சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன ப்ரோட்டோகாலா? சென்னை வரும் மோடிக்கு.. ஹைதராபாத்தில் கேசிஆர் ஏற்படுத்தும் தர்மசங்கடம்.. ஒரே போடு

Google Oneindia Tamil News

சென்னை: இன்று சென்னை வரும் பிரதமர் மோடி அதற்கு முன்பாக ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக செல்கிறார். அங்கிருந்துதான் அவர் சென்னைக்கு வருகிறார்.

இன்று ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்களை பிரதமர் மோடி இந்த நிகழ்வில் தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் மோடி பயணத்தின் போது ரூ31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

வணக்கம்! வாங்க மோடி.. காவி பலூன் பறக்க விட தயாரான பாஜக - தடை விதித்த காவல்துறைவணக்கம்! வாங்க மோடி.. காவி பலூன் பறக்க விட தயாரான பாஜக - தடை விதித்த காவல்துறை

மோடி

மோடி

இந்த பயணத்தின் போது சென்னையில் இருந்து, மதுரை - தேனி அகல ரயில்பாதையை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கிறார். பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் ஆளும் திமுக மூலம் வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது. பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் ஒன்றாக ஒரே மேடையில் நேரு ஸ்டேடியத்தில் தோன்ற இருக்கிறார்கள். பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வரும் முன் ஹைதராபாத் செல்கிறார்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியன் பிஸ்னஸ் ஸ்கூல் தொடங்கி 20 வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் அங்கு நடக்கும் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி அந்த கூட்டத்தை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் இருந்து மாலை 5.10 மணிக்கு சென்னைக்கு வருகிறார். தனி விமானம் மூலம் சென்னை பழைய விமான நிலையத்திற்கு வருகிறார்.

பயண திட்டம்

பயண திட்டம்

அங்கிருந்து ஹெலிகாப்டர் எடுத்துக்கொண்டு ஐஎன்எஸ் அடையாறுக்கு வருவார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகிறார். இங்குதான் பிரதமர் மோடி விழாவில் கலந்து கொள்வார். அங்கு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்க இருக்கிறார். மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் இந்த நிகழ்வில் இடம்பெறுவார்கள். இவருக்கு தமிழ்நாட்டில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

Recommended Video

    Modi Chennai Visit Reasons | PM Modi Tamilnadu Visit | #TamilNadu
    தர்மசங்கடம்

    தர்மசங்கடம்

    ஆனால் ஹைதராபாத்தில் பிரதமர் மோடியை வரவேற்க தெலுங்கானா முதல்வர் கே சந்திர சேகர ராவ் செல்ல மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று கர்நாடகா செல்கிறார். அங்கு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவ கவுடாவை கேசிஆர் சந்திக்கிறார். இதை காரணமாக வைத்து பிரதமர் மோடியை அவர் சந்திக்க மறுத்துள்ளார். பொதுவாக மாநிலத்திற்கு வரும் பிரதமரை முதல்வர் சந்திப்பது அல்லது வரவேற்பது புரோட்டோகால் ஆகும்.

    கேசிஆர் முடிவு

    கேசிஆர் முடிவு

    ஆனால் அதை இரண்டாவது முறையாக கேசிஆர் மீறுகிறார். கடந்த முறையும் தெலுங்கானா வாட்ச் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வரவேற்கவில்லை. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று நேற்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சென்றார். ஆனால் கேசிஆர் செல்லவில்லை.

    இரண்டாவது முறை

    இரண்டாவது முறை

    அப்போதே இது பெரிய சர்ச்சையானது. தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக அணியை உருவாக்க கேசிஆர் முயன்று வருகிறார். இதற்காக மாநிலம் மாநிலமாக சென்று பல்வேறு தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார். அந்த சந்திப்பை காரணம் காட்டி, அவர் பிரதமர் மோடியை மீண்டும் வரவேற்க மறுத்துள்ளார். அதிலும் பிரதமர் மோடியின் வருகையில் மாநிலத்திலேயே இல்லாமல் தர்மசங்கடம் ஏற்படுத்தும் வகையில் கர்நாடகா செல்லும் முடிவை எடுத்துள்ளார். இரண்டாவது முறையாக கேசிஆர் மோடியை வரவேற்காமல் இருப்பது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Why KCR won't be inviting PM Modi amid his trip to Hyderabad and Chennai today? இன்று சென்னை வரும் பிரதமர் மோடி அதற்கு முன்பாக ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக செல்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X