"தர்ம சங்கடம்".. ஸ்டாலின் அழைத்தும் ஆப்சென்ட் ஆன மம்தா, கேசிஆர்! எல்லாத்துக்கும் "அவர்தான்" காரணமாம்
சென்னை: நேற்று முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் ஆகியோர் கலந்து கொள்ளாதது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று உங்களில் ஒருவன் என்ற தனது சுயசரிதை புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிட்டார். ஸ்டாலினின் அரசியல் பயணம், வாழ்க்கை பயணம், மிசா மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் ஸ்டாலினின் இளமை காலம் குறித்த விவரங்களும் இதில் இடம்பெற்று உள்ளன.
நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார்.

ராகுல் காந்தி
இந்த விழாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்டார். அதேபோல் கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்த விழாவில் கலந்து கொண்டார். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திதான் இந்த விழாவில் புத்தகத்தை திறந்து வைத்து பேசினார்.

மம்தா பானர்ஜி
இந்த விழாவிற்கு கடந்த 3 வாரமாக திமுக சார்பில் பல்வேறு திட்டங்கள் போடப்பட்டன. சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான அழைப்பும் திமுக தரப்பில் இருந்து சென்றதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் எல்லாம் தற்போது பாஜகவிற்கு எதிராக கூட இருக்கின்றன.

கே சந்திரசேகர ராவ்
தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கும் முனைப்பில் உள்ளது. இதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கேசிஆர் ஆகியோருக்கு போன் செய்து இருந்தார். மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டிற்கு இவர்களை அழைத்து இருந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் தரப்பில் இருந்து மம்தா, கேசிஆர் இருவருக்கும் அழைப்பு சென்றதாக கூறப்படுகிறது.

வரவில்லை
ஆனால் இவர்கள் இருவருமே வேறு வேறு காரணங்களை சொல்லி இந்த நிகழ்விற்கு வராமல் ஆப்சென்ட் ஆகியுள்ளார். மம்தா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி வரவில்லை என்றும், கேசிஆர் சில முக்கியமான அலுவல் கூட்டங்களை காரணம் காட்டி வரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஜெகன் மோகன் ரெட்டி தொடக்கத்தில் இருந்தே இந்த நிகழ்வில் கலந்து கொள்வது சந்தேகமாக இருந்தது. இரண்டு முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் திமுக தரப்பு கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

புறக்கணிப்பு காரணம் என்ன?
ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து மம்தா, கேசிஆர் இருவரும் ஸ்டாலினிடம் முன்பே தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. புத்தக வெளியீட்டு விழாவிற்கான வாழ்த்தை தெரிவித்துவிட்டு, தனிப்பட்ட வகையில் கலந்து கொள்ள முடியாததற்கான வருத்தத்தையும் இவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இங்கு புத்தகத்தை வெளியிட்டதை ஏற்காமல் மம்தா, கேசிஆர் இந்த நிகழ்வை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் மோதல்
காங்கிரஸ் ராகுல் வருகையை இவர்கள் விரும்பாததே காரணம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் கேசிஆர் இருக்கிறார். தேசிய அளவில் மாநில கட்சிகளை இணைக்கும் முனைப்பில் அவர் உள்ளார். அதே சமயம் மம்தா பானர்ஜி கடந்த வருடம் சோனியா, ராகுலுடன் பேசி அது வேலைக்கு ஆகவில்லை என்றதும், காங்கிரஸ் தனி வழியில் போகலாம், நாங்கள் தனி வழியில் போகிறோம் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.

தேசிய கூட்டணி
தேசிய அளவில் மாநில கட்சிகளின் கூட்டணியில் காங்கிரசை சேர்க்கும் விருப்பம் இவருக்கு இல்லை. இதனால்தான் இரண்டு பேருமே ராகுல் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்த நிகழ்வில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்து இருந்தால் அது மற்ற தலைவர்களுக்கு தர்ம சங்கடமாக இருக்கும். ஏற்கனவே ஸ்டாலின் கடந்த 2019ல் இப்படி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

திமுக தரப்பு விளக்கம்
மம்தா, கேசிஆர் இருக்கும் மேடையில் ஸ்டாலின் இப்படி அறிவித்தால் அது பெரிய திருப்பமாக அமையும். அது போன்ற தர்ம சங்கடங்களை தவிர்க்கும் பொருட்டே இவர்கள் விழாவிற்கு வரவில்லை. மற்றபடி கேசிஆர், மம்தா இருவரும் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட வாழ்த்துக்களை கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக தரப்பிலோ, அதெல்லாம் காரணம் இல்லை. இரண்டு பேருமே பிஸி. இதற்கான காரணத்தையும் சொல்லிவிட்டனர். அடுத்த சில வாரங்களில் மாநில முதல்வர்கள் சந்திப்பு நடக்க உள்ளதால் இந்த மீட்டிங்கிற்கு அவர்கள் வரவில்லை என்று கூறுகிறார்கள்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications