வட மாநில தொழிலாளர்கள் ஏன் தமிழ்நாடு வருகிறார்கள் தெரியுமா.. பீகாரில் ஏன் தொழிற்சாலைகள் இல்லை?
வட மாநில தொழிலாளர்கள் தென் மாநிலங்களுக்கு இப்படி வருகிறார்களே என கேட்டிருப்போம். ஆனால் ஏன் அவர்கள் இங்கு வருகிறார்கள் என யாராவது கேட்டிருப்போமா?
சென்னை: தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக எழுந்த சர்ச்சை தற்போதுதான் ஓய்ந்துள்ளது. போலீஸார் நடத்திய விசாரணையில், இவ்வாறு பரப்பப்பட்ட செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், அரசியல் உள்நோக்கத்துக்காகச் சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற வதந்தியை தொடர்ந்து பரப்பி வந்ததும் தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பாக பீகார் பாஜக நிர்வாகி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள்.
இது எல்லாம் முடிந்துபோன சமாச்சாரம். இப்போது விஷயத்துக்கு வருவோம். வட மாநிலங்களில் இருந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இப்படி சாரை சாரையாகத் தொழிலாளர்கள் வருவதற்கு என்ன காரணம்? சொந்த மண்ணையும், குடும்பத்தையும் பிரிந்து ஏன் இங்கு வந்து அவர்கள் கஷ்டப்பட வேண்டும்? மண்ணின் மைந்தர்களை வட மாநிலங்கள் கைவிட்டுவிட்டதா? சில புள்ளிவிவரங்களுடன் இப்போது பார்க்கலாம்.

வட மாநிலங்கள் - ஓர் அரசியல் சக்தி
இந்தியாவில் இப்போது மட்டுமல்ல என்றைக்குமே வட மாநிலங்கள்தான் தேசிய அரசியலில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதற்கு முக்கியமான காரணம் இந்தி பேசும் மாநிலங்கள்தான். அதாவது, இந்திய அரியணையில் யார் அமர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக இந்தி பேசும் மாநிலங்கள் இருக்கின்றன. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய 5 மாநிலங்கள் இந்தியாவின் அரசியலை நிர்ணயிக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த மாநிலங்களில் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே மத்தியில் ஆட்சியமைக்க முடியும் என்பது வரலாறு.

இந்தி மாநிலங்கள் vs தமிழ்நாடு
இந்த 5 மாநிலங்களின் மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா? 52 கோடி. அதாவது, இந்த 5 மாநிலங்களை உள்ளடக்கி ஒரு தனி நாடாக உருவாக்கினால் உலகிலேயே 3-வது பெரிய நாடு என்ற அங்கீகாரம் இதற்குக் கிடைத்திருக்கும். ஆனால், இத்தனை கோடி மக்கள்தொகை கொண்ட இந்த 5 மாநிலங்களில் உள்ள மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கையானது, தமிழ்நாடு என்ற ஒற்றை மாநிலத்தில் இருக்கும் தொழிற்சாலையின் எண்ணிக்கைக்குச் சமம். தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகள்தான் மத்திய மற்றும் வட இந்திய மக்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.

எத்தனை தொழிற்சாலைகள்?
2017-18-ம் நிதியாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, பீகாரில் 3,461 தொழிற்சாலைகள் இருக்கின்றன. சத்தீஸ்கரில் 3,352 தொழிற்சாலைகளும், உத்தரப்பிரதேசத்தில் 15,830, ஜார்கண்டில் 2,866, மத்தியப் பிரதேசத்தில் 4,553 தொழிற்சாலைகள் இருக்கின்றன. அதேவேளையில், தமிழ்நாட்டில் மட்டும் 37,787 தொழிற்சாலைகள் இருக்கின்றன. அதேபோல, ஆந்திரா, கர்நாடகாவில் முறையே 16,296 மற்றும் 13,518 தொழிற்சாலைகளும் இருக்கின்றன. தொழில்துறையில் காணப்படும் இந்த மிகப்பெரிய வித்தியாசம்தான், வட மாநிலத்தவர்கள் இங்குப் படையெடுப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

என்ன காரணம்?
இந்திய அரசியலில் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் வட மாநிலங்களில், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறது? இதற்குக் காரணம் அங்குள்ள மக்கள் அல்ல. அரசியல் கட்சிகள்தான். மக்களை வைத்து அவை அரசியல் செய்ததே தவிர.. மக்களுக்காக அவை அரசியல் செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். தொழிற்சாலைகள் என்பது மக்களை முதலீடாகக் கொண்டு அமைக்கப்படுபவை. எங்கு ஆட்சி நிர்வாகம் சிறப்பாக இருக்கிறதோ.. எங்குச் சட்டவிதிகள் முறையாகக் கடைப்பிடிக்கிறதோ, எங்குச் சிறப்பான கல்வியும், சுகாதாரமும் இருக்கிறதோ அங்குதான் தொழிற்சாலைகளை அமைக்க முதலாளிகள் விரும்புவார்கள்.

வதந்தியை விடுங்கள்.. கேள்வி கேளுங்கள்..
அதன்படி, மேற்குறிப்பிட்ட அனைத்து குறியீடுகளிலும், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன. இதுவே தமிழ்நாட்டில் அதிகப்படியான தொழிற்சாலைகளும், தொழிற்பேட்டைகளும் அமைவதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது. எனவே, வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவதற்குப் பதிலாக, ஏன் நமது மாநிலங்களில் தமிழ்நாட்டில் இருக்கும் அளவுக்குத் தொழிற்சாலைகள் இல்லை எனக் கேள்வியெழுப்பலாம்.
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications