ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்!
சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்திருந்தது. இந்த தோல்விக்கு சோசியல் மீடியாக்களின் போக்கை சரியாக கணிக்காததும் மிக முக்கிய காரணம் என்றும், ஐடி விங் டி.ஆர்.பி ராஜா கையில் இருந்ததால்தான் இப்படி நடந்தது என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கொந்தளித்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சோஷியல் மீடியாக்கள் மிகப்பெரிய ரோல் செய்திருந்தன. திமுக தரப்பிலிருந்து முக்கிய தலைவர்கள் களத்தில் இறங்கி சூறாவளி பிரச்சாரம் செய்தும், தவெகவிலிருந்து வெறும் சோஷியல் மீடியா இன்புளூயன்ஸை மட்டும் வைத்துக்கொண்டு காரியத்தை சாதித்துவிட்டது. திமுகவும் ஐடி விங் விசயத்தில் லேசுபட்ட ஆள் கிடையாது. இருந்தும் எப்படி எலெக்ஷனில் கோட்டை விட்டார் என்பதுதான் தற்போது விவாதமாக மாறியிருக்கிறது.

மா.செ.க்களின் குற்றச்சாட்டு
திமுகவின் ஐடி விங் பலமானதுதான். ஆனால், அது எல்லாம் டிவிட்ரோடு நின்றுவிட்டது. விஜய்க்கு கை கொடுத்தது டிவிட்டர் இல்லை, இன்ஸ்டாகிராம்தான். அப்படி இருக்கையில், ஏன் நம்முடைய ஐடி விங் இன்ஸ்டா பக்கம் போதிய கவனம் செலுத்தவில்லை? என்ற திமுக மா.செ.க்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கெல்லாம் ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜாதான் காரணம் என்றும் கை காட்டியிருக்கிறார்கள்.
ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை தாண்டி யார் போடும் பதிவும் பெரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பூஸ்ட் அப் செய்யப்படுவதில்லை. அதேபோல, மாவட்டத்திற்கு நாங்கள் அவ்வளவு வேலைகளை செய்திருக்கிறோம். அதையெல்லாம் ஐடி விங் மக்களிடத்தில் கொண்டு செல்வதே இல்லை.
மாவட்டத்தின் பணிகள்
மாவட்ட செயலாளர்களும், அவர்களின் ஐடி டீமும் உள்ளூர் மக்களிடத்தில் எந்த அரசியலை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை சொல்லி கொடுக்கவில்லை. சிம்பிளாக சொல்வதெனில் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள். எங்களுக்கு என்ன தெரிந்ததோ அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருந்தோம் என்று டி.ஆர்.பி மீது தலைமையிடத்தில் மா.செக்கள் பற்ற வைத்திருக்கிறார்கள். இதுதான் உன்மையும் கூட.. என்று நிர்வாகிகளும் தங்கள் பங்குக்கு விளக்கமளித்திருக்கிறார்கள்.
சோஷியல் மீடியா அல்காரிதம்
மொத்தமாக மாநில அளவில் திமுகவின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் ஐடி விங் பணி சிறப்பாக இருந்திருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட மாவட்ட அளவில் என்ன செய்யப்பட்டிருக்கிறது? என்பது குறித்து மக்களிடத்தில் எதையும் கொண்டு சேர்க்கவில்லை. குறிப்பாக மாவட்ட செயலாளர்களின் சோஷியல் மீடியா ஆக்டிவிட்டி, இன்ஸ்டாகிராம் அல்காரிதத்தை கணித்து டீம் செயல்பட்டிருக்கிறதா? போன்றவற்றை குறித்து எதையும் ஐடி விங் முறையாக கண்காணிக்கவில்லை என்றும் மா.செ.க்கள் கொந்தளித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் 3 பணிகள்
டி.ஆர்.பி.ராஜா அமைச்சரான பின்னர் ஐடி விங்கை அவர் டீல் செய்த விதம், தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு பதில், மா.செ.க்கள் கை காட்டுபவர்களுக்கு ஐடி விங் பொறுப்பு, இது தவிர மன்னார்குடி தொகுதிக்கு ஓவர் கவனிப்பு என டி.ஆர்.பி.ராஜா முன்று வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ததில் ஐடி விங் பணிகள் பின்னடைவை சந்திருப்பதாக உடன்பிறப்புகள் கூறுகின்றனர். இப்படி தொடர் புகார்கள் வந்திருப்பதால், திமுக தலைமை டி.ஆர்.பி.ராஜா மேல் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications