டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பர்? காத்திருக்கும் கேஎல் ராகுல்.. முடிவுசெய்வாரா ரோகித் சர்மா?
கேஎல் ராகுலுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மிடில் ஆர்டரில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
சென்னை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. ஸ்டார்க் வேகத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சரிந்தாலும், சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் இந்திய அணியை வெற்றிபெற செய்தார்.
பெரிதாக ஃபார்மின்றி தவித்து வந்த கேஎல் ராகுல், நேற்றைய ஆட்டத்தில் 91 பந்துகளுக்கு 75 ரன்கள் குவித்து அசத்தினார். தனியாளாக ஆட்டத்தை இந்திய அணி பக்கம் திருப்பியதோடு, தனது ஆட்டம் என்பதையும் ரசிகர்களுக்கு காட்டினார்.
இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 வகையிலான போட்டிகளில் முதன்மை வீரராக இருக்க வேண்டிய கேஎல் ராகுல், இன்று ஒருநாள் அணியில் மட்டும் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். இதற்கு கேஎல் ராகுல் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடித்ததே காரணமாக உள்ளது. இப்போதும் விக்கெட் கீப்பராக இல்லையென்றால், ஒருநாள் போட்டிகளில் அவர் தேர்வு செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.

கேஎல் ராகுல் நீக்கம்
விராட் கோலியை விடவும் திறமை வாய்ந்த வீரரான கேஎல் ராகுல், தன் மீதான நம்பிக்கை இல்லாமையால் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதுபோல் சர்வதேச வீரர்கள் பலரும் பாதிக்கப்பட்டிருந்தாலும், கேஎல் ராகுலின் பாதிப்பு இந்திய அணியை அதிகமாக பாதிக்கிறது. இதனால் டெஸ்ட் மற்றும் டி20 அணியில் இருந்து கேஎல் ராகுலை இந்திய நிர்வாகம் நீக்கியது.

இந்திய மிடில் ஆர்டர்
இருப்பினும் கேஎல் ராகுல் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கேஎல் ராகுல் 5வது வீரராக வருவதால், டாப் ஆர்டர் சரிந்தாலும் எந்தவித பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, கேஎல் ராகுல் ஆகியோர் இந்திய அணியை எளிதாக மீட்டுவிடுகின்றனர்.

வெளுத்து வாங்கும் கேஎல் ராகுல்
குறிப்பாக கேஎல் ராகுல் தேவைக்கு ஏற்ப பேட்டிங் செய்யும் வித்தை அறிந்தவர் என்பதால், சேஸிங்கின் போது கேஎல் ராகுலின் முழு திறமையும் வெளிப்படுகிறது. டாப் ஆர்டர் சரிந்தால் நிதானமாக ரன்கள் சேர்ப்பது, நிலைத்து நின்ற பின் அதிரடிக்கு மாறுவது, எந்த பந்துவீச்சாளர்களையும் வெளுத்து வாங்கும் ராகுலின் திறன் ஆகியவை இந்திய அணிக்காக சிறந்த பயனாக உள்ளது,.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு, விக்கெட் கீப்பங் திறனையும் வளர்த்துக் கொண்டுள்ளார். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இளம் வீரரான கேஎஸ் பரத்திற்கு பதிலாக கேஎல் ராகுலை பரிசோதித்து பார்க்கலாம். ஏனென்றால் இங்கிலாந்தின் ஓவலில் சுழற்பந்துவீச்சு பெரிதாக எடுபடாது என்பதால், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் சமாளிப்பார்.

டெஸ்ட் கிரிக்கெட்
அதேபோல் இங்கிலாந்து மைதானங்களில் கேஎல் ராகுல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, எக்ஸ் பேக்டர் வீரராகவும் கேஎல் ராகுல் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அல்லாமல், மிடில் ஆர்டரில் சில வாய்ப்புகளை கேஎல் ராகுலுக்கு வழங்கலாம் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications