்பித்தோருக்கு 30 நாளில் தமிழக அரசு குட் நியூஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications